என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் இடம் பெறுகிறார்.
    • ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்.

    நேப்பியர்

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

    எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • அண்மையில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற 34 வயதான பென்ஜிமா, ஸ்பெயினின் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுகிறார்.
    • பென்ஜிமா விலகல் நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

    தோகா:

    பிரான்சின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் கரீம் பென்ஜிமா உலக கோப்பை போட்டிக்காக சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் பயிற்சியின் போது அவரது இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று உலக கோப்பை போட்டியில் இருந்து விலகினார்.

    அண்மையில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற 34 வயதான பென்ஜிமா, ஸ்பெயினின் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுகிறார்.

    2021-22-ம் ஆண்டு சீசனில் மாட்ரிட் அணிக்காக பென்ஜிமா 32 ஆட்டத்தில் 44 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது விலகல் நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

    ஏற்கனவே பால் போக்பா, என்கோலோ கான்டே ஆகியோரும் காயத்தால் பின்வாங்கியதால், இப்போது பிரான்ஸ் தங்களது திட்டமிடலை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    • ஏடிபி பைனல்ஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், காஸ்பர் ரூட் மோதினர்.
    • ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    துரின்:

    உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.

    குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார்.

    இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.

    • உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
    • முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் கத்தார், ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஈகுவடார் அணியின் வேலன்சியா கோல் அடித்தார். தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.
    • ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து இந்திய ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

    மேலும் இன்றைய சதம் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். மேலும் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார். 


    இந்நிலையில் சூரிய குமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர், டி20 போட்டிக்கு மட்டுமல்ல, மூன்று வடிவ போட்டிகளுக்கும் பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

    அவர் (சூர்யகுமார்) பல வழிகளில் அடிக்கக் கூடிய ஒரு வீரர். அவர் கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், அவர் இந்தியாவின் சிறந்த வீரராக மாற, தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது இறுதி ஓவரை வீசிய டிம் சவுத்தி, அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 111 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
    • நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் அடித்தார்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    இதைடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 


    இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார்.பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லியம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டையும், சாகல், சிராஜ் தலா 2 விக்கெட்களையும், புவனேஷ்குமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    • டாஸ்வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
    • சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், 2-வது போட்டி மவுண்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி,20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடி சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இஷான் கிஷன் 36 ரன்கள் சேர்த்தார்.

    நியூசிலாந்து தரப்பில் டிம்சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார். பெர்குசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா, தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி.

    தோகா:

    உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஏ பிரிவு - கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவு - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவு - அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

    இ பிரிவு - ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

    எப் பிரிவு - பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவு - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவு - போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

    டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது.

    உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக மணிகா பத்ரா பதக்கம் வென்றார்.
    • வெண்கலம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மணிகா தோல்வியடைந்தார்.

    இதையடுத்து நேற்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும், 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெண்கலம் வென்று ஆசிய கோப்பையில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றை எழுதியதற்காக மணிகா பத்ராவை வாழ்த்துகிறேன். அவரது வெற்றி இந்தியா முழுவதும் உள்ள பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் டேபிள் டென்னிஸை இன்னும் பிரபலமாக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது.

    இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்களும், லபுஷேன், மார்ஷ் அரைசதமும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டு கைப்பற்றினார்.

    இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 34 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. அடுத்து ஆடிய ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். 4-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் வின்ஸ் 60 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம்பா அசத்தலாக பந்து வீசினார்.

    இறுதியில், இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், சாம்பா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
    • வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.

    பாங்காங்:

    ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீரங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில்  2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மனிகா தோல்வியடைந்தார்.

    இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார்.  இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில்
    வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்று இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.

    போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய அவர், இது மிகப்பெரிய வெற்றியாகும், சிறந்த வீரர்களை தோற்கடித்தேன். நான் அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடி, சிறப்பாகப் போராடி ஒரு அற்புதமான முடிவை எட்டினேன். எனது எதிர்காலப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமாகும்.
    • நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது.

    மவுண்ட் மாங்கானு:

    இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக தேர்வு பெற்றுள்ளனர்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே வெல்லிங்டனில் நேற்று நடைபெற இருந்த முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் மவுண்ட் மாங்கானுவில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது. இதனால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலமாகும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. 

    ×