என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சிங் மாணவி மாயம்"

    ஏற்கனவே மாயமான தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தார். அதன் பின்பு வீட்டில் இருந்த மாணவி மீண்டும் திடீரென மாயமானார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). காய்கறி வியாபாரி. இவரது மகள் யோகஜோதி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த மாதம் 21-ந் தேதியன்று விடுதியில் இருந்து மாணவி மாயமாகி விட்டதாக அவரது தந்தைக்கு வார்டன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து முருகன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

    இந்நிலையில் மீண்டும் யோக ஜோதி விடுதிக்கு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து முருகன் விசாரித்தார். அதன் பின்பு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் நிலக்கோட்டை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • வெளியே சென்ற நர்சிங் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி ஜே.கே.பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் உமா(17). இவர் பி.தருமத்துப்பட்டியில் உள்ள டிரஸ்டு மூலம் நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று டிரஸ்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

    ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலும் தேடிபார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    வில்லியனூர் அருகே வீட்டில் இருந்த நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது மாமா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் இரிசப்பன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் சண்முகந்தரி (வயது19). தாய்-தந்தையை இழந்த சண்முகசுந்தரி தனது மாமா ஆனந்த பாலன் பராமரிப்பில் வில்லியனூர்-பெரம்பை ரோட்டில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சண்முகசுந்தரி திடீரென காணவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் சண்முகசுந்தரி இல்லை. 

    இதையடுத்து சண்முகசுந்தரி மாயமானது குறித்து ஆனந்தபாலன் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டு ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து சண்முகசுந்தரியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வடமங்கலத்தில் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற நர்சிங் மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே வடமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் லட்சுமி (வயது18) இவர் பாகூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக லட்சுமி பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் எங்கும் லட்சுமி இல்லை. இதையடுத்து மாரிமுத்து தனது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    முதல்கட்ட விசாரணையில் லட்சுமிக்கும் மருதூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியை அந்த வாலிபர் கடத்தி சென்றிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கனூர் அருகே கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே மணலிப்பட்டு காலனி கோரைக்கேணி பாதை பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகள் அனுசுயா (வயது21). இவர் பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படித்து முடித்து தற்போது புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த அனுசூயா கடந்த சில நாட்களுக்கு முன்பு வார விடுமுறையில் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    சம்பவத்தன்று காலை அனுசுயா தனது பெற்றோரிடம் விடுதி சென்று விட்டு பின்னர் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அனுசுயா விடுதிக்கும் செல்லவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனை அறிந்த அவரது பெற்றோர் அனுசுயாவை உறவினர் வீடு மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர் ஆனால் எங்கும் அனுசுயா இல்லை.

    இதையடுத்து வீரமுத்து தனது மகள் மாயமானது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தக்கலை மற்றும் கோட்டாரில் நர்சிங் மாணவி, தொழிலாளி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் முருகன். பால்வெட்டும் தொழிலாளி. இவரது மகள் அனிஷா (வயது 21). இவர் நர்சிங் படித்துள்ளார்.

    இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்து நாகர் கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அனிஷா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    நாகர்கோவில் கோட்டார் பூசாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (41). தொழிலாளி. இவர் கடந்த மாதம் 15-ந்தேதி வீட்டில் இருந்து மதுரைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்றார். சில நாட்கள் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லை.

    இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தொழிலாளி நாராயணனை தேடி வருகிறார்கள்.
    ×