என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் புதுவை இடஒதுக்கீட்டில் சேர இருப்பிட சான்றிதழ் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் 64 இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்த 31 மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புதுவை சுகாதாரத்துறை வெளியிட்ட தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் உள்ஒதுக்கீட்டு இடங்கள் புதுச்சேரியை இருப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு கிடைக்கிறது என்பதை உறுதி செய்யவேண்டியுள்ளது. எனவே 2-ம் கட்ட கலந்தாய்வில் புதுச்சேரிக்கான இருப்பிடம் உறுதியான பின்னரே ஜிப்மரில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    எனவே புதுவை மாநில மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ந் தேதிக்குள் தங்களுடைய குடியிருப்பு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்களுக்கு மட்டுமே ஜிப்மர் உள்ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

    மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டிதான் ஜிப்மருக்கு கவுன்சிலிங் நடத்தி இடங்களை ஒதுக்குகிறது. எனவே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால்தான் சீட் உறுதி செய்யப்படும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    கவர்னரின் நடவடிக்கையால் புதுவையின் மரியாதை கெட்டுவிட்டது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டினார்.
    புதுச்சேரி:

    புதுவை துத்திப்பட்டில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக்கு கவர்னர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.

    இந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துத்திப்பட்டில் உள்ள மைதானம் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மைதானத்தை அரசு சார்பில் அமைக்க முடியாத நிலைதான் உள்ளது. இந்த மைதானத்தில் ரஞ்சி போட்டி நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பல போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்த முடியும்.

    கவர்னர் கிரண்பேடி அரசு மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக கிரிக்கெட் மைதான விஷயத்தில் தலையிடுகிறார். அவருக்கு அரசின் மீது கோபம் இருந்தால் அதை அரசிடம்தான் காட்ட வேண்டும்.

    புதுவை பஸ்நிலையம் கூட குளம் இருந்த பகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அதை இப்போது இடிக்க முடியுமா? அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருந்தால் அதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால் கவர்னர் கிரண்பேடி வழக்குப்போடு, கைது செய் என்று உத்தரவிடுகிறார்.

    அவரது நடவடிக்கைகளின் மூலம் புதுவையின் மரியாதை இந்திய அளவில் கெட்டுவிட்டது. இதேபோல் கோடிக் கணக்கில் புதுவைக்கு யார் செலவு செய்வார்கள்? ஒரு விளையாட்டு வீரனாக இந்த மைதான நிர்வாகத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி வழக்கமான வெள்ளை கதர் வேட்டி, சட்டை அணியாமல் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு ஜரிகையுடன் கூடிய அங்கவஸ்திரம் அணிந்து புதிய கெட்டப்பில் வந்தார்.
    புதுச்சேரி:

    மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தின நிகழ்ச்சி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    நேருவின் உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் அரசு சார்பில் நடந்த விழாவில் நேருவின் சிலைக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி வழக்கமான வெள்ளை கதர் வேட்டி, சட்டை அணியாமல் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு ஜரிகையுடன் கூடிய அங்கவஸ்திரம் அணிந்து புதிய கெட்டப்பில் வந்தார்.

    அவரை பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர் மாப்பிள்ளை கெட்டப்பில் அசத்துவதாக கூறினார்கள். அதற்கு நாராயணசாமி இன்று தீபாவளி இப்படி ஏதாவது ஒரு நாளில் இதுபோல் அணிந்தால் தான் உண்டு என மகிழ்ச்சியுடன் கூறினார்.
    புதுவையில் கொரோனா பரவல் தடுப்பால் பொருளாதார இழப்பு, பட்டாசு வெடிக்கும் நேரம் குறைப்பு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு 40 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையின் உச்சபட்ச மகிழ்ச்சி புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது தான்.

    புதுவையை பொறுத்தவரை தீபாவளிக்கு 10 நாட்கள் முன்னதாகவே பட்டாசு கடைகள் அமைக்கப்படும். தனியார் மட்டுமல்லாது அரசின் சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி, வானவில் உள்ளிட்ட நிறுவனங்களும் பட்டாசு விற்பனையில் களமிறங்கும்.

    சமீப ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையால் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் பட்டாசு கடைகள் அமைப்பதில்லை. இந்த ஆண்டும் அதே நிலைதான் நீடித்தது.

    அதோடு, புதுவையில் பட்டாசு கடை அமைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் வழக்கமாக திறக்கும் தனியார் கடைகளில் 25 சதவீதம் கடைகள் திறக்கப்படவில்லை. கடைகளின் எண்ணிக்கை குறைந்த போதும் பட்டாசு விற்பனை அதிகரிக்கவில்லை.

    கொரோனா பரவுதலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களிடம் பணபுழக்கம் குறைந்திருந்தது. இதுவும் பட்டாசு விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

    வழக்கமாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தொடங்கி புதுவை நகரம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க தொடங்கும். இந்த சத்தம் தீபாவளிக்கு முந்தைய நாள் காலையில் தொடங்கி மறுநாள் வரை இடைவிடாது நகரபகுதியில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    ஆனால், இந்த ஆண்டு பட்டாசு வெடிக்கும் சத்தம் வெகுவாக குறைந்திருந்தது. நகரபகுதியில் தீபாவளி நாளான நேற்றைய தினம் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு சத்தம் கேட்டது.

    கடந்த ஆண்டை விட மிக குறைவாகவே பட்டாசு விற்பனையாகி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பால் பொருளாதார இழப்பு, பட்டாசு வெடிக்கும் நேரம் குறைப்பு போன்ற காரணங்களாலும் இந்த ஆண்டு 40 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.

