என் மலர்
புதுச்சேரி
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள மணவெளி காசிவிசுவநாதர் நகரை சேர்ந்தவர் மதன் (வயது 20). ரவுடியான இவர், மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மதன் மோட்டார் சைக்கிளில் ஆரியபாளையம் அரசு சாராய ஆலை எதிரே வந்து கொண்டிருந்தார். அவரை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென்று மதனை வழிமறித்து சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. அவர் இறந்ததை உறுதி செய்த பிறகே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் மதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேலு (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையொட்டி வேலு தனது நண்பர்களுடன் சேர்ந்து மதனை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பதுங்கி இருந்த வேலு மற்றும் அவரது நண்பர் ரவுடியான கட்டவிஜி (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவை தொடர்ந்து இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது.
சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டி இழந்துள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் புதுச்சேரி கவர்னரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை வழங்கினர். இதில் 14 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இதற்கிடையே, இன்று புதுச்சேரி கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். இந்நிலையில், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் பிப்.22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமி அரசுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு உள்ளார்.
சட்டசபையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் முதலவர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வரும் 21-ம் தேதி காங்கிரஸ் கூட்டம் மீண்டும் நடைபெறும். ஆட்சிக் கழிப்பு வேலையில் எதிர்கட்சி தலைவர் ரெங்கசாமி தொடர்ந்து ஈடுபடுகிறார். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கை வந்த கலை.
தேர்தல் நேரத்தில் ஆட்சி கவிழ்ப்பை பாஜக தொடங்கியுள்ளது என கூறினார்.
ஆளுநர் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், வருகிற 21-ந்தேதி காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் அமைச்சரவையில் அங்கம் வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அமைச்சர் மற்றும் எல்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அ.ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரியில் 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், ஆளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு 16 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றிருந்தது.
அங்கு ஏற்கனவே ஒரு உறுப்பினரின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி காங்கிரஸின் பலம் 10 ஆக உள்ளது. அதன் கூட்டணியில் உள்ள திமுக 3, சுயேச்சை உறுப்பினர் 1 என கூட்டினால் ஆளும் கூட்டணியின் பலம் 14 ஆக இருக்கும்.
இதே சமயம், எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக நியமன உறுப்பினர்கள் 3 பேர் என அந்த அணிக்கும் 14 உறுப்பினர்களின் பலம் உள்ளது.
இத்தகைய சூழலில்தான் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு அப்பதவிக்கு தெலங்கானா மாநில ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை குடியரசு தலைவர் நியமித்தார்.
இதையொட்டி புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அவர் பதவியேற்கும் முன்பாகவே, துணை நிலை ஆளுநரின் செயலாளரை சந்தித்த எதிர்கட்சி கூட்டணியினர், ஆளும் நாராயணசாமி அரசுபெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனக்கோரும் மனுவை நேற்று அளித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழிசை செளந்தர்ராஜனை அவரது மாளிகையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஜக நியமன உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்டோர் சந்தித்து, தங்களுடைய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தப்பின்னணியில், துணைநிலை ஆளுநர் பொறுப்பை தமிழிசை ஏற்ற சில மணி நேரத்தில், முதல்வர் நாராயணசாமி அரசு வரும் 22ஆம் தேதி பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்று அவரது மாளிகைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘‘21-ந்தேதி காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதா முயற்சிக்கிறது. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. இது பா.ஜனதாவுக்கு கைவவந்த கலை’’ என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.
இதற்கிடையே புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
நாராயணசாமி தலைமையிலான அரசு பிப். 22 ந்தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி நடவடிக்கையாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் அரசு நிர்வாகம் தொடர்பாக ஆளுநருடன் விவாதித்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசு மெஜாரிட்டி நிருபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை அலசி ஆராய்ந்து சட்ட விதிக்கு உட்பட்டு செயல்படுவேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி நேற்று முன்தினம் திடீரென நீக்கப்பட்டார்.
புதுவை கவர்னர் பொறுப்பு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தமிழிசை புதுவைக்கு வந்தார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு அளிக்கப்பட்டு கவர்னர் மாளிகை அதிகாரிகள் வரவேற்றனர்.
