என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 1992 உலக கோப்பை தொடருடன் நடப்பு உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
    • இம்ரான்கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் ஆசம் அந்நாட்டின் பிரதமர் ஆவார்

    1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் (ஒருநாள் போட்டி) உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தது. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே மண்ணில் 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் எதிர் கொள்வதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    1992 உலக கோப்பை தொடருடன் நடப்பு உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இம்ரான்கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் ஆசம் அந்நாட்டின் பிரதமர் ஆவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளரு மான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் உலக கோப்பையை வென்றால் இன்னும் 26 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2048ல் பாபர் ஆசம் பாகிஸ்தான் பிரதமராக வருவார் என்று வர்ணனையின் போது கவாஸ்கர் தெரிவித்தார். 1992-ல் உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் அதன் பின் 26 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமரானார். அதே போன்று இந்த உலக கோப்பையை வென்றால் பாபர் ஆசம் பிரதமர் ஆவார் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

    • வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

    இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

    மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

    வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

    மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
    • இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது.

    முதலில் பேட் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 13-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது.

    டி 20 உலக கோப்பையை வெல்லும் அணியில் முதன்மையான அணியாக கருதப்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில், எங்கள் கனவை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம். எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது.

    ஆனால் ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். மைதானத்துக்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி.

    இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் என பதிவிட்டுள்ளார்.

    • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லினா, பர்வீன் ஹூடா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்,
    • இப்போட்டியில் இந்தியாவின் மீனாட்சி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஜோர்டான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று தொடங்கியது.

    இந்த தொடரில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அந்த வகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) இன்று உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவை எதிர்கொண்டார்.

    போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தனது புத்திசாலித்தனமான நுட்பங்களையும் உத்திகளையும் திறம்பட பயன்படுத்திய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இதேபோல், 63 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, ஜப்பான் வீரர் கிடோ மாயை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் பர்வீன் ஹூடா வென்று தங்கம் கைப்பற்றினார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 -வரை நடைபெறுகிறது.
    • நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது.

    நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    • குரூப் 12-ல் திணறிய பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    • முதல் இடம் பிடித்த இந்தியா அரையிறுதியோடு வெளியேற்றம்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட்டான ஐ.பி.எல். இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானைத் தவிர மற்ற நாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டும் ஐ.பி.எல். தொடரில் இருந்து தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டேன் என பல்வேறு நாட்டு வீரர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியால் ஐ.பி.எல். தொடங்கிய பிறகு உலகக் கோப்பையை வென்றது கிடையாது.

    பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட சங்கத்தின் தலைவர் ரமீஸ் ராஜா, ஐ.பி.எல். தொடரை குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''பில்லியன் டாலர் லீக் அணிகள் எங்களுக்கு பின்னால் உள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் பில்லியன் டாலர் லீக் கிரிக்கெட் வீரர்களை விட சிறந்தவர்கள். நாங்கள் ஏதோ ஒன்றை சரியாக செய்து கொண்டிருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • அடிலெய்டு அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
    • தொடக்க வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடாதது தோல்விக்கு முக்கிய காரணம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் அடிலெய்டில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் மோதின. இதில் 169 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும்போது இந்திய அணியின் குறைகளை சுட்டிக் காட்டி வெளிநாட்டு விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர். அப்போது அவர்கள் சமூக வலைத்தளத்தில் இந்திய வல்லுனர்கள், ரசிகர்களால் கடுமையான அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

    இருந்தாலும் மைக்கேல் வாகன் போன்றோர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்கள். இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் போன்றோர் பதிலடி கொடுத்தும், ட்ரோல் செய்தும் வந்தனர்.

    நேற்று இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் மைக்கேல் வாகன், கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள். மேலும், அவர்கள் வேலையை இழந்து விடுவோம் என அஞ்சுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ''யாருமே இந்திய அணியை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். பண்டிட்ஸ் இந்தியாவில் ஒருநாள் வேலையை இழந்துவிடுவோம் என கவலைப்படுகிறார்கள்.

    ஆனால், தற்போது நேரடியாக பேச வேண்டிய நேரம். அவர்கள் சிறந்த வீரர்களுக்கு பின்னால் மறைந்து கொள்ள முடியும். ஆனால், இது ஒட்டுமொத்தமாக ஒரு அணி சரியான வழியில் விளையாடுவதை பற்றியது. அவர்களின் பந்து வீச்சாளர்கள் தேர்வு தரம் குறைவாகவே இருந்தது. மேலும், மிகவும் நேர்த்தியான வகையில் அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சிலும் குறைபாடு.

    ஒயிட் பால் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளது. இந்திய பிரிமீயர் லீக்கில் உலகின் ஒவ்வொரு வீரர்களும், அவர்களின் பேட்டிங் திறமையை எப்படி முன்னேற்றினார்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால், இந்தியா இதுவரை சாதித்தது என்ன?'' என்றார்.

    • பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை
    • இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம் என சேவாக் கருத்து

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அரையிறுதியில் இந்திய அணி மோசமாக தோற்றது குறித்து தேர்வு குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப்சிங் கூறியதாவது:-

    லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிகப்பெரிய தவறாகும்.

    குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். இதே போல ரிஷப் பண்டுக்கு சரியான முறையில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. அடுத்த உலக கோப்பைக்கான அணியை இப்போதே திட்டமிட வேண்டும். ரோகித் சர்மா, வீராட் கோலி, அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அடுத்த உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது:-

    இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே அச்சம் இல்லாமல் விளையாடவில்லை. பயப்படாமல் களத்தில் ஆடவில்லையென்றால் போட்டியை விட்டு வெளியேற வேண்டிய நிலைதான் ஏற்படும். அச்சமற்ற கிரிக்கெட் இப்போது காணாமல் போய் விட்டது. தோற்றாலும் குறைந்தபட்சம் போராடி இருக்கவேண்டும்.

    பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மேலும் இங்கிலாந்தின் பந்துவீச்சு துறைக்கு எதிராககூட சவால் கொடுக்கவில்லை. இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம்.

    கடந்த உலக கோப்பையில் இருந்த அதே அணுகுமுறை தான் தற்போதும இருக்கிறது. நெருக்கடியான போட்டியில் வீராட் கோலி மட்டுமே ரன்களை எடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், 'இந்திய அணியின் இந்த தோல்வியால் அதிகமாக விமர்சிக்க வேண்டாம். இந்திய அணி மோசமாக ஆடியதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு ஆட்டத்தின் அடிப்படையில் அதிகமாக விமர்சிக்க முடியாது. இங்கிலாந்து அணி நிலைமையை சிறப்பாக கையாண்டு இந்தியாவை முற்றிலும் வெளியேற்றியது' என்றார்.

    'ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அணியின் வெற்றியை சொந்த வெற்றியை போல் கொண்டாடினால், தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.

    • ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.
    • இந்திய அணியுடன் நாங்கள் உடன் நிற்கிறோம்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்த வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடும் போது, நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கான் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இந்திய அணி முழு தேசத்திற்கும் உண்மையில் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்து வருகிறது. இருந்தாலும் உங்கள் இறுதிப் போட்டிக்கான பயணம் விரைவில் முடிந்து போனது.

    எனினும் அணியின் ஒவ்வொரு விளையாட்டையும் நாங்கள் ரசித்தோம். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம். இரண்டு முடிவுகளும் தவிர்க்க முடியாதவை. அதனால் நாங்கள் உங்கள் உடன் நிற்கிறோம். சிறந்த அணியுடன் நிற்க நாங்கள் இங்கு இருக்கிறோம். முன்னெப்போதையும் விட வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா நாக்அவுட் சுற்றில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
    • நாக்அவுட் சுற்றுகள் என்று வரும்போது, நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதுதான் முக்கியமான விஷயம்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 13-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையான அணியாக கருதப்படும் இந்தியா நாக்அவுட் சுற்றில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். நெருக்கடியான நேரத்தில் சரியாக விளையாடவில்லை என்று பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

    இன்றைய போட்டியின் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் ஆடினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன. அதனை இங்கிலாந்து ஓபனர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.

    நாக்அவுட் சுற்றுகள் என்று வரும்போது, நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதுதான் முக்கியமான விஷயம். அது ஒவ்வொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்தது. அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை கையாள யாருக்கும் கற்றுத்தர முடியாது. இவர்கள் ஐபிஎல் மற்றும் மற்ற போட்டிகள் அனைத்திலும் பிளேஆஃப் சுற்றில் விளையாடும்போது, ​​அவை அதிக நெருக்கடி அளிக்கக்கூடிய விளையாட்டுகள். அவர்களால் அதைக் கையாள முடிகிறது. ஆனால் இன்றைய போட்டியில் எங்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரையிறுதி சுற்றில் கோவிந்த், கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் தோல்வியடைந்தார்.
    • நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் சுமித் தோல்வியடைந்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெறுகிறது. இதில், இந்திய வீரர்கள் சுமித், கோவிந்த் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில், கோவிந்த் (48 கிலோ எடைப்பிரிவு), கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் 0:4 என தோல்வியடைந்தார். இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவில் சுமித், நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) 0:5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். தாய்லாந்து ஓபனில் சுமித், கோவிந்த் குமார் ஆகிய இருவரும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    மற்ற இந்திய வீரர்களான சிவ தாபா, முகமது ஹசாமுதீன், நரேந்தர் ஆகியோர் அரையிறுதியில் மோத உள்ளனர். நாளை நடைபெறும் இறுதிப் போட்டிகளில் லவ்லினா, பர்வீன் உள்ளிட்ட 5 இந்திய வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 

    • சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம்.
    • தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம்.

    அடிலெய்ட்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள்  பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா மற்றும் போராடியதால் 20 ஓவர்களில் இந்தியா 168 ரன்களை எடுத்தது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியே ஆட்டத்தை முடித்தனர். இந்தியாவின் பவுலிங் சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றனர்.

    இந்நிலையில் இந்த படுதோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா மனவேதனையுடன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன.

    அதனை இங்கிலாந்து ஓப்பனர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். ஸ்கொயர் திசைகளில் தான் ரன் கசியும் என அறிவோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. முதல் ஓவரில் ஸ்விங் ஆகும் என நினைத்தேன். ஆனால் நினைத்த பகுதியில் ஸ்விங் ஆகவில்லை. வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் தான் ஆடினோம். அப்போட்டியில் வேறும் மாதிரி இருந்தது.

    திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தான் பிரச்சினை ஏற்படும். ஆனால் நாங்கள் அனைத்து திட்டங்களையும் சரியாக செய்தோம். 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்துவது கடினம் என்பது எனக்கு தெரியும். எனினும் திட்டங்களை தொடர்ந்து செய்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அமைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×