என் மலர்
புதுச்சேரி
தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தநிலையில், ஆளுநர் பதவியில் இருந்து நேற்று திடீரென நீக்கப்பட்டார்.
முன்னதாக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யவே அங்கு நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமியை உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த சூழலில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அந்த பதவியில் நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று அதற்கான உத்தரவு அவரிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அங்கு போய் தெலுங்கு கற்றுக்கொண்டேன். இப்போது புதுச்சேரியில் மொழி பிரச்சினை இல்லை. தமிழ் எனது மொழி எனது பெயரிலேயே தமிழ் இருக்கிறது. புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண் இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவேன்” என்று அவர் கூறினார்.
கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாராயணசாமி அவரை சந்தித்தார்.
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடிக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடந்த வாரம்கூட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து நேற்று திடீரென புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது மரியாதை நிமித்தமாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தமிழிசை சவுந்தரரஜனை சந்தித்தார்.
என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை தந்தார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் சென்றார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசினார்.
பின்னர் புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிழந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும். என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக கல்லூரி மாணவிகளிடம் பேசிய ராகுல் காந்தி, நீங்கள் என்னை சார் என்று அழைக்க வேண்டாம். கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் அண்ணா என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள் என்றார். ராகுல் காந்தியின் அழைப்பை அடுத்து அவரை ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.
மத்தியில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும் என புதுச்சேரியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் பேசினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் விலகலால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, துணை நிலை ஆளுநர் நீக்கம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ராகுல்காந்தி. அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. மீனவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பற்றி நான் ஏன் பேசுகிறேன்? என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.
அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன். அப்போதுதான் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும்.
தற்போதைய அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில் அனைத்து தொழில்களும் பெரிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எங்கள் பார்வை வேறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்த விரும்புகிறோம். ஏனெனில் அதுதான் இந்த நாட்டின் பலம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பாரதிய ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு சதிவேலையை கண்டிப்பாக முறியடிப்போம் என புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
புதுவை அமைச்சரவையில் சீனியர் அமைச்சராக பதவி வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த மாதம் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தனர்.
இந்நிலையில் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து நேற்று முன்தினம் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார்.
இதனிடையே நேற்று காலை மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரை நேரில் சந்தித்து அளித்தார்.
இதனால் புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துள்ளது. மொத்தம் 15 எம்.எல்.ஏ.க்கள் இருந்த காங்கிரஸ் கட்சியில் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலு தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது 4 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறியதால் சபாநாயகர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலம் 10 ஆக குறைந்துள்ளது. காங்கிரசை ஆதரிக்கும் தி.மு.க. 3, சுயேச்சை ஒருவர் என காங்கிரஸ் கூட்டணிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா (நியமனம்) 3 என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதனால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி சமநிலையை அடைந்துள்ளது. சட்டசபையில் மொத்தம் 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 15 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்தான் மெஜாரிட்டி கிடைக்கும். காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.
எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர், மெஜாரிட்டி இழந்த காங்கிரஸ் அரசு தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனைக்கூட்டம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தினேஷ்குண்டுராவ், சஞ்சய்தத் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்துக்கு பின் முதல்-அமைச்சர் நாராயண சாமி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் எதிர்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை வெளிப்படையாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். அவர் கூறும்போது, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள்.
இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க அவர்கள் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர் என தெரிவித்தார்.
ஒருவேளை நெருக்கடி முற்றும்பட்சத்தில் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து எதிர்கட்சிகளின் பலத்தை குறைத்து மெஜாரிட்டியை நிரூபிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே இன்று ராகுல்காந்தி எம்.பி. புதுவைக்கு வந்துள்ளார். அவரிடம் தற்போதைய புதுவை அரசியல் சூழ்நிலை குறித்து நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகும் காரணம் அனைவருக்கும் தெரியும். எனது ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட்டனர்.
ஆட்சியில் 4 வருடம் இருந்து விட்டு வெளியேறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
அமைச்சர்களின் துறைகளில் நான் தலையிட்டது கிடையாது. அவர்கள் எந்த நோக்கத்துடன் பா.ஜனதா சென்றுள்ளனர் என மக்களுக்கு தெரியும். இந்திய நாட்டில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது பா.ஜனதாவின் வேலையாக உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகியவற்றில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்தனர்.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.
எங்கும் பெரும்பான்மை கிடையாது. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கொண்டு வருகிறார்கள். இது ஜனநாயகம் கிடையாது. தர்மம் கிடையாது. அராஜகம் தான் செய்கிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என பா.ஜனதாவினர் மிரட்டுகின்றனர். யாரும் மனமுவந்து செல்லவில்லை. அங்கு சென்ற பிறகு தான் பா.ஜனதா எப்படிப்பட்ட கட்சி என அவர்களுக்கு தெரியும்.
எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் காங்கிரஸ் பலவீனமடையவில்லை. புதுவையில் பா.ஜனதா போணி ஆகாத கட்சி.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தனர். இந்தத் தேர்தலில் எத்தனை பேர் டெபாசிட் வாங்குவார்கள் என பார்க்க வேண்டும். மக்கள் காங்கிரஸ்-தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள். பதவியில் இல்லாமல் தேர்தலை சந்திக்க காங்கிரஸ்-தி.மு.க.வுக்கு பயம் கிடையாது. எங்கள் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. 2 எம்.எல்.ஏ. சென்றுவிட்டதால் ஆட்சி போனதாக அர்த்தமில்லை. பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறோம்.
பா.ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு சதிவேலையை கண்டிப்பாக முறியடிப்போம்.
தற்போது பதவி விலகியுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து கடுமையாக தொல்லைகளை கொடுத்தார். அவரை திட்டமிட்டு பழி வாங்கினார்.
அவர் தனது தொகுதி தொடர்பாக எந்த திட்டங்களை கொண்டு சென்றாலும் அதை கவர்னர் புறக்கணித்தார். அவருக்காக 4 ஆண்டுகளாக நானும் போராடினேன். மல்லாடி கிருஷ்ணாராவ் தற்போது வரை எங்களோடுதான் இருக்கிறார். அவரை சமரசப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

