என் மலர்
விளையாட்டு
- தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
- இந்த ஒருநாள் தொடரில் விவிஎஸ் லட்சுமன் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இறுதி போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மோத உள்ளது. முதலில் இந்தியா 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா உள்பட டி20 போட்டிகளில் விளையாடும் முக்கிய வீரர்களுக்கு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லட்சுமன் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஒரு வைடு விக்கெட் கீப்பரிடம் சிக்காமல் பவுண்டரிக்கும் ஓடியது.
- முதல் பந்தை சரியாக வீசுவதற்கு அவர் 6 பந்து எடுத்துக் கொண்டார்.
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை துவம்சம் செய்து இலங்கை அணி 6-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.
இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இலங்கையின் பந்து வீச்சில் தொடக்கம் வினோதமாக இருந்தது. முதல் பந்து வீசுவதற்கு முன்பே இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா 9 ரன் விட்டுக்கொடுத்தார்.
அதாவது முதல் பந்தை நோ-பாலாக வீச அடுத்த பந்து பிரீஹிட்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு வரிசையாக வைடாக வீசித் தள்ளினார்.
ஒரு வைடு விக்கெட் கீப்பரிடம் சிக்காமல் பவுண்டரிக்கும் ஓடியது. முதல் பந்தை சரியாக வீசுவதற்கு அவர் 6 பந்து எடுத்துக் கொண்டார். அதன் பிறகு கட்டுக்கோப்புடன் வீசிய அவர் முதல் ஓவரில் மொத்தம் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஐந்தாவது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) மோதினார்கள்.
முதல் செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ரூட் 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். இதனால் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்கு அந்த செட் சென்றது. இதில் அல்காரஸ் 7-1 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
அல்காரஸ் அதே உத்வேகத்துடன் ஆடி 4-வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்கோர் 6-4 , 2-6, 7-6 (7-1 ), 6-3. இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 20 நிமிட நேரம் தேவைப்பட்டது.
19 வயதான அல்காரஸ் முதல்முறையாக கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபனில் கால்இறுதியில் நுழைந்ததே இவரது சிறந்த நிலையாக இருந்தது.
அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் அல்காரஸ் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். குறைந்த வயதில் 'நம்பர் 1' இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதன்மூலம் நம்பர் ஒன் கனவு நிறைவேறியது.
கேஸ்பர் ரூட்டின் முதல் கிராண்ட்சிலாம் கனவு இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் கலைந்து போனது.
- அமெரிக்க ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
- இதில் நார்வேயின் காஸ்பர் ரூட்டை ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வீழ்த்தினார்.
நியூயார்க்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.
இதில், கார்லோஸ் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 158 ரன்னில் ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், ரபாடா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
40 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்னும், எர்வி 26 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலே அரை சதமடித்தார். அவர் 57 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. வெற்றி பெற இன்னும் 33 ரன்களே தேவைப்படுவதால், இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- ஆஸ்திரேலிய அணி 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
- நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.
கெய்ர்ன்ஸ்:
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அவர் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லபுஸ்சேன் 52 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 2 விக்கெட்டும், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், சான்ட்னர் தலா 1 விக்கெட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 47 ரன்கள் எடுத்தார்.ஜேம்ஸ் நீஷம் 36 ரன்னும், பின் ஆலன் 35 ரன்னும், சாண்ட்னர் 30 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஆகியவை அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர்.
இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இலங்கை வீரர் பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பங்கேற்றுள்ளன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர் குஷல் மெண்டிஸ் டக் அவுட்டானார். மற்றொரு வீரர் நிசங்கா 8 ரன்னுடன் வெளியேறினார். குணதிலகா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.

தனஞ்செய டிசெல்வா 28 ரன் அடித்தார். அதிரடி காட்டிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் தசுன் சனகா 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஹசரங்கா டிசெல்வா 36 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கருணாரத்னே 14 ரன் அடித்தார்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரீஸ் ராவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். நசீம் ஷா, சதாப்கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்குகிறது.
- இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
- நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவன ஆதரவுடன் 70- வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.
லீக் மற்றும் நாக்- அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமன வரி, ஐ.ஓ.பி.செயின்ட் ஜோசப் உள்பட 32 அணிகளும், பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு போலீஸ், பி.கே.ஆர்.(கோபி) எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.ஏ.டி, ஜி.கே.எம்., ஐ.சி.எப். தமிழ்நாடு தபால் துறை பாரதியார் (ஆத்தூர்) செயின்ட் மேரிஸ், ராணி மேரி கல்லூரி உள்பட 49 அணிகளும் பங்கேற்கின்றன.
இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.
- நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடினோம்.
- நான் விளையாடியதை விட அதிக போட்டிகளில் அவர் விளையாடுவார் .
ஆசிய கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தார். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஒப்பீட்டு செய்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் காங்குலி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
ஒரு வீரரின் திறமையின் அடிப்படையில் ஒப்பீடு இருக்க வேண்டும். அவர் (கோலி) என்னை விட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம், நாங்கள் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம் .
நான் எனது தலைமுறையில் விளையாடினேன். அநேகமாக. நான் விளையாடியதை விட அதிகமாக போட்டிகள் அவர் விளையாடுவார் . தற்போது, நான் அவரை விட அதிகமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் அவர் அதை கடந்து விடுவார். அவர் அபாரமானவர். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
- ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
- ஆசிய கோப்பையை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இலங்கை தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பகர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் முகமது நவாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளது.
இலங்கை அணி பேட்டிங்கில் நிசாங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்ச ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர். வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும்.
இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
- 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்கை சந்தித்தார்.
- இதில் ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன்பட்டம் வென்றார்.
நியூயார்க்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபேர், போலந்தின் இகா ஸ்வ்யாடெக்கை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.






