என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் இலங்கை மோதல்"

    • முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர்.

    இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

    இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இலங்கை வீரர் பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பங்கேற்றுள்ளன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர் குஷல் மெண்டிஸ் டக் அவுட்டானார். மற்றொரு வீரர் நிசங்கா 8 ரன்னுடன் வெளியேறினார். குணதிலகா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். 


    தனஞ்செய டிசெல்வா 28 ரன் அடித்தார். அதிரடி காட்டிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் தசுன் சனகா 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஹசரங்கா டிசெல்வா 36 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கருணாரத்னே 14 ரன் அடித்தார்.

    இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரீஸ் ராவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். நசீம் ஷா, சதாப்கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்குகிறது. 

    • ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
    • ஆசிய கோப்பையை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இலங்கை தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பகர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் முகமது நவாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

    இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளது.

    இலங்கை அணி பேட்டிங்கில் நிசாங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்ச ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர். வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும்.

    இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

    ×