என் மலர்
புதுச்சேரி
காலாப்பட்டில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
பெரிய காலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது இளைய மகள் உம்மு சல்மா (வயது 19).
இவர் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால் உம்மு சல்மா விரக்தியில் இருந்து வந்தார். மேலும் உம்மு சல்மாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனாலும் உம்மு சல்மா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று உம்மு சல்மா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கணவர் சக்திவேல் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் அவர் வீட்டில் நைலான்கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உம்மு சல்மாவின் தந்தை அப்துல் சமது கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உருவையாறு- வில்லியனூர் ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே ஒரு வாலிபர் அந்த வழியாக சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிக்கொண்டு இருந்தார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை- நாவற்குளம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இடை யூறாக ஒரு கும்பல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தகராறு செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்ட 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கருவடிகுப்பம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த பச்சையப்பன் (வயது 23), நாவற்குளம் குரு சித்தானந்தா தெரு சீனிவாசன் (44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பச்சமுத்து (73) என்பதும், இவர்கள் அங்குள்ள ஓம்சக்தி கோவில் நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் தகராறு செய்து தாக்கிக் கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது ரோந்து சென்ற மங்கலம் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூடப்பாக்கம் அருகே உள்ள சேந்தநத்தம் மகாலட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (20) என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அரவிந்தை போலீசார் கைது செய்தனர்.

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 126 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 98 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது 195 பேர் ஆஸ்பத்திரி களிலும், 777 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுவையில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 49 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.71 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 10 பேரும், முன்கள பணியாளர்கள் 3 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 890 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 90 ஆயிரத்து 890 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 2 பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள். 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதுமட்டுமின்றி 2 குழந்தைகள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லியனூர் அருகே புதரில் மறைத்து வைத்து இருந்த குண்டு வெடித்து பெண் ஒருவர் கை சிதைந்தது.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம்-வில்லியனூர் மெயின்ரோட்டில் பால் சொசைட்டி உள்ளது. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது.
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அதற்குள் வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நள்ளிரவில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று இதுபற்றி பேசிக் கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் ஒரு கும்பல் திருட முயன்றது. அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். ஆனால் அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர். அவர்கள் தான் மிரட்டும் வகையில் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்று இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் வில்லியனூர் அருகே புதரில் மறைத்து வைத்து இருந்த குண்டு வெடித்து பெண் ஒருவர் கை சிதைந்தது. அதைத்தொடர்ந்தும் புதுவையில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

போலீசார் சோதனை நடத்த வருவதை எப்படியோ அறிந்துகொண்ட போலி மதுபான ஆலையில் இருந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சாலை பச்சூர் தில்லை நகரில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு போலியாக மதுபான ஆலை இயங்கி வருவதாக மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன், காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்றனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே கதவை உடைத்து அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அங்கு பெட்டி பெட்டியாக 252 லிட்டர் போலி மதுபான பாட்டில்களும், கேன்களில் 1,100 லிட்டர் எரிசாராயமும், போலி மதுபான பாட்டில்களுக்கு பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள், லேபிள், தமிழக டாஸ்மாக் ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை மூட்டைகளில் இருந்தன.
இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த குடோனை சோதனை செய்தபோது, போலி மதுபான பாட்டில்களை தமிழகத்திற்கு கடத்துவதற்கு தயார் நிலையில் இருந்த ஒரு வேனும், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த போலி வாகன நம்பர் பிளேட்டுகளும் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் இந்த போலி மதுபான குடோனில் இருந்து வேனில் மதுபாட்டில்கள் காரைக்கால் அம்பாள் சத்திரம் அருகே கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வேனை சுற்றிவளைத்தனர். ஆனால் இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிரைவர், பாதி வழியிலேயே வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அந்த வேனை சோதனை செய்தபோது அதில் ஆயிரக்கணக்கான போலி மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த 2 சம்பவங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், மதுபாட்டில்கள், வேன்களின் மொத்தம் மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நெடுங்காட்டைச் சேர்ந்த சாராய வியாபாரி நிர்மல் நடராஜன் என்கிற அப்பு (வயது 45) மற்றும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சரண்ராஜ் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் தெரியவந்ததால், மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
பாகூர்:
கரையாம்புத்தூர் அடுத்த மணமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 23). இவர், அதே பகுதியில் சி.டி.கடை நடத்தி வருகிறார். இவருக்கும், 17 வயது மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை சரண்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சரண்ராஜ், வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் தெரியவந்ததால், மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்தார்.
அதன்பேரில் பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரண்ராஜை வலைவீசி தேடி வந்தநிலையில் மண்மேடு பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த அவரை கைது செய்தனர்.

புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.75 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5,124 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 113 பேருக்கு தொற்று உறுதியானது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 189 பேர், வீடுகளில் 734 பேர் என தனிமைப்படுத்தப்பட்டு 923 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 98 பேர் குணமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.
அதாவது காரைக்காலில் நேதாஜி நகரை சேர்ந்த 51 வயது ஆண் பலியானார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,791 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.75 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன் தினம் சுகாதார பணியாளர்கள் 5 பேர், முன்கள பணியாளர் ஒருவர், பொதுமக்கள் 4 ஆயிரத்து 135 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 6 லட்சத்து 82 ஆயிரத்து 986 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 3 பேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 2 குழந்தைகள் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும் என புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய விலை கொடுத்து, இஸ்ரேல் மென்பொருளை வாங்கி நமது நாட்டில் பலரின் மொபைல் போன் பேச்சை ஒட்டுக்கேட்டுள்ளது.
மத்திய அரசு மென்பொருளை பயன்படுத்தி பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளது.

வெளிப்படையான விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும்.
புதுவையில் தற்போது குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த அரசு மக்களைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.
புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய விலை கொடுத்து, இஸ்ரேல் மென்பொருளை வாங்கி நமது நாட்டில் பலரின் மொபைல் போன் பேச்சை ஒட்டுக்கேட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் உட்பட அதிகாரிகள், அரசியல்வாதிகள் மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட தகவல் நாட்டை உலுக்கியுள்ளது.
இப்பிரச்சனை பாராளுமன்றத்திலும் வெடித்துள்ளது. நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 6 நாட்கள் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் கவலை கொள்ளவில்லை.
இப்பிரச்சனை பாராளுமன்றத்திலும் வெடித்துள்ளது. நிலைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 6 நாட்கள் பாராளுமன்றம் முடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் கவலை கொள்ளவில்லை.
மத்திய அரசு மென்பொருளை பயன்படுத்தி பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளது.
புதுவையில் ஆட்சி கவிழ்ப்பு சம்பவத்தில் எனது செல்போன் ஒட்டு கேட்பே காரணம் என சந்தேகப்படுகிறேன். மொபைலில் பேசும் போது எனக்கு சமிக்ஞைகள் தெரிந்தது.

புதுவையில் தற்போது குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
காந்தி வீதி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த அரசு மக்களைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
புதுவையில் புதிதாக 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில், தொற்று பாதித்த 5 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 766 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 173 பேர், வீடுகளில் 736 பேர் என 909 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று 98 பேர் குணமடைந்தனர். அதேநேரத்தில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்த 59 வயது ஆண் பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,790 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 7 குழந்தைகள் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 3 பேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள், 2 பேர் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.76 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 791 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரத்து 446 ேடாஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.

முதலியார்பேட்டையில் மதுகுடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் சுரேஷ் என்ற சுப்புராயன்(வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் சுரேஷ் தனது தாய் ஜோதி மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே மது குடிக்கும் பழக்கமுள்ள சுரேஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் தாயிடம் பணம் வாங்கி மதுகுடித்து வந்தார்.
இந்தநிலையில் அதுபோல் நேற்று மது குடிக்க சுரேஷ் தாயிடம் பணம் கேட்டார். ஆனால் ஜோதி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தாயிடம் சுரேஷ் தகராறு செய்தார்.
இதையடுத்து ஜோதியும் அவரது மகளும் வீட்டின் ஒரு அறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். இதனால் மனமுடைந்த சுரேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டு வராண்டாவில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரைக்காலில் ஏற்கனவே 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நலவழித்துறை, சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. காரைக்காலில் ஏற்கனவே 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுதவிர தற்போது கூடுதலாக 15 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி நலவழித்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத முதியவர்கள், நோயாளிகள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்த பணியை காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
புதுச்சேரி:
கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக காரைக்கால் கோவில் நகரத்தை உடான் திட்டத்தின்கீழ் கொண்டு வருவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார்.

மேலும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, இரவு நேரங்களில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக விமான ஓடுதள பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் பேசினார்.

ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக காரைக்கால் கோவில் நகரத்தை உடான் திட்டத்தின்கீழ் கொண்டு வருவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தது புதுச்சேரி பல்கலைக்கழகம்