search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நெருக்கடியான சூழ்நிலையை கையாள யாருக்கும் கற்றுக்கொடுக்க முடியாது... ரோகித் சர்மா சொல்கிறார்
    X

    நெருக்கடியான சூழ்நிலையை கையாள யாருக்கும் கற்றுக்கொடுக்க முடியாது... ரோகித் சர்மா சொல்கிறார்

    • இந்தியா நாக்அவுட் சுற்றில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
    • நாக்அவுட் சுற்றுகள் என்று வரும்போது, நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதுதான் முக்கியமான விஷயம்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 13-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது.

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையான அணியாக கருதப்படும் இந்தியா நாக்அவுட் சுற்றில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். நெருக்கடியான நேரத்தில் சரியாக விளையாடவில்லை என்று பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

    இன்றைய போட்டியின் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    மிகவும் வருத்தமாக இருக்கிறது. சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் பவுலிங்கில் சொதப்பினோம். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் ஆடினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் கசிந்தன. அதனை இங்கிலாந்து ஓபனர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.

    நாக்அவுட் சுற்றுகள் என்று வரும்போது, நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதுதான் முக்கியமான விஷயம். அது ஒவ்வொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்தது. அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை கையாள யாருக்கும் கற்றுத்தர முடியாது. இவர்கள் ஐபிஎல் மற்றும் மற்ற போட்டிகள் அனைத்திலும் பிளேஆஃப் சுற்றில் விளையாடும்போது, ​​அவை அதிக நெருக்கடி அளிக்கக்கூடிய விளையாட்டுகள். அவர்களால் அதைக் கையாள முடிகிறது. ஆனால் இன்றைய போட்டியில் எங்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×