search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்- இந்திய வீராங்கனை கர்மன் தண்டி முதல் சுற்றில் வெற்றி பெறுவாரா?
    X

    கர்மன் தண்டி

    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்- இந்திய வீராங்கனை கர்மன் தண்டி முதல் சுற்றில் வெற்றி பெறுவாரா?

    • சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது.
    • தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.

    சென்னை:

    சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடி யத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2 கோடியாகும்.

    29-வது இடத்தில் உள்ள அலிசன் ரிஸ்கி (அமெரிக்கா), கிராசேவா (ரஷியா), மேக்டா லினட் (போலந்து), ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) உள்ளிட்ட உலகின் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடியினரும் பங்கேற்கிறார்கள்.

    முதல் நாளான இன்று 3 டென்னிஸ் ஆடுகளத்தில் 9 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய வீராங்கனை கர்மன் தண்டி இன்ைறய முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்சின் குளோபேக்கியூட்டை சந்திக்கிறார். இந்திய வீராங்கனை முதல் சுற்றில் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×