என் மலர்
செய்திகள்

மாயம்
திருக்கனூர் அருகே நர்சிங் மாணவி மாயம்
திருக்கனூர் அருகே நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் ராஜாங்குளம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). மினி வேன் டிரைவர். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியா. இவர், விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கல்லூரிக்கு சென்று சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற பிரியா, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அய்யப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story