    இதனால், கடைகளில் விற்பனையாகாத மீதமுள்ள பட்டாசுகள் தேங்கியுள்ளது. இது திரும்ப எடுத்து கொள்ளப்படாது என்பதால் பட்டாசை அடுத்த ஆண்டு வரை பாதுகாப்பது மிகப்பெரிய சிரமம் என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
    புதுச்சேரியில் இன்று 75 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,252 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,28,795 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 547 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,688 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 81,15,580 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 49,079 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 608 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வுக்கு 2 மாநில செயலாளர்களை நியமித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க. புதுச்சேரி மாநிலம் (கிழக்கு), புதுச்சேரி மாநிலம் (மேற்கு) என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில கழக செயலாளர்கள், அவர்கள் நிர்வகிக்கும் சட்டமன்ற தொகுதிகள் விவரம்.

    புதுச்சேரி மாநிலம் (கிழக்கு)-மாநில செயலாளர், சட்டமன்ற குழு தலைவர் ஏ.அன்பழகன் எம்.எல்.ஏ.

    இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகள்- உப்பளம், காமராஜ், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால் பேட்டை, ராஜ்பவன், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம் (தனி), திருபுவனை (தனி), பாகூர், ஏனாம்.

    மாநில செயலாளர்- ஓம்சக்தி சேகர் (முன்னாள் எம்.எல்.ஏ.)

    இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்- நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் (தனி), ஊசுடு (தனி), மங்களம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, உருளையன்பேட்டை, மாகி.

    மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அனைத்து பகுதிகளிலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாநில கழக செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இன்று முதல் செயல்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    தீபாவளிக்கு கணவர் புத்தாடை வாங்கித் தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    திருபுவனை சின்னபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், பெயிண்டர். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள வெங்கடேசன் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்த மனோ ரஞ்சிதம் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கித் தருவது தொடர்பாக நேற்று கணவன் - மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மனோரஞ்சிதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    காரைக்கால்:

    யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின் துறையினர் மின்துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மயில்வாகனம் தலைமையில் மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்று காரைக்கால் மாவட்ட ரெயில் நிலையம் அருகே யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி தீபாவளி கொண்டாட்டத்தின்போது 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அதாவது புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசுகள் வெடிப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசுகள் மற்றும் வெடிகள் வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அளவுக்கு அதிகமாக வெடிச்சத்தம் ஏற்படுத்தும் பட்டாசு வகைகள், சரவெடிகள் வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் நச்சுப்புகை சுற்றுச்சூழலுக்கும் நமது ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் சுவாச நோய்கள் தீவிரமடைதல், கண்கள் மற்றும் உடலின் பிற பாகங்களில் காயம், கேட்கும் திறன் குறைதல், பார்வை குறைபாடு, தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், மனநிலை பாதித்தல், செல்லப்பிராணிகள் உள்பட விலங்குகளுக்கு துன்பம் ஏற்படுகிறது.

    இதனால் முதியோர், கர்ப்பிணிகள், இதயநோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படும். நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. ஒலி, புகையில்லா தீபாவளியை கொண்டாடுவோம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்ப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பணிச்சுமையால் திண்டிவனம் சிறையில் போலீஸ்காரர் கையில் கிழித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் நல்லியக்கோடன் நகரை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் பாரதி மணிகண்டன்(வயது 26). இவர், திண்டிவனம் கிளை சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 மாதத்துக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பணியில் இருந்த பாரதி மணிகண்டன் திடீரென தான் வைத்திருந்த பிளேடால் இடது கை மணிக்கட்டில் கிழித்து கொண்டார். இதனால் அவரது கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது பற்றி அறிந்ததும் திண்டிவனம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார், பாரதி மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், திண்டிவனம் கிளை சிறையில் பணியின்போது அமர்வதற்கு நாற்காலி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது நாற்காலியில் அமரக்கூடாது என்று ஜெயிலர் கூறி விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக நின்று கொண்டே பணியில் இருந்தேன். சில நாட்களில் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறேன். நேற்று காலை 9 மணிக்கு பணிக்கு வந்தேன். இரவு 7 மணி வரை நின்று கொண்டே இருந்தேன். மேலும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன் என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமையால் போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 இளம்பெண்கள் மாயம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பேட் பூஞ்சோலை வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு சுபலட்சுமி (20) என்ற மகளும், பிரதீபன் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுபலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வில்லியனூர் அகரம் புதுநகரை சேர்ந்த முருகன் (வயது47). டெய்லர். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு அருண்குமார் (23) என்ற மகளும், பவித்ரா (20) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பவித்ரா வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை பல இடங்களில் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருபுவனை போலீசில் முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி காரைக்கால் குடிமைபொருள் வழங்கல் துறையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்றனர்.
    காரைக்கால்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி காரைக்கால் குடிமைபொருள் வழங்கல் துறையை பா.ஜ.க.வினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதற்காக காரைக்கால் மதகடி சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை அருகில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் துரை சேனாதிபதி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ராதா அப்பாதுரை, நிர்வாகிகள் சண்முகம், இளங்கோவன், அப்பு உள்பட பலர் அங்கு திரண்டனர்.

    அப்போது தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள சூழலில் இதுவரை சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்படாதது கண்டனத்திற்குரியது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட குடிமைப்பொருள் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 68 பேரை கைது செய்தனர்.
    ×