search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி- கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு தங்கம் வென்றது இந்தியா
    X

    விஜய்வீர் சித்து,ரிதம் சங்வான்

    ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி- கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு தங்கம் வென்றது இந்தியா

    • கலப்பு சீனியர் பிரிவில் இந்திய இணை, கஜகஸ்தான் ஜோடியை வீழ்த்தியது
    • ஒட்டு மொத்தமாக இந்தியா 25 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

    தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு சீனியர் பிரிவில் ரிதம் சங்வான் மற்றும் விஜய்வீர் சித்து ஜோடி கஜகஸ்தானின் இரினா யூனுஸ்மெடோவா மற்றும் வலேரி ரகிம்ஜான் ஜோடியை 17-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.


    அதே போல் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சாம்ராட் ராணா இணை, உஸ்பெகிஸ்தானின் நிகினா சைட்குலோவா மற்றும் முகமது கமலோவ் ஜோடியை 17-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதையடுத்து இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 28 தங்கப் பதக்கங்களில் 25 ஐ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×