என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை முடிவடைந்தவுடன் மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்காவின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார்.
- அவர் தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான பவுச்சர் டிசம்பர் 2019 முதல் பயிற்சியாளர் பதவியை வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை முடிவடைந்தவுடன் மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்காவின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார். அவர் தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக ராஜினாமா செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
பவுச்சரின் விலகல் குறித்து தென் ஆப்பிரிக்கா தலைமை நிர்வாக அதிகாரி ஃபோலெட்சி மொசெகி பேசியதாவது:-
கடந்த மூன்று ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செலவு செய்த நேரம் மற்றும் முயற்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
அவர் செய்த பணிக்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் அவரது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
மார்க் பவுச்சர் எங்களைவிட்டு பிரிவது வருத்தமாக உள்ளது. ஆனாலும் அவரது விருப்பத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மார்க் ஒரு ஜாம்பவான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகக்கோப்பை அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீரர் அஸ்வின் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
- காயம் காரணமாக ஜடேஜா உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை.
சென்னை:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீரர் அஸ்வின் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். காயம் காரணமாக ஜடேஜா உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை.
20 ஓவர் உலகக்கோப்பையில் இடம் பெற்றுள்ள அணி வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), வீராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, ஆர்.அஸ்வின், யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
மாற்று வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட உள்ளதால் 37 வயதான தினேஷ் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதன் மூலம் தனது கனவு நனவானதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைத்தது. 20 ஓவர் அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
11 பேர் கொண்ட அணியில் இடம் பெற தினேஷ் கார்த்திக்குக்கும், ரிஷப் பண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.
- இந்திய வீராங்கனை கர்மன்தண்டி முதல் சுற்றில் 4-6, 6-4, 6-3 என்ற கணக்கில் பிரான்சின் பேக்கியூட்டை அதிர்ச்சி கரமாக வீழ்த்தினார்.
- 5-வது வரிசையில் உள்ள ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் ஜிம்மென்ஸ் விக்டோரியாவை வென்றார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிது.
சென்னையில் முதல் முறையாக நடைபெறும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
இந்த போட்டின் 6-வது தர வரிசையில் இருக்கும் சீனாவை சேர்ந்த கியாங் வாங் முதல் சுற்றில் பெல்ஜியத்தை சேர்ந்த யாமினா விக்மேயரை எதிர்கொண்டார்.
இதில் வாங் 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 2-வது ரவுண்டில் தகுதிச் சுற்று வீராங்கனையான ஹிபினோவை (ஜப்பான்) சந்திக்கிறார்.
ஹிபினோ தொடக்க சுற்றில் மற்றொரு தகுதி சுற்று வீராங்கனையான ஜானா பெட்டை (செக்குடி யரசு) 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
7-ம் நிலை வீராங்கனையான ரெபேக்கா மரினோ (கனடா)7-5, 6-2 என்ற கணக்கில் அனா பிஸின்கோ வாவை (ரஷியா) தோற்கடித்தார். அவர் அடுத்த சுற்றில் போலந்தை சேரந்த கதர்சினா கவாவை எதிர் கொண்டார். சுவா 6-4, 6-3 என்ற கணக்கில் அஸ்ட்ரா சர்மாவை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.
5-வது வரிசையில் உள்ள ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் ஜிம்மென்ஸ் விக்டோரியாவை வென்றார். அவர் 2-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த லிண்டாவை எதிர் கொள்கிறார். லிண்டா 4-6, 6-1, 6-3 என்ற கணக்கில் லியாங்கை (சீன தைபே) தோற்கடித்தார்.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கர்மன் கவூர் தண்டி
இந்திய வீராங்கனை கர்மன்தண்டி முதல் சுற்றில் 4-6, 6-4, 6-3 என்ற கணக்கில் பிரான்சின் பேக்கியூட்டை அதிர்ச்சி கரமாக வீழ்த்தினார். அவர் 2-வது சுற்றில் யூஜின் பவுச்சர்ட்டை (கனடா) சந்திக்கிறார்.
இந்த போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா), ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியா கசனோவை இன்று சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான அங்கீதா ரெய்னா தொடக்க சுற்றில் 4-வது வரிசையில் இருக்கும் தாட்ஜினா மரியாவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.
- தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
சென்னை:
33-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் 3 நாட்களாக நடந்தது. 14,16,18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் நடந்த போட்டியில் தமிழக அணி சார்பில் 100 சிறுவர்களும் , 98 சிறுமிகளும் ஆக மொத்தம் 198 பேர் பங்கேற்றனர்.
இதில் தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 8 பிரிவுகளில் தமிழ்நாடு 6 பிரிவில் முதல் இடத்தை பிடித்து முத்திரை பதித்தது.
