என் மலர்
நீங்கள் தேடியது "nursing student missing"
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). காய்கறி வியாபாரி. இவரது மகள் யோகஜோதி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த மாதம் 21-ந் தேதியன்று விடுதியில் இருந்து மாணவி மாயமாகி விட்டதாக அவரது தந்தைக்கு வார்டன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து முருகன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.
இந்நிலையில் மீண்டும் யோக ஜோதி விடுதிக்கு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து முருகன் விசாரித்தார். அதன் பின்பு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் நிலக்கோட்டை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கோர்க்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் இரிசப்பன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் சண்முகந்தரி (வயது19). தாய்-தந்தையை இழந்த சண்முகசுந்தரி தனது மாமா ஆனந்த பாலன் பராமரிப்பில் வில்லியனூர்-பெரம்பை ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சண்முகசுந்தரி திடீரென காணவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் சண்முகசுந்தரி இல்லை.
இதையடுத்து சண்முகசுந்தரி மாயமானது குறித்து ஆனந்தபாலன் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து சண்முகசுந்தரியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே வடமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் லட்சுமி (வயது18) இவர் பாகூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக லட்சுமி பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் லட்சுமி இல்லை. இதையடுத்து மாரிமுத்து தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முதல்கட்ட விசாரணையில் லட்சுமிக்கும் மருதூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியை அந்த வாலிபர் கடத்தி சென்றிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே மணலிப்பட்டு காலனி கோரைக்கேணி பாதை பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகள் அனுசுயா (வயது21). இவர் பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படித்து முடித்து தற்போது புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த அனுசூயா கடந்த சில நாட்களுக்கு முன்பு வார விடுமுறையில் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
சம்பவத்தன்று காலை அனுசுயா தனது பெற்றோரிடம் விடுதி சென்று விட்டு பின்னர் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அனுசுயா விடுதிக்கும் செல்லவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனை அறிந்த அவரது பெற்றோர் அனுசுயாவை உறவினர் வீடு மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர் ஆனால் எங்கும் அனுசுயா இல்லை.
இதையடுத்து வீரமுத்து தனது மகள் மாயமானது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆண்டிப்பட்டி அருகே எம்.சுப்புலாபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் திவ்யா (வயது19). தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற திவ்யா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதானல் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கண்டமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.






