search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் கோலியின் ரன்குவிப்பு அணிக்கு மிகப்பெரிய பலம்- லோகேஷ் ராகுல்
    X

    விராட் கோலியின் ரன்குவிப்பு அணிக்கு மிகப்பெரிய பலம்- லோகேஷ் ராகுல்

    • விராட் கோலி 3-வது வரிசையில் சிறப்பாக ஆடுவதால் அதில் தொடர்ந்து விளையாடுவார்.
    • 2 அல்லது 3 இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்து விட்டால் நம்பிக்கை வந்து விடும்.

    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி 1000 நாட்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 61 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 6 சிக்சர்) கேப்டன் லோகேஷ் ராகுல் 41 பந்தில் 62 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இப்ராகிம் சர்தான் அதிகபட்சமாக 64 ரன் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அஸ்வின், தீபக் ஹூடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்திய அணி பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்று இருந்ததால் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது. எனவே ஆறுதல் வெற்றி கிடைத்தது.

    நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை இதனால் லோகேஷ் ராகுல் கேப்டனாக பணியாற்றினார். வெற்றி குறித்து ராகுல் கூறியதாவது:-

    பெரிய காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் திரும்பி இருக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம்.

    விராட்கோலி ரன்களை குவிப்பது இந்திய அணிக்கு பெரிய போனஸ் ஆகும். இதன் மூலம் அணி மேலும் பலம் பெற்று திகழும். அவர் பேட்டிங் செய்யும் விதம் மகிழ்ச்சியை அளித்தது. 2 அல்லது 3 இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்து விட்டால் நம்பிக்கை வந்து விடும்.

    விராட் கோலி 3-வது வரிசையில் சிறப்பாக ஆடுவதால் அதில் தொடர்ந்து விளையாடுவார். 3-வது பேட்டிங் வரிசையில் அவரால் ரன்களை குவிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சூப்பர்-4 சுற்றில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் இறுதிப் போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக இது அமையும்.

    Next Story
    ×