என் மலர்
புதுச்சேரி
புதுவையில் கொரோனா பாதிப்பு என்பது சோதனை எண்ணிக்கையில் 1.36 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 81 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 167 பேர், வீடுகளில் 721 பேர் என 888 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றைய தினம் 100 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் புதிதாக உயிரிழப்பும் பதிவாகவில்லை.
புதுவையில் கொரோனா பாதிப்பு என்பது சோதனை எண்ணிக்கையில் 1.36 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 8 பேரும், முன்கள பணியாளர்கள் 5 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 896 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 992 டோஸ் தடுப் பூசிகள் போடப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு தடை விதித்து இருப்பதால் சங்கராபரணி ஆற்றின் கரையில் தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது.
புதுச்சேரி:
ஆடி மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். ஆடி மாதம் முழுவதும் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் என பெரிய விசேஷங்கள் வருவதோடு, கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை நினைத்து விரதமிருந்து வணங்குவதற்கான மிக உகந்த நாள். இந்த நாளில் கடல், ஆறு, குளம் என நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே கொரோனா தாக்கமும் அதிகரித்து வருகிறது. எனவே நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்தநிலையில் புதுவையில் உள்ள புனிததலமான திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான தனி அதிகாரி சீத்தாராமன் கூறுகையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு தடை விதித்து இருப்பதால் சங்கராபரணி ஆற்றின் கரையில் தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது என்றார்.
இதுகுறித்து புதுச்சேரி வருவாய்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘புதுவை கடற்கரையில் தற்போது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட இன்னும் அனுமதி வழங்கவில்லை. எனவே கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை’ என்றார்.

புதுவை மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் புதுவை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு 3-வது அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசி விகிதம், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை ஆகியவை குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
புதுவை மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் 100 சதவீத இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேல் விடுபட்டவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்காக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொற்று பரவலுக்கான பிற காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். மனித சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி கொரோனா பரிசோதனைகளையும் அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிறிஸ்னியா, உள்ளாட்சித்துறை செயலாளர் வல்லவன், செய்தித்துறை செயலாளர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் அருண், பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, கொரோனா மேலாண்மை பொறுப்பு அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி சாயிரா பானு, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புதுவையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சரிந்த நிலையில் இருந்ததால் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் தற்போது திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 100-க்கும் கீழே இருந்தது. ஆனால் நேற்று 120 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதுமட்டுமின்றி ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்று காலை 10 மணி யுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 868 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 162 பேரும், வீடுகளில் 745 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 95 பேர் குணமடைந்தனர்.
மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெயின்போ நகரை சேர்ந்த 72 வயது மூதாட்டியும், ஜிப்மரில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டியும், காரைக்காலை சேர்ந்த 30 வயது பெண்ணும் பலியாகி உள்ளனர்.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.77 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 5 பேரும், முன்கள பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 165 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 18 ஆயிரத்து 362 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது, தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி ஆகும்.
புதுச்சேரி:
சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாய்ப்பால் வார விழா கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொண்டாடப்படுகிறது. குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கக் கூடியது, தாய்ப்பால் கொடுப்பது நாம் குழந்தைக்கு கொடுக்கும் முதல் தடுப்பூசி ஆகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளரும்போது உடல்பருமன் நோய், சர்க்கரை நோய், ஒவ்வாமை நோய் போன்றவை ஏற்படுவது மிகக்குறைவு.
குழந்தைக்கு தண்ணீர், சர்க்கரை, தேன், கழுதைப்பால், புட்டிப்பால் கொடுக்க கூடாது. பிறந்த குழந்தைக்கு சீம்பால் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தையை பல வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. அதனால் குழந்தைக்கு கட்டாயம் சீம்பாலை கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறது. தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மிக இன்றியமையாததாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் கீரை, பருப்பு, பால், காய்கறி வகைகளை சாப்பிடுதல் அவசியமாகும். தாய்ப்பால் கொடுக்கும் முன் பால், பழச்சாறு அல்லது நீர் ஆகாரமும் அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடலுக்கு நல்லது. தாய்க்கு மனக்கவலை அல்லது அதிர்ச்சி ஏற்பட்டால் பால் சுரப்பது குறையும். அதனால் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் 182 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 762 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 92 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.74 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 498 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 208 டோஸ் தடுப்பூசிபோடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதையும் மீறி கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அருண், வல்லவன், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா பொறுப்பு அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்பதால் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கவேண்டாம் என்று சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அதன்பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது;-
புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கொரோனா 3-வது அலை எப்போது வரும் என்று தெரியாத சூழ்நிலையில், தற்போது 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள், 10 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இதுவரை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.
முதலில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில் 85 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்காக வருகிற 11, 12, 13-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
பின்னர் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக வரும் 15-ந் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். ஏனெனில் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்கிறார்கள். எனவே இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. இதற்காக தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதையும் மீறி கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை கண்காணிக்க குழு அமைக்கப்படும். கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க தனியாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் குணமடைவது 96.71 சதவீதமாகவும், இறப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது புதுச்சேரியில் 78 பேரும், காரைக்காலில் 6 பேரும், மாகியில் 3 பேரும், ஏனாமில் 3 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 179 பேரும், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு 803 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 70 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 15 லட்சத்து 4 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 12 லட்சத்து 86 ஆயிரத்து 67 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,795 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரியில் குணமடைவது 96.71 சதவீதமாகவும், இறப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 12 பேரும், முன்கள பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 5 ஆயிரத்து 938 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 7 லட்சத்து 9 ஆயிரத்து 529 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி திருவிழா மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தகவலை புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் அருண் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் வந்துள்ளது. எனவே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 16-ந் தேதி முதல் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதற்கிடையே தற்போது கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் வந்துள்ளது. எனவே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து நாளை (அதாவது இன்று) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். புதுவையில் இந்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம். வகுப்பறைகள் நீண்ட காலமாக மூடிக்கிடக்கின்றன. எனவே அவற்றை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் பாடம் கற்பதற்கு ஏற்ற வகையில் வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். பள்ளிகளை திறக்கும்போது வகுப்புகளை எவ்வாறு நடத்துவது, பின்பற்ற வேண்டிய கொரோனா விதிமுறைகள், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகத்தை எப்போது தொடங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் தற்போது அது போன்ற எண்ணம் இல்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
புதுச்சேரி:
புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய தளர்வுகளின்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம். சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 50 சதவீதம் பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் குணமடைவது 97.71 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 90 பேருக்கு தொற்று உறுதியானது.
தற்போது 189 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 790 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 82 பேர் குணமடைந்தனர்.
அதேநேரத்தில் காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் 62 வயது மூதாட்டி பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,793 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் குணமடைவது 97.71 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது. அதேசமயம் 5 வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தை தொடர் சிகிச்சையில் உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என தