நிலக்கோட்டையில் நர்சிங் மாணவி மாயம்

ஏற்கனவே மாயமான தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விசாரித்தார். அதன் பின்பு வீட்டில் இருந்த மாணவி மீண்டும் திடீரென மாயமானார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). காய்கறி வியாபாரி. இவரது மகள் யோகஜோதி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த மாதம் 21-ந் தேதியன்று விடுதியில் இருந்து மாணவி மாயமாகி விட்டதாக அவரது தந்தைக்கு வார்டன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து முருகன் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

இந்நிலையில் மீண்டும் யோக ஜோதி விடுதிக்கு வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து முருகன் விசாரித்தார். அதன் பின்பு வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் நிலக்கோட்டை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com