என் மலர்
புதுச்சேரி
புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் 18-ந் தேதி அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல் பரவியது. ஆனால் 4 வாரமாக யாரும் ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில் நேற்று ஏனாம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டிருந்த காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை செய்து முக்கிய முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இரவோடு இரவாக புதுவைக்கு திரும்பிய ஜான்குமார் இன்று காலை தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சட்டசபை வளாகத்துக்கு வந்து சபாநாயகர் சிவகொழுந்துவிடம், ஜான்குமார் எம்.எல்.ஏ. தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ராஜினாமா குறித்து ஜான்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, எந்த பதிலும் சொல்ல மறுத்தார். புதுவை நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறினார்.
புதுச்சேரி:
புதுவையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதை தொடர்ந்து எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், பாஸ்கர், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் ஆகியோர் வந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், எம்.எல்.ஏ. செல்வகணபதி, ஏம்பலம் செல்வம் ஆகியோரும் வந்தனர்.
இதன்பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் வந்தனர். சிறிது நேரம் அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. தானாக முன்வந்து காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த அரசும் பதவி விலக வேண்டும்.
இந்த அரசு பதவி விலகாவிட்டால் எதிர்கட்சியினர் விவாதித்து முடிவெடுப்போம். ஒரு நிமிடம் கூட இந்த அரசு நீடிக்க முடியாது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து பதவி விலகுகின்றனர். இந்த ஆட்சி மீது அவர்களுக்கே அதிருப்தி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே புறக்கணிக்கப்படுகின்றனர்.
கடந்த 3 ஆண்டாக எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கூட தரவில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி எதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை.
இந்த ஆட்சி மிகவும் மோசமான அரசு. ஆள்வதற்கு லாயக்கற்ற அரசு. நாராயணசாமியின் முடியாது என்பதை எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார். மற்றவர்கள் மீது பழிபோடுவார். ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்கட்சியினர் எப்படி தடுக்க முடியும். எதிர்கட்சிகள் செயல்பட விடுவதில்லை என எங்கள் மீது குற்றம் சாட்டுவார்.
கவர்னர் மீது குற்றம் சாட்டுவார். திடீரென வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுவார். முரண்பட்ட கருத்துக்களை கூறுவது அவர் வழக்கம். அவர்கள் அளித்த வாக்குறுதிகளை கூட செயல்படுத்த முடிய வில்லை.
மோசமான நிலையில் புதுவை உள்ளது. ஒரு திட்டத்தைக்கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கசாமியிடம் ஆட்சி அமைக்க நீங்கள் உரிமை கோருவீர்களா? என நிருபர்கள் கேட்டபோது, முதலில் அவர்கள் பதவி விலகட்டும், பின்னர் பேசலாம் என தெரிவித்தார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
* புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது.
* இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும்.
* புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. பெரும்பான்மையை நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது.
சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்த நமச்சிவாயம் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தார். அவருடன் ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடேய அரசியலில் இருந்தே விலக போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்தார். 25 ஆண்டு எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஏனாம் பிராந்தியத்தில் பாராட்டு விழாவும், சட்டசபையில் விருதும் வழங்கப்பட்டது.
இதன்பின் தனது அமைச்சர் பதவியை மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பி வைத்தார். சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகம், புதுவையில் அரசு அளித்த வீடு, அரசு கார் ஆகியவற்றையும் மல்லாடிகிருஷ்ணாராவ் ஒப்படைத்திருந்தார்.
மேலும், தனது துறை சார்ந்த கோப்புகளையும் பார்க்கவில்லை. இருப்பினும், தன்னிடம் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் ஏதும் தரவில்லை என நாராயணசாமி மறுப்பு தெரிவித்தார். ராஜினாமாவை முதல்- அமைச்சர் நாராயணசாமி ஏற்காததால் அவர் பதவியில் நீடித்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவுக்கு மல்லாடிகிருஷ்ணராவ் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், இதுவரை தன்னிடம் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் வரவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து கூறியுள்ளார். மல்லாடி கிருஷ்ணாராவை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது போனை அவர் எடுக்கவில்லை.
புதுவையில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களில் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒரு தொகுதி காலியாக இருந்தது. தொடர்ந்து, நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் என காங்கிரசில் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 11 ஆக குறைந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 11, தி.மு.க. 3, அரசுக்கு ஆதரவு தரும் சுயேச்சை ஒருவர் என 15-ம், எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4 என 11 பேர் உள்ளனர். நியமன பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சேர்த்தால் எதிர்கட்சியில் 14 பேர் உள்ளனர்.
தற்போது புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 29 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும். காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க., சுயேட்சையுடன் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.
காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ. வாபஸ் பெற்றாலோ, மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாலோ காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தான் புதுவை திரும்பியதும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு புதுச்சேரி வருகிறார். புதுவை விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் சோலைநகருக்கு சென்று அங்கு மதியம் 1.30 மணி வரை மீனவப் பெண்களை சந்தித்து பேசுகிறார். அதன்பின் பாரதிதாசன் கல்லூரி மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பிற்பகல் 3 மணி அளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் சென்னை வருகிறார்.
புதுச்சேரி:
தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊழியர்களின் போராட்டத்துக்கு புதுவை சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த சுகாதார கூட்டு நடவடிக்கை குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய சுகாதார இயக்கக ஊழியர்களுக்கு ஆதரவாக கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு டெல்லிக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி சம்பளத்துடன் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
சுகாதார துறையில் 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை தேசிய சுகாதார இயக்க ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்திராகாந்தி அரசு தலைமை பொது மருத்துவ மனையில் போராட்டக்குழு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் தலைமை செவிலியர்கள், செவிலியர்கள், பிசியோ தெரபிஸ்ட், பைலேரியா, மலேரியா உதவியாளர்கள், கள பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களும் பங்கேற்றனர்.
இதேபோல எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, இ.எஸ்.ஐ., காசநோய், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நல வழி மையம் உள்ளிட்ட அனைத்திலும் சுகாதரத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதியடைந்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து சிறிய ரக விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி வருகிறார். புதுவை சோலைநகரில் மீனவ மக்களை சந்தித்து உரையாடுகிறார். அன்று மாலை 4 மணிக்கு ரோடியர் மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.






