என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.
    • மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது.

    ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.

    இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    • ஆப்பிரிக்கா கண்டத்தின் சிறந்த வீரரில் ஒருவராக திகழ்கிறார்
    • பேயர்ன் முனிச் கிளப்பிற்காக விளையாடி வரும் சானேவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது.

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடரில் செனேகல் அணியில் விளையாடுகிறது. அந்த அணியின் சிறந்த வீரர் சாடியோ மானே. 30 வயதான இவர் ஜெர்மனியின் முன்னணி களிப்பான பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார்.

    அந்த அணிக்காக விளையாடியபோது காலி காயம் ஏறுப்ட்டது. காயம் குணமடைந்து விடும் என நினைக்கையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால், அவர் உலகக் கோப்பையில் விளையாடமாட்டார் என செனேகல் அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    ஆப்பிரிக்காண கண்டத்தின் சிறந்த கால்பந்து வீரர் விருதை இரண்டு முறை வென்றுள்ள சானே இடம் பெறாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

    செனேகல் குரூப் ஏ-வில் இடம் பிடித்துள்ளது. இந்த அணியுடன் கத்தார், ஈக்வடார், நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. செனேகல் வருகிற 21-ந்தேதி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

    • உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர்.
    • உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இப்போட்டி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியதாவது:-

    இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு நியூசிலாந்து போட்டி தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அது அவரது வளர்ச்சிக்கு உதவும்.

    உலகின் மற்ற பெரிய அணிகளுடன் போட்டி போடுவதற்கு வேகப்பந்து வீச்சில் இந்தியாவுக்கு பல்வேறு பரிமானங்கள் தேவை. இடது கை பந்து வீச்சாளர், பந்தை ஸ்விங் செய்யக்கூடிய ஒருவர் வேண்டும். பந்து வீச்சு வரிசையில் பல்வேறு வகைகளை பயன்படுத்த வேண்டும்.

    உம்ரான் மிகவும் திறமை வாய்ந்தவர். நியூசிலாந்து தொடரில் அவர் வாய்ப்பு பெற வேண்டும். உம்ரான் மாலிக் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க விரும்பினால் அவர் எவ்வாறு திறமையை முன்னோக்கி எடுத்து செல்கிறார் என்பதில் தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு ஜாகீர்கான், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறும் போது, இந்திய வீரர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதற்காக எந்த காரணத்தையும் பார்க்கவில்லை. உள்நாட்டில் தற்போது இருப்பதும் வலுவான கட்டமைப்பு தான். நல்ல வீரர்களை உருவாக்குவதற்கு நம்மிடம் போதுமான வழிகள் உள்ளது என்றனர்.

    • அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.
    • ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும்.

    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசம் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கிரிக்கெட்டில் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழி நடத்த வேண்டும்.

    பாபர் ஆசமை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால் தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் அவருக்கு அழுத்தம் கொடுப்பதை நான் விரும்பவில்லை. நீண்ட வடிவ போட்டிகளில் அவர் கேப்டன் ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஷான் மசூத் போன்ற வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அணியை வழி நடத்த முடியும் என்றார்.

    • இன்றைய வெற்றியின்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    தென்கொரியாவின் டேகு நகரில் 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் பிஸ்டல் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. மனு பாகெர், ஏஷா சிங், ஷிகா நர்வால் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் மின்சியோ, கிம் ஜூகி, யாங்ஜின் ஆகியோர் கொண்ட அணியை 16-12 என வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருநாள் போட்டி மீதமுள்ளது.

    இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ரிதம் சங்வான், பாலக் மற்றும் யுவிகா தோமர் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் ஜங்மி, கிம் போமி மற்றும் யூ ஹின்யாங் ஆகியோர் கொண்ட அணியிடம் 12 -16 என தோல்வியடைந்தது. 

    • பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர்.
    • இதுவரை நடந்த 20 போட்டியில் இந்தியா 11-ல், நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

    வெல்லிங்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் , ஒருநாள் ஆட்டத்துக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் தொடரில் ஆடவில்லை. ரிஷப் பண்ட் இரு தொடர்களிலும் துணை கேப்டனாக இருக்கிறார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் நாளை (18-ந்தேதி ) நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த மோசமான ஆட்டத்தால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

    இதனால் நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.

    உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். உலக கோப்பையில் சரியான முறையில் வாய்ப்பு வழங்கப்படாத யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுகிறார்கள்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான டிரெண்ட் போல்ட், அதிரடி பேட்ஸ்மேன் மார்டின் குப்தில் ஆகியோர் ஒயிட் பால் போட்டிகளில் (20 ஓவர், ஒரு நாள் ஆட்டம்) இடம் பெறவில்லை.

    கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். அந்த அணியும் உலக கோப்பையில் அரை இறுதி வரை சென்று பாகிஸ்தானிடம் தோற்றது. பிலிப்ஸ், கான்வே, பெர்குசன், ஜிம்மி நீசம் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 21-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 20 போட்டியில் இந்தியா 11-ல், நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.

    நியூசிலாந்து: வில்லி யம்சன் (கேப்டன்), பின் ஆலன், கான்வே, பிலிப்ஸ், பிரேஸ்வெல், ஜிம்மி நீசம், டாரல் மிச்சேல், சான்ட்னெர், சவுத்தி, ஆடம் மிலின், பிளையர் டிக்னெர், சோதி.

    • டேவிட் வார்னர், ஹெட், ஸ்மித் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
    • ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி டேவிட் மலானின் சதத்தின் மூலம் 287 ரன்கள் குவித்தது. அவர் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - ஹெட் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் குவித்தது.

    இருவரும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். வார்னர் 86 ரன்னிலும் ஹெட் 69 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். மார்னஸ் லாபுசாக்னே 4 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்திருந்தார்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    • தகுதி இல்லாதவரெல்லாம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.
    • அப்படி பகுதிநேர பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கூட வராத தம்மிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

    ஐபிஎல் டி20 தொடரின் 16-வது சீசன் வரும் 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொச்சி நகரில் நடைபெறும் நிலையில் கோப்பையை வெல்வதற்கு தேவையான வீரர்களை தக்க வைத்துள்ள அந்தந்த அணி நிர்வாகங்கள் தேவையற்ற வீரர்களை வெளியேற்றியுள்ளது.

    அந்த வரிசையில் 2008 முதல் இப்போது வரை முதல் கோப்பை வெல்ல போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த வருடம் புதிய கேப்டனாக நியமித்த மயங் அகர்வாலை சுமாராக செயல்பட்டதால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அணியிலிருந்தே மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

    இப்படி அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் சொதப்பலை அரங்கேற்றி வரும் அந்த அணி அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்காக கேப்டனை மட்டுமல்லாமல் பயிற்சியாளர் குழுவையும் அடியோடு மாற்றியுள்ளது. ஏனெனில் புதிய கேப்டனாக சீனியர் வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உறுதுணையாக ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக டிராவிஸ் பெய்லிஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோக துணை பயிற்சியாளராக ப்ராட் ஹார்டின், பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்வெல்ட் ஆகியோரை நியமித்துள்ள அந்த அணி பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபரை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தகுதி இல்லாதவரெல்லாம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.

    கடந்த பல வருடங்களாகவே சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை மையப்படுத்தி ஒருவரை ஒருவர் இவர்கள் கலாய்த்துக் கொள்வது வழக்கமாகும். குறிப்பாக வேண்டுமென்றே இந்தியாவை கலாய்க்கும் வகையில் மைக்கேல் வாகன் பேசுவதும் அதற்கு சினிமா படங்களை உபயோகித்து வாசிம் ஜாபர் பதிலடி கொடுப்பதும் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றதாகும். முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் வாசிம் ஜாபருடைய விக்கெட்டை மைக்கேல் வாகன் எடுத்துள்ளார்.

    அப்படி பகுதிநேர பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கூட வராத தம்மிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார். அவருடைய அந்த டுவிட் வைரலாகும் நிலையில் அதற்கு வழக்கம் போல வாஷிம் ஜாபர் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • அயர்லாந்து தொடரின்போது ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டது
    • தற்போது நியூசிலாந்து தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இதில் இநதிய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.

    நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    நான் ஓய்வு (Brealks)என்று நம்பவில்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். இந்த ஓய்வுகள் (Breaks)... நேர்மையாக இருக்க உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகள் தேவையா?. ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் பயிற்சியாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது.
    • உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    கத்தாரில் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து நாடு வீரர்களும் கத்தார் வந்த வண்ணம் உள்ளனர்.

    அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் கத்தார் வந்தடைந்தபோது, அவர்கள் இந்திய ரசிகர்கள் டிரம்ப் வாசித்து வெகு விமர்சையாக வரவேற்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தது அனைவரையும் ஆச்சர்யமாக இருந்தது. மேலும், வரவேற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    இந்த நிலையில், ரசிகர்களை போட்டி அமைப்பாளர்கள் பணம் கொடுத்து அழைத்து வந்து வரவேற்பு அளித்தார் என விமர்சனம் எழுந்தது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என போட்டிக்கான உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

    பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது. இதை கத்தார் மறுத்த நிலையில் தோகா வந்தடைந்த அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிக்கு நூற்றுக்கணக்கான இந்திய ரசிகர்கள் வரவேற்பு அளித்தது கேள்வியை எழுப்பியது. அவர்கள் போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றிருக்கலாம் என செய்தி பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கத்தாரில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு குவிந்தனரா? அல்லது அதிகாரிகளால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்பது தெளிவாக புலப்படவில்லை என விளையாட்டு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று, அங்கு கூடியிருந்த ரசிகர்களில் சிலரிடம், போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினோம். அப்படி ஏதும் இல்லை. நாங்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்து அணி மற்றும் பிரிமீயர் லீக் குறித்து தெளிவான தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    போட்டிக்கான உயர்மட்ட குழு, ''உலகம் முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்கள் - அவர்களில் பலர் கத்தாரை தங்கள் வீடாக மாற்றியுள்ளனர். சமீபத்தில் உள்ளூர் சூழ்நிலைக்கு பங்களித்துள்ளனர். நாடு முழுவதும் ரசிகர்கள் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்து பல்வேறு தேசிய அணிகளை அவர்களது ஹோட்டல்களில் வரவேற்றனர்'' எனத் தெரிவித்துள்ளது.

    உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேசன் ராய் 6 ரன்னில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது. ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார்.

    அவர் 134 ரன்னில் சம்பா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்
    • ஆஸ்திரேலியாவின் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்குரிய இவர், கடந்த 2019 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். கடந்த 2022 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்க் வுட் என்பவரை பயிற்சியாளராக நியமித்தது.

    இந்த நிலையில், தற்போது 2023 சீசனில் வாசிம் ஜாபர் மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் அறிவித்தள்ளது.

    பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் உள்பட முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்தது. அந்த அணியிடம் தற்போது 32.20 கோடி ரூபாய் உள்ளது, மினி ஏலத்தின்போது தேவைப்பட்டால் மயங்க் அகர்வால் உள்பட ரிலீஸ் செய்ய வீரர்களை எடுத்துக் கொள்ள முடியும்.

    15 சீசனில் இதுவரை ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்தது.

    ×