மேலும் அமைச்சரவை தாமாக முன்வந்து ராஜினாமா செய்வதை காட்டிலும் ஆட்சியை கவிழ்த்தால் புதுவை மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு அனுதாபம் கிடைக்கும் என்றும் காங்கிரசார் எண்ணுகின்றனர்.

நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் 2016-ம் ஆண்டு தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சி தொடர்கிறது.
புதுவை சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆட்சியை பிடிப்பதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக ஆளுங்கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை மேற்கொண்டது. அதன் பலனாக காங்கிரஸ் அமைச்சரவையில் 2-ம் இடம் வகித்து வந்த நமச்சிவாயம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.
இதற்கிடையே மற்றொரு அமைச்சரான மல்லாடிகிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
நேற்று முன்தினம் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகருக்கு அவர் கடிதம் அனுப்பினார். இதனால் காங்கிரஸ் அரசுக்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்தநிலையில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜான்குமார் புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
புதுவை சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் உள்ளனர். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்குரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உறுதிபடுத்தி உள்ளது.
இதுவரை 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ளனர். கட்சி தாவல்தடை சட்டத்தின்கீழ் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது.
இதில் பெரும்பான்மைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால் தற்போது ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு (சபாநாயகர் உள்பட) 10, தி.மு.க. 3, சுயேச்சை 1 என 14 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா (நியமனம்) 3 என 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அதாவது சட்டசபையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சமமான பலத்தில் உள்ளன.
எனவே பெரும்பான்மையை இழந்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு சென்று திரும்பிய பின் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், அதிமுக அன்பழகன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி கவர்னர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது செயலாளரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக தனது கடமையை செய்ததாக கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடிக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடந்த வாரம்கூட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து நேற்று திடீரென புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி.
புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன்.
Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
— Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021
The People of Puducherry and all the Public officials. 🙏 pic.twitter.com/ckvwJ694qq
தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி.
புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த பிராந்திய கல்வித்துறை அலுவலகங்களில் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினோ ஜெயராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 19-12-2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி கவுரவ பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், அராபிக்) பணிகளுக்கு 69 விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்பட்டு, அது கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறையின் தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த பிராந்திய கல்வித்துறை அலுவலகங்களில் வருகிற 19-ந்தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இன்று மதியம் புதுச்சேரி வருகிறார்.
புதுவை விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பின், சோலைநகருக்கு சென்று அங்கு மதியம் 1.30 மணி வரை மீனவப் பெண்களை சந்தித்துப் பேசுகிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளைச் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அதைத்தொடர்ந்து, பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் சென்னை வருகிறார்.

ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள் விலகி பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று முதல்வர் நாராணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,
ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான அதிகாரம், உரிமையை பறிக்கும் வகையில் கிரண்பேடி செயல்பட்டார். கிரண்பேடி இதுபோன்று செயல்பட்டதை மத்திய பாஜக அரசு ஊக்குவித்தது. புதுச்சேரி மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களையும் அவர் தடுத்து நிறுத்தினார்.
மக்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று கேட்டால் பணமாக கொடுங்கள் என்றார். பல கட்ட போராட்டங்கள் நாங்கள் நடத்திய பிறகே கிரண்பேடியை மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் புதுச்சேரி மக்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழிசை செயல்பட வேண்டும். ஆளுநர் யாராக இருந்தாலும் விதிகளையும், மீறக் கூடாது என்றார்.
இதேபோல் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தில்,
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கி, தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது வரவேற்கத்தக்கது என்றார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு, கிரண்பேடி இடையே மோதல் நிலவி வந்த நிலையில் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கிரண்பேடியை நீக்கக்கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்மையில் கடிதம் அளித்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் துணை நிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருக்கனூர் அருகே நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் ராஜாங்குளம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). மினி வேன் டிரைவர். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியா. இவர், விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கல்லூரிக்கு சென்று சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற பிரியா, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அய்யப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.