14 வயதுக்குட்பட்ட சிறுமியரில் கேரளாவும், சிறுவர் பிரிவில் தெலுங்கானாவும் முதல் இடத்தை பிடித்தன. மற்ற அனைத்து பிரிவுகளிலும் தமிழகம் ஆதிக்கம் செலுத்தியது.
பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.
- 3 டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ம் தேதியும், 3-வது போட்டி 25-ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
மேலும், இத்தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடர் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6ல் தொடங்கி 11 வரை நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
- ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.
- சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயர்களை ஐ.சி.சி. சமீபத்தில் பரிந்துரைத்தது. சிறந்த வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். சிறந்த வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக்ராத், பெத் மூனி மற்றும் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ரசிகர்கள் வாக்களிப்பின் அடிப்படையில் இதன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி.யின் மாதாந்திர சிறந்த வீரர் வென்ற முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை சிக்கந்தர் ராசா பெற்றுள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் தஹ்லியா மெக்ராத் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- அந்த அணியின் ஒல்லி ராபின்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், ரபாடா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
40 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்னும், எர்வி 26 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலே அரை சதமடித்தார். அவர் 57 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அலெக்ஸ் கேரி 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜாக் கிராலே 69 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது இங்கிலாந்தின் ஒல்லி ராபின்சனுக்கு அளிக்கப்பட்டது.
தொடர் நாயகன் விருது இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- டி 20 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
- காத்திருப்போர் பட்டியலில் முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய்
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23ந் தேதி எதிர் கொள்கிறது. இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் ஹர்ஷல் படேல் அணியில் இடம் பிடித்துள்ளார். தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் வைக்கப்பட்டுள்ளனர்.
20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பின்வருமாறு: ரோகித் ஷர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்
- இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
- இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது. 2-வது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் 2-வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.
இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அனைவரையும் கவரும் வகையில் ஒரு செயலைச் செய்தார். மைதானத்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் கம்பீர் இலங்கை நாட்டின் கொடியை கையில் எடுத்து அசைத்து மகிழ்ச்சியை பகீர்ந்து கொண்டார். கம்பீர் இலங்கைக் கொடியை கையில் எடுத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அவருக்காக பலத்த கரகோஷம் எழுப்பத் தொடங்கியது. இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Superstar team…Truly deserving!! #CongratsSriLanka pic.twitter.com/mVshOmhzhe
— Gautam Gambhir (@GautamGambhir) September 11, 2022
இந்த சம்பவத்தின் வீடியோவை கம்பீர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டார் அணி... உண்மையிலேயே தகுதியானது!!#வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா." என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆஸ்திரேலியா போன்ற களத்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும்.
- ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றால் 4 -5 வேகப்பந்துவீச்சாளர்கள் வரை அழைத்து செல்ல வேண்டும்.
சென்னை:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது.
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹார் இடம்பெற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

தீபக் சஹார் குறித்து கவாஸ்கர் கூறுகையில்:-
ஆஸ்திரேலியா போன்ற களத்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். பவர் ப்ளே ஓவர்களில் தீபக் சஹார் விக்கெட் எடுக்கக்கூடிய வீரர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றால் 4 -5 வேகப்பந்துவீச்சாளர்கள் வரை அழைத்து செல்ல வேண்டும். அதில் தீபக் சஹார் மிக முக்கியமாக தேவை. எனவே வரும் டி20 உலகக்கோப்பையில் தீபக் சஹாரை சேர்ப்பது இந்திய அணிக்கு பெரிய பலனை கொடுக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
- இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
- 2-வது இன்னிங்சில் பிராட் மொத்தம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றது. இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 169 ரன்னில் சுருண்டது. இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்சில் கேப்டன் டீன் எல்கரின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.
இந்த விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்டின் 564-வது விக்கெட் ஆகும். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிகெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 2-வது இடத்தில் இருந்த கிளென் மெக்ராத்தை (563 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார். இந்த இன்னிங்சில் பிராட் மொத்தம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் விவரம்:-
முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்
ஷேன் வார்னே - 708 விக்கெட்
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 667 விக்கெட்
அனில் கும்ப்ளே - 619 விக்கெட்
ஸ்டூவர்ட் பிராட் - 566 விக்கெட்
கிளென் மெக்ராத் - 563 விக்கெட்
- சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது.
- தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடி யத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.
29-வது இடத்தில் உள்ள அலிசன் ரிஸ்கி (அமெரிக்கா), கிராசேவா (ரஷியா), மேக்டா லினட் (போலந்து), ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) உள்ளிட்ட உலகின் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடியினரும் பங்கேற்கிறார்கள்.
முதல் நாளான இன்று 3 டென்னிஸ் ஆடுகளத்தில் 9 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய வீராங்கனை கர்மன் தண்டி இன்ைறய முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் குளோபேக்கியூட்டை சந்திக்கிறார். இந்திய வீராங்கனை முதல் சுற்றில் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.