இன்று காலை தமிழிசை புதுவை கவர்னராக பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவியேற்பு விழா நடந்தது. முதல் நிகழ்வாக தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், ஜனாதிபதியின் கவர்னர் நியமன அறிவிப்பை வாசித்தார்.
இதனைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழிசை தமிழில் உறுதி மொழி வாசித்து கவர்னராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
கவர்னர் மாளிகை முன்பு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் தமிழிசை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி
நாராயணன், அன்பழகன், சிவா, வையாபுரி மணிகண்டன், அனந்த ராமன், ஜெயமூர்த்தி, டி.பி.ஆர்.செல்வம், ஜெயபால், வெங்கடேசன், திருமுருகன், பாஸ்கர், சுகுமாறன், சந்திரபிரியங்கா, கோபிகா, சாமிநாதன், செல்வகணபதி, தங்க.விக்ரமன், பா.ஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, கவர்னரின் தனி செயலர் சுந்தரேசன், அரசு செயலர்கள் அசோக்குமார், சுந்தர வடிவேலு, கலெக்டர் பூர்வா கார்க், டி.ஜி.பி. ரன்வீர் சிங்கிருஷ்ணியா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன் மற்றும் அரசு துறை செயலர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுவையில் 26-வது கவர்னராக பதவியேற்ற தமிழிசை 5-வது பெண் கவர்னர் ஆவார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மொழி தெரிந்த மாநிலத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. புதுவைக்கு கவர்னராக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் சகோதாரியாக வந்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்டவன் அருளோடும், ஆள்பவர், தெய்வங்கள், தெலுங்கானா, தமிழகம், புதுவை மக்கள் ஆகியோரின் ஆசியோடு இங்கு வந்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளேன்.
தமிழில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தமிழில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று கேட்டபோது புதுவை சரித்திரத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுவை மக்களின் சேவகனாக, அவர்களோடு அன்போடு பழகுவதற்காக வந்துள்ளேன் என தெரிவிக்கிறேன். புதுமையாக பல நிகழ்வுகளை நடத்தி காண்பிக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணியுள்ளேன்.
தெலுங்கானாவில் கவர்னராக நியமிக்கப்பட்டபோது இளைய கவர்னர் மாநிலத்தை கையாள்வாரா? என கேள்வி எழுப்பினர். நான் ஒரு மகப்பேறு மருத்துவர். பிறந்த குழந்தையை கையாள தெரியும். இதன்படி சிறப்பாக ஒன்றை ஆண்டு கவர்னராக செயல்பட்டுள்ளேன்.
என் மீது நம்பிக்கை வைத்து புதுவை துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை குழந்தையாக இருந்தாலும், அவர்களை சரியாக பாதுகாப்பேன். மகிழ்ச்சியாக நான் சேவை செய்வேன்.

புதுவையில் தடுப்பூசி போடுவது குறைவு என அறிந்தது மன வருத்தம் அளிக்கிறது. 25 நாடுகள் நம் நாட்டின் தடுப்பூசி வாங்க காத்திருக்கின்றனர். நாம் தடுப்பூசி போட தயக்கம் காட்டக்கூடாது.
முதல் நிகழ்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் இடம் சென்று ஊக்கப்படுத்த உள்ளேன். ஏன் தடுப்பூசி போட வேண்டும் என நினைக்க வேண்டாம். நம் நாட்டில் போலியோ இல்லை.
ஆனால், நாம் சொட்டு மருந்து வழங்குகிறோம். நாம் தடுப்பூசி போட்டால்தான் கொரோனா வைரசை தடுக்க முடியும். முக்கிய பதவி வகிப்போர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முககவசம் அணிவது, கைகளை கழுவுவதை பின்பற்ற வேண்டும்.
கவர்னராக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டுள்ளளேன். 2-வதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு உதவித்தொகை வழங்க கையெழுத்திட்டுள்ளேன். ஒடுக்கப்பட்ட மக்களின் தலையெழுத்தை நல்லதாக மாற்றும் திட்டத்துக்கு கையெழுத்திட்டுள்ளேன்.
புதுவையில் வேலைவாய்ப்பு இல்லை ஆனால், நிலம் உள்ளது. தொழிற்சாலைகள், சுற்றுலாவை ஊக்கப்படுத்தினால் வேலைவாய்ப்பு பெருகும். எனவே தொழிற்சாலை வரவழைக்க முழு முயற்சி எடுப்பேன்.
