search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சூப்பர் 4 சுற்று கடைசி ஆட்டம்:  இலங்கைக்கு 122 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
    X

    பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதல் 

    சூப்பர் 4 சுற்று கடைசி ஆட்டம்: இலங்கைக்கு 122 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் அணியில் அதிபட்சமாக கேப்டன் பாபர் ஆசம் 30 ரன் எடுத்தார்.
    • இலங்கை தரப்பில் அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்த இரு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறி விட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

    இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 30 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ரிஸ்வான் 14 ரன்னுடன் வெளியேறினார். பகார் ஜமான், இப்திகர் அகமது, தலா 13 ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.

    முகமது நவாஸ் 26 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட்டானார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசரங்கா டிசெல்வா 3 விக்கெட்களையும், மகீஸ் தீட்க்சனா, பிரமோத் மதுஷன் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். தனன்யா டிசெல்வா, கருணாரத்னே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடுகிறது.

    Next Story
    ×