என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பணம் கொடுத்து ரசிகர்களை வரவேற்க வைத்ததாக போட்டி அமைப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு
- பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது.
- உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து நாடு வீரர்களும் கத்தார் வந்த வண்ணம் உள்ளனர்.
அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் கத்தார் வந்தடைந்தபோது, அவர்கள் இந்திய ரசிகர்கள் டிரம்ப் வாசித்து வெகு விமர்சையாக வரவேற்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தது அனைவரையும் ஆச்சர்யமாக இருந்தது. மேலும், வரவேற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த நிலையில், ரசிகர்களை போட்டி அமைப்பாளர்கள் பணம் கொடுத்து அழைத்து வந்து வரவேற்பு அளித்தார் என விமர்சனம் எழுந்தது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என போட்டிக்கான உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது. இதை கத்தார் மறுத்த நிலையில் தோகா வந்தடைந்த அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிக்கு நூற்றுக்கணக்கான இந்திய ரசிகர்கள் வரவேற்பு அளித்தது கேள்வியை எழுப்பியது. அவர்கள் போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றிருக்கலாம் என செய்தி பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு குவிந்தனரா? அல்லது அதிகாரிகளால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்பது தெளிவாக புலப்படவில்லை என விளையாட்டு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று, அங்கு கூடியிருந்த ரசிகர்களில் சிலரிடம், போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினோம். அப்படி ஏதும் இல்லை. நாங்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்து அணி மற்றும் பிரிமீயர் லீக் குறித்து தெளிவான தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
போட்டிக்கான உயர்மட்ட குழு, ''உலகம் முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்கள் - அவர்களில் பலர் கத்தாரை தங்கள் வீடாக மாற்றியுள்ளனர். சமீபத்தில் உள்ளூர் சூழ்நிலைக்கு பங்களித்துள்ளனர். நாடு முழுவதும் ரசிகர்கள் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்து பல்வேறு தேசிய அணிகளை அவர்களது ஹோட்டல்களில் வரவேற்றனர்'' எனத் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.