எனக்கு கவர்னர் அதிகாரம், துணை நிலை ஆளுநர் அதிகாரம், முதல்வர் அதிகாரம், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரம், அதிகாரிகள் அதிகாரம் என்ன? என தெரியும். அனைத்தும் தெரிந்தே வந்துள்ளேன்.
புதுவை நலனுக்காக மட்டும் என் பணி இருக்கும். முன்னாள் கவர்னரை சந்தித்து நன்றி கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், பதில்களும் வருமாறு:-
கேள்வி:- எதிர்கட்சிகள் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடக்கோரி மனு அளித்துள்ளார்களோ?
பதில்:- மனு அளித்தது தெரியும். இனிமேல்தான் அந்த மனுவை பார்க்க உள்ளேன். பல தலைவர்கள் என்னை பார்க்க அனுமதி கேட்டுள்ளனர். நான் சமமானவள், பொதுவானவள்.
ஆளும் கட்சி, எதிர்கட்சி, பொதுமக்கள் பார்க்க நேரம் ஒதுக்குவேன். வித்தியாசம் பார்க்க மாட்டேன். எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை அலசி ஆராய்ந்து சட்ட விதிக்கு உட்பட்டு செயல்படுவேன்.
கே:- மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. ஆனால் புதுவையில் ரேஷன்கடைகள் இல்லையே?
ப:- புதுவைக்கு வந்ததும் மக்களின் பொருளாதார நிலை என்ன? என கேட்டேன். வறுமைக்கோடுக்கு கீழ், வறுமைக்கோட்டிற்கு மேல் மக்கள் வாழ்கின்றனர். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை சிறிய மாநிலம். மக்கள் தொகையும் குறைவு.
இங்குள்ளவர்கள் வசதியாக வாழ்கின்றனர் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் புதுவையில் பாமர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பசியோடு வாடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். திட்டங்களை ஆய்வு செய்து முடிவு செய்வேன். நான் எடுக்கும் முடிவு மக்களுக்கான முடிவாக இருக்கும்.
கே:- கவர்னர் மாளிகை சுற்றிலும் அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்படுமா?
ப:- மக்களுக்கும், எனக்கும் சாதாரண இடைவெளி கூட இருக்கக்கூடாது என நினைப்பவள். கொரோனா உச்சத்தில் இருந்தபோதுகூட பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை ஊக்கப்படுத்தி உள்ளேன். மக்களுக்கும் எனக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்காது, தடுப்பும் இருக்காது. மக்களோடு உள்ள நெருக்கம் தொடரும்.
கே:- புதுவையில் தமிழ் அதிகாரிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளார்களே?
ப:- தமிழ் புறக்கணிக்கப்படவில்லை, ஆராதிக்கப்படுகிறது. தமிழ் மகுடம் சூடும். தமிழில்தான் பதவியேற்றுள்ளேன். தமிழுக்கு அதிகாரம் கிடைக்கும். தமிழிசை கவர்னராக இருக்கும்போது தமிழ் கோலோச்சும். தற்போதுதான் வந்துள்ளேன். அதிகாரிகள் தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுப்பேன்.
கே:- கவர்னர், முதல்-அமைச்சர் மோதலால் அதிகாரிகள் யார் பேச்சை கேட்பது என தெரியாமல் குழம்பியுள்ளனர். இனி அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவார்களா?
ப:- அவரவர்களுக்கு ஒரு பாணி இருக்கும். எனது பாணி தனியானது. மற்றவர்களின் பாணியை விமர்சனம் செய்யமாட்டேன். இனிமேல் இணக்கமான சூழ்நிலை இருக்கும். அனைவரின் அதிகாரமும் எனக்கு தெரியும். அவரவர் அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் உரிமைகள் பாதுகாக்கப்படும். யாரும் ஒடுக்கப்பட மாட்டார்கள், தடுக்கப்படமாட்டார்கள்.
கே:- பதவியேற்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு இடம் தரவில்லையே?
ப:- என் மனதிலும் இடம் உண்டு, கவர்னர் மாளிகையிலும் இடம் உண்டு. புதுவையில் நீங்கள் எங்கு சென்றாலும் இடம் உண்டு. ஒரு நல்ல அரசியல்வாதி, நல்ல பத்திரிகையாளர்தான் மக்களுக்கு நல்ல சேவை செய்ய முடியும். அசவுகரியம் நடந்திருந்தால் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.
கே:- கவர்னர், முதல்-அமைச்சர் மோதல் நீடிக்குமா?
ப:- என் பாணி தனியானது என கூறிவிட் டேன். சட்டவிதிக்கு உட்பட்டு செயல்படுவேன். பிரச்சனை ரீதியாகத்தான் எதனையும் அணுகுவேன். எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. என் பாணி சுமூகமானதாக இருக்கும். மக்கள் பயன்படும் வகையில் செயல்படுவேன்.
கே:- துணை ராணு படை பாதுகாப்பு போடப்பட்டு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனால், போலீசாருக்கு 13-வது சம்பளம்கூட கிடைக்கவில்லை?
ப:- நான் இப்போதுதான் வந்துள்ளேன். அதைப்பற்றி பார்க்கிறேன்.
கே:- சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ் தெரிந்த உங்களை நியமித்துள்ளார்களா?
ப:- தமிழ் பேசும் இடத்துக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை நியமித்ததில் எந்த உள்அர்த்தமும் இல்லை, அரசியலும் இல்லை. உள்ளார்த்தமாக வந்துள்ளேன், உள் அர்த்தத்தோடு வரவில்லை.
கே:- அரசுக்கும், கவர்னர் மாளிகைக்கும் இடையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதே?
ப:- நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை பற்றி நாம் முடிவெடுக்க முடியாது. வழக்கை எப்படி கொண்டுசெல்ல வேண்டும் என ஆலோசித்து முடிவெடுப்போம்.
கே:- கிரண்பேடி போல நீங்களும் மக்களை தொடர்ந்து சந்திப்பீர்களா?
ப:- நான் கவர்னராக இல்லாமல், கட்சி தலைவராக இருந்தபோது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்களை சந்தித்தேன். தெலுங்கானா கவர்னர் மாளிகை பிரஜா மாளிகையாக மாறியுள்ளது. மக்களை சந்தித்து பழக்கம் உள்ளவள் நான். அதனால் அவசர நிலையில் இருப்பவர்கள்கூட என்னை நேரடியாக அணுகலாம். எனது மக்கள் சந்திப்பு எப்போதும்போல தொடரும்.
கே:- ஆட்சியாளர்கள் கவர்னர் நிதியை தடுத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்களே?
ப:- முன்னாள் இருந்தவர்களின் நடவடிக்கையை விமர்சிக்கமாட்டேன். என் பாணி மாறுபட்ட பாணியாக இருக்கும். நான் தடுத்து பழக்கப்பட்டவள் அல்ல, அன்பை கொடுத்தே பழக்கப்பட்டவள் நான். சாமானிய மக்களுக்கான என்னுடைய பணி தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுவைக்கு வந்தவுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன். நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை புதுவையில் வழங்கி வருகிறோம். நம் நாட்டு விஞ்ஞானிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.

பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* துணைநிலை கவர்னராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்.
* தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.
* பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.
* கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.
* கவர்னர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன்.
* நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அளித்த புகார் குறித்து ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன்.
* கவர்னரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

புதுவை துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றபோது தமிழில் உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஓரிரு நாளில் புதுவையில் இருந்து வெளியேறுவேன் என்றும் தனது பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டார்.
புதுவை கவர்னர் பொறுப்பு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுவை கவர்னர் பொறுப்பை ஏற்க நேற்று மாலை தமிழிசை புதுவை வந்தார்.
அதற்கு முன்னதாக பதவி நீக்கப்பட்ட கிரண்பேடியை வழியனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதுவை போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிருஷ்ணியா தலைமையில் கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனை ஏற்ற கிரண்பேடி கவர்னர் மாளிகை எதிரில் தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுவையில் இருந்து விடை பெறுவதாகவும் புதுவை மக்கள் நல்லவர்கள் என்றும் புதுவை இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
மேலும், இன்னும் ஓரிரு நாளில் புதுவையில் இருந்து வெளியேறுவேன் என்றும் தனது பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.
