என் மலர்
விளையாட்டு
- இன்று நடந்த அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ், டியாபோ உடன் மோதினார்.
- இதில் அல்காரஸ் டியாபோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ உடன் மோதினார்.
இந்த போட்டியில் 6-7, 6-3, 6-3, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் டியாபோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லோஸ் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கார்லோஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோத உள்ளார்.
- தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார்.
- ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.
முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடக்கிறது.
இதன் தகுதி சுற்று போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் இந்தியாவின் சாய்சமர்தி, லட்சுமி பிரபா, சவ்ஜன்யா பவி செட்டிரியா பாட்டியா ருதுஜா போசாலி உள்பட 24 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள். தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார். இதில் சாய் சமர்தி 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.
மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் சவ்ஜன்யா பவிசெட்டி, ஜப்பானின் கியோகா ஓஹமுகரவுடனும், லட்சுமி பிரபா ஜப்பானின் யுகி நைய்டோவுடனும் மோதினர்.
- இரு அணிகளும் சமபலம் வாய்ந்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது. 20 ஓவரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
லீக் ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இதில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.
நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று முடிந்தது. இலங்கை தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா (ஒரு வெற்றி 2 தோல்வி), ஆப்கானிஸ்தான் (3 தோல்வி) அணிகள் வெளியேற்றப்பட்டன.
ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஜகமது ரிஸ்வான், பஹர் ஓமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர்.
ஆல்- ரவுண்டர் முகமது நலாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று நடந்த 'சூப்பர் 4' சுற்றில் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்று உள்ளது.
இலங்கை அணி பேட்டிங் கில் நிசாங்கா, குசல் மென்டிஸ், பானுகா ராஜ பக்சே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளார். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணாரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர்.
வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும் (1986, 1997, 2004, 2008, 2014), பாகிஸ்தான் 2 முறையும் (2000, 2012) வென்றுள்ளன.
அதிகபட்சமாக இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டி ஆகும்.
சிட்னி:
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
2013-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,402 ரன்கள் எடுத்துள்ளார்.
- அரையிறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷிய வீரரை எதிர்கொண்டார்.
- இதில் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இதில், நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷிய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இந்த போட்டியில் முதல் இரு செட்களை ரூட் கைப்பற்றினார்.
மூன்றாவது செட்டை கச்சனோவ் வென்றார். நான்காவது சுற்றை ரூட் மீண்டும் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், காஸ்பர் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- பாகிஸ்தான் வீரரும், ஆப்கானிஸ்தான் வீரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- அவர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
துபாய்:
ஆசிய கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4-வது போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.
இதற்கிடையே, இப்போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணியின் 19-வது ஓவரை அந்த அணியின் பரீட் அகமது வீசினார். பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி களத்தில் இருந்தார். 18.5 ஓவரை வீசியபோது ஆசிப் அலி அவுட்டானார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் அகமது கொண்டாடியபோது, ஆட்டமிழந்த ஆசிப் அலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு வீரர்களின் வாக்குவாதத்தால் மைதானத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், போட்டியின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் பரீட் அகமது ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
- முதலில் விளையாடிய பாகிஸ்தான் 121 ரன்களுக்கு சுருண்டது.
- இலங்கை தரப்பில் நிசாங்கா 55 ரன்கள் குவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 30 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ரிஸ்வான் 14 ரன்னுடன் வெளியேறினார். பகார் ஜமான், இப்திகர் அகமது, தலா 13 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். முகமது நவாஸ் 26 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களையும், மகீஸ் தீட்க்சனா, பிரமோத் மதுஷன் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். தனன்யா டிசெல்வா, கருணாரத்னே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து விளையாடிய இலங்கை அணியில் குசால் மெண்டீஸ், குணதிலகா டக் அவுட்டானார்கள். நிசாங்கா 55 ரன்கள் குவித்தார்.
பானுகா ராஜபக்சே 24 ரன் எடுத்து அவுட்டானார். தாசுன் ஷனகா 21 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 17 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்திற்கு இந்த இரு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்தது.
- பாகிஸ்தான் அணியில் அதிபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 30 ரன் எடுத்தார்.
- இலங்கை தரப்பில் அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்த இரு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறி விட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 30 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ரிஸ்வான் 14 ரன்னுடன் வெளியேறினார். பகார் ஜமான், இப்திகர் அகமது, தலா 13 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.
முகமது நவாஸ் 26 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களையும், மகீஸ் தீட்க்சனா, பிரமோத் மதுஷன் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். தனன்யா டிசெல்வா, கருணாரத்னே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடுகிறது.
- டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா.
- அவரது தொடர் வெற்றி, இந்திய தடகளத்துறை மேம்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
சுரிட்ச்:
சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச் சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.
இதன் மூலம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார். இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையும் நீரஜ் சோப்ராவிற்கு கிடைத்துள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ராவை பிரதமர் பாராட்டியுள்ளார். டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா கோப்பையை வென்றதன் மூலம் இந்த தொடர் வரலாற்றில் இந்தியர் ஒருவர் முதல் முறையாக சாதனையை படைத்திருக்கிறார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்று வரலாறு படைத்த முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள், அவர் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.
அவரது தொடர் வெற்றிகள் இந்திய தடகளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு செயல்களை வெளிக் காட்டுகின்றன. இவ்வாறு பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேபோல் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர், இது அவரது வெற்றி மகுடத்தில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு இறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- 28 வயதான ஜபேர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
- 2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டு மொத்தத்தில் 3-வது தடவையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள ஆன்ஸ் ஜபேர் (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினார்கள்.
இதில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17-ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப்போட்டி தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 6 நிமிட நேரம் தேவைப்பட்டது.
28 வயதான ஜபேர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் அவர் இறுதிப் ஆட்டத்துக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார். தற்போது 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தோல்வியால் கார்சியாவின் முதல் இறுதிப்போட்டி கனவு கலைந்தது.
மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகாஸ்வியாடெக் (போலந்து),-ஷபலென்கா (பெலாரஸ்) மோதினார்கள்.
6-வது வரிசையில் உள்ள ஷபலென்கா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் ஸ்வியாடெக் சுதாரித்து ஆடி தொடர்ச்சியாக 2 செட்டையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 3-6, 6-1, 6-4.
21 வயதான அவர் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல் தடவையாக முன்னேறி உள்ளார். 2 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வியாக்டெக் ஒட்டு மொத்தத்தில் 3-வது தடவையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
ஷபலென்காவின் இறுதிப்பேரட்டி கனவு 3-வது முறையாக தகர்ந்துள்ளது. இறுதி போட்டியில் ஸ்வியாடெக்-ஆன்ஸ் ஜபேர் மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே)-கரென் கச்சனோவ் (ரஷியா), கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-பிரான் செஸ்டியாபோ (அெமரிக்கா) மோதுகிறார்கள்.
- விராட் கோலி 3-வது வரிசையில் சிறப்பாக ஆடுவதால் அதில் தொடர்ந்து விளையாடுவார்.
- 2 அல்லது 3 இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்து விட்டால் நம்பிக்கை வந்து விடும்.
துபாய்:
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது.
முன்னாள் கேப்டன் விராட் கோலி 1000 நாட்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 61 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 6 சிக்சர்) கேப்டன் லோகேஷ் ராகுல் 41 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்ராகிம் சர்தான் அதிகபட்சமாக 64 ரன் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அஸ்வின், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணி பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்று இருந்ததால் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது. எனவே ஆறுதல் வெற்றி கிடைத்தது.
நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை இதனால் லோகேஷ் ராகுல் கேப்டனாக பணியாற்றினார். வெற்றி குறித்து ராகுல் கூறியதாவது:-
பெரிய காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் திரும்பி இருக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம்.
விராட்கோலி ரன்களை குவிப்பது இந்திய அணிக்கு பெரிய போனஸ் ஆகும். இதன் மூலம் அணி மேலும் பலம் பெற்று திகழும். அவர் பேட்டிங் செய்யும் விதம் மகிழ்ச்சியை அளித்தது. 2 அல்லது 3 இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்து விட்டால் நம்பிக்கை வந்து விடும்.
விராட் கோலி 3-வது வரிசையில் சிறப்பாக ஆடுவதால் அதில் தொடர்ந்து விளையாடுவார். 3-வது பேட்டிங் வரிசையில் அவரால் ரன்களை குவிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சூப்பர்-4 சுற்றில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் இறுதிப் போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக இது அமையும்.
- சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
- இறுதிபோட்டி வாய்ப்பை இழந்த இந்தியா 1 வெற்றியுடன் 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் 4 அணிகளும் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும்.
முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன. இந்த இரு அணிகளும் தலா 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.
இறுதிபோட்டி வாய்ப்பை இழந்த இந்தியா 1 வெற்றியுடன் 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே இந்த இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு முன்னேறிவிட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.






