என் மலர்
விளையாட்டு
- இளம் வீரர்களை வங்கதேசம் போன்ற தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடுகிறார்கள்.
- நீங்கள் நாட்டுக்காக விளையாடும்போது அணிக்கு நீங்கள் தேவை என்கிறபோது நீங்கள் வேறு நாட்டிற்குச் சென்று டி20 தொடரில் விளையாடினால் அது நிச்சயம் சிக்கலை கொடுக்கும்.
மும்பை :
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நியூசிலாந்து போன்ற பெரிய அணியை எதிர்கொள்ளும் போது சீனியர்களுக்கு ஓய்வு வழங்குவது சரியா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து அஜய் ஜடேஜா கூறியதாவது:-
எந்த கிரிக்கெட் வீரர்களும் தங்கள் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் உலகம் முழுவதும் உள்ள டி20 தொடரில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீங்கள் நாட்டுக்காக விளையாடும்போது அணிக்கு நீங்கள் தேவை என்கிறபோது நீங்கள் வேறு நாட்டிற்குச் சென்று டி20 தொடரில் விளையாடினால் அது நிச்சயம் சிக்கலை கொடுக்கும்.
இளம் வீரர்களை வங்கதேசம் போன்ற தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடுகிறார்கள். இந்த கலாச்சாரம் மிகவும் தவறு. தற்போது கத்துக்குட்டி அணிகளும் சிறப்பாக விளையாட தொடங்கிவிட்டனர்.
அவர்களுக்கு எதிராக நீங்கள் விளையாடினால் மட்டுமே அவர்கள் வளர்ச்சி அடைய முடியும். ஆனால் இப்போது கேப்டன்களே (ரோகித் சர்மாவை தாக்கும் விதமாக ) தொடர்களில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.
இவ்வாறு அஜய் ஜடேஜா கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.
- இங்கிலாந்து தரப்பில் ரஷித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிட்னி:
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி அந்த அணி முதலில் விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்களும், லபுஷேன், மார்ஷ் அரைசதமும் அடித்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ரஷித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
- தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
- உலகக்கோப்பை தொடர் முழுவதும் யஷ்வேந்திர சஹால் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
இந்திய அணி உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி விரைவில் தலைமை மாற்றத்துக்கு ஆளாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் யஷ்வேந்திர சாஹல் ஒரே ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை. இதுகுறித்து இப்போது தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் சஹாலோ அல்லது ஹர்ஷல் படேலோ தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி அடையவில்லை. ஏனென்றால் தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள். தேவைப்பட்டால் மட்டுமே உங்களை அணியில் எடுப்போம். இல்லை என்றால் கடினம்தான் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். அதனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், எப்படி தங்களது சிறப்பானதைக் கொடுக்க முடியும் என்று காத்திருந்தனர் என்று கூறியுள்ளார்.
- பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது.
- மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது.
ஐதராபாத்:
புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 36-28 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. பெங்கால் அணி பெற்ற 7-வது வெற்றியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பெங்களூர் அணி 10-வது வெற்றியை பெற்றது.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.
தோகா:
உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.
1930-ம் ஆண்டு உருகுவேயில் உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உருகுவே சாம்பியன் பட்டம் பெற்றது.
அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது. இரண்டாம் உலக போர் காரணமாக 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக உலக கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்தது. இதில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நாளை (20-ந் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.
இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன.
இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் விவரம்:-
கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ('ஏ' பிரிவு), இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் (பி), அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா (டி), ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான் (இ), பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் (ஜி), போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா (எச்).
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். டிசம்பர் 2-ந் தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக்அவுட்டுக்கு தகுதி பெறும்.
டிசம்பர் 3 முதல் 6-ந் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.
டிசம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ந் தேதி நடக்கிறது.
பிரேசில் அதிகபட்சமாக 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
4 முறை சாம்பியனான இத்தாலி இந்த முறையும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.
இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), லெவன்டோஸ்கி (போலந்து), எம்பாப்பே (பிரான்ஸ்), ரொனால்டோ (போர்ச்சுக்கல்), கெவின் டு புருயின் (பெல்ஜியம்), கரீம் பென்சிமா (பிரான்ஸ்), நெய்மர் (பிரேசில்), ஹாரிகேன் (இங்கிலாந்து), மோட்ரிச் (குரோஷியா) போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் முத்திரை பதிக்கும் வகையில் ஆடுவார்கள்.
தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. 'ஏ' பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தொடக்க விழாவில் பிரபல பி.டி.எஸ். பாடகர் ஜங்குக் மற்றும் அமெரிக்க குழுவான ஐட்பீஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து பாடகர் பதேகி வில்லியம்ஸ், நோரா பதவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். கொலம்பிய பாடகி ஷகிரா தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விலகினார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உலக கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கப்பட்டது.
மும்பை:
8-வது உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், உலக கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக் குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக உத்தரவிட்டது.
ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி மற்றும் தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தேர்வுக்குழுவில் தலைவர் உள்ளிட்ட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
- கலப்பு சீனியர் பிரிவில் இந்திய இணை, கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தியது
- ஒட்டு மொத்தமாக இந்தியா 25 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு சீனியர் பிரிவில் ரிதம் சங்வான் மற்றும் விஜய்வீர் சித்து ஜோடி கஜகஸ்தானின் இரினா யூனுஸ்மெடோவா மற்றும் வலேரி ரகிம்ஜான் ஜோடியை 17-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

அதே போல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சாம்ராட் ராணா இணை, உஸ்பெகிஸ்தானின் நிகினா சைட்குலோவா மற்றும் முகமது கமலோவ் ஜோடியை 17-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 28 தங்கப் பதக்கங்களில் 25 ஐ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் இந்திய வீராங்கனை 44-வது இடத்தில் உள்ளார்.
- காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீராங்கனையை இந்திய வீராங்கனை வீழ்த்தினார்.
பாங்காங்:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-11, 11-6, 11-5, 11-7, 8-11, 9-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.
மேலும் இந்தியாவின் சேத்தன் பாபூருக்குப் பிறகு சாம்பியன்ஷிப் போட்டி கடைசி நான்கு சுற்றுக்குள் வந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் மணிகா பெற்றுள்ளார். கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையே நடைபெறும் காலிறுதி சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, அரையிறுதியில் இந்திய வீராங்கனை மணிகா எதிர்கொள்கிறார்.
- இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- வெலிங்டனில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வெலிங்டன்:
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்தது.
இந்த நிலையில் வெலிங்டனில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதால் மழை நின்ற பின் ஆட்டம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
#TeamIndia and New Zealand team enjoy a game of footvolley as we wait for the rain to let up.#NZvIND pic.twitter.com/8yjyJ3fTGJ
— BCCI (@BCCI) November 18, 2022
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும்.
- ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
சென்னை:
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளநிலையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது.
இதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீப காலமாகவே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தனது யூடியூப் சேனல் மூலமாக பேசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார். ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது. ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம். ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.
அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது" என்றார்.
- நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார்.
- U-19 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனது நியூசிலாந்தில்தான்.
இந்திய அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மான் கில். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடியுள்ளார். முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டியில் ஓரளவு இடம் கிடைக்கிறது.
தற்போது நியூசிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகவில்லை.
சுப்மான் கில் நியூசிலாந்தில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பையில் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவும் ஆர்வமாக உள்ளார்.
இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அப்போது சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாடியது குறித்து ஒளிபரப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது சுப்மான் கில் கூறியதாவது:
நான் பயிற்சி செய்த சில விஷயங்களை செயல்படுத்த முடிந்தது. சிக்சர் விளாசுவது பவரால் அல்ல. அது டைமிங் ஷாட்டால்தான் சாத்தியம் என்று நினைப்பவன் நான். அதை சரியான நான் பெற்றால், என்னால் சிக்சர் விளாச முடியும் என்று எனக்குத் தெரியும்.
அதேபோல் பவுண்டரி, சிக்சரால் ரன்கள் அடிப்பதை விட ஓடி எடுக்கும் ரன்களைத்தான் நான் எதிர்பார்ப்பேன். டாட் பால் இல்லாமல் விளையாட விரும்புகிறேன். முடிந்த அளவு சிங்கிள், டபுள்ஸ் அடிக்க வேண்டும்.
2019-ல் இங்குதான் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். இங்கே வருவதை சிறந்ததாக உணர்கிறேன். நிச்சயமாக, நியூசிலாந்திற்கு மீண்டும் வருவதில் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன. நான் நியூசிலாந்திற்குச் செல்வேன் என்று எனக்குத் தெரிந்த போதெல்லாம், அது ஒரு புன்னகையைத் தருகிறது.
இவ்வாறு சுப்மான் கில் தெரிவித்தார்.
- இந்தியாவில் அதிவேகமாக பந்து வீசும் வீரராக உள்ளார்
- ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடி முத்திரை பதித்தார்
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் உள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததும் பேட்டிங் அணுகுமுறை, அதிவேக பந்து வீச்சாளர் ஆகியோர் இல்லாததே தோல்விக்கு காரணம என சொல்லப்படுகிறது.
இதனால் உம்ரான் மாலிக் மீது அனைவருடைய கவனமும் உள்ளது. நியூசிலாந்து ஆடுகளங்கள் ஏற்கனவே வேகப்பந்து வீச்சு சாதகமாக இருக்கும். இந்த நிலையில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசினால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அவர் எப்படி பந்து வீச்சை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் உம்ரான் மாலிக் அற்புதமான திறமைசாலி என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ''உம்ரான் மாலிக் இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர். உலகக் கோப்பையில் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கலங்கடித்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு உதாரணம் ஹாரிஷ் ராஃப், நசீம் ஷா, அன்ரிச் நோர்ஜே. ஆகவே, உண்மையாக வேகத்திற்கு மாற்று இல்லை.
குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் கூட எதிரணியை சமாளிக்க முடியும். ஆகவே, உம்ரான் மாலிக்கிற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த வெளிப்பாட்டில் இருந்து அவர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்'' என்றார்.