வழக்கமாக பதவியை விட்டு வெளியேறும் கவர்னர்கள் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தவுடன் கவர்னர் மாளிகையை விட்டு உடனடியாக வெளியேறுவார்கள். ஆனால், கிரண்பேடி கவர்னர் மாளிகையில் 2 நாட்கள் தங்குகிறார். அங்கு உள்ள விருந்தினர் அறையில் அவர் தங்கியுள்ளார்.

புதுவையில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை தவறாக மொழிபெயர்த்ததாக கூறும் குற்றச்சாட்டை நாராயணசாமி மறுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி வந்த ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய மீனவ பெண் ஒருவர், ‘எங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவே இல்லை. அப்படியே இருக்கிறது. இயற்கை சீற்றங்களால் கடும் பாதிப்பை சந்திக்கிறோம். புயலின் போது பல சிரமங்களை எதிர்கொண்டோம். உங்கள் முன்னால் இருக்கும் முதல்வர் நாராயணசாமி கூட எங்களை வந்து சந்திக்கவில்லை’ என்று குறை கூறினார்.
அந்தப் பெண் என்ன கூறுகிறார் என்று ராகுல் காந்தி, தன் அருகில் நின்றிருந்த முதல்வரிடம் கேட்டபோது, ‘அவர் நிவர் புயல் குறித்த தருணங்களை பற்றி பேசுகிறார். நான் அப்போது அவர்களை வந்து சந்தித்தேன். அது குறித்து தான் கூறுகிறார்’ என்று நாராயணசாமி மாற்றி கூறினார்.
அரசு மீதான குற்றச்சாட்டை நேரடியாக முதல்வர் நாராயணசாமி கூறாமல், பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தியிடம் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக தலைவர்கள் பலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நாராயணசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாராயணசாமி தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நாராயணசாமியின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புரளி செய்தியில் அப்பெண் கூறியது முற்றிலும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பதற்கான சான்றை இப்புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். முத்தியால்பேட்டை மற்றும் ராஜ்பவன் தொகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, மனித உயிர்கள், விலங்குகள் மற்றும் படகு, இயந்திரம் போன்ற சொத்துக்களின் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும் அப்பெண், நிவர் வந்த பொழுது முதல்வர் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் வந்து பார்க்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் கூறியபொழுது, நாராயணசாமி அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் முறையில் ராகுல்காந்தி அவர்களிடம் நான் வந்தேன் என்று மாற்று மொழியில் பதிலளித்தார். அவர் தவறாக மொழி பெயர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாராயணசாமி அவர்கள் புயல் மற்றும் கொரோனா காலத்தில் மக்களிடையே சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறியும் ஒரு சிறந்த முதலமைச்சராக விளங்கியது புதுவை மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு கவர்னராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5வது பெண் கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

புதுவையில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி அப்படியே கூறாமல் பதில் அளிக்கும் வகையில் மாற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மீனவர்களுக்கு ஆதரவாக பேசிய அவர், அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன். அப்போதுதான் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும், என்றார். அதன்பின் மீனவர்களின் குறைகள் குறித்து கேட்டார்.
அப்போது பேசிய மீனவ பெண் ஒருவர், ‘எங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவே இல்லை. அப்படியேதான் இருக்கிறது. புயலின் போது பல சிரமங்களை எதிர்கொண்டோம். உங்கள் முன்னால் இருக்கும் முதல்வர் நாராயணசாமி கூட எங்களை வந்து சந்திக்கவில்லை’ என்று குறை கூறினார்.
அந்தப் பெண் என்ன கூறுகிறார் என்று ராகுல் காந்தி, தன் அருகில் நின்றிருந்த முதல்வரிடம் கேட்டபோது, ‘அவர் நிவர் புயல் குறித்த தருணங்களை பற்றி பேசுகிறார். நான் அப்போது அவர்களை வந்து சந்தித்து நிவாரணம் வழங்கினேன். அது குறித்து தான் கூறுகிறார்’ என்று நாராயணசாமி கூறினார்.
அரசு மீதான குற்றச்சாட்டு குறித்து நேரடியாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறாமல், ராகுல் காந்தியிடம் மாற்றி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக தலைவர்கள் பலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நாராயணசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை பொறுப்பு ஏற்க உள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்க உள்ளார் என்று தெலுங்கானா கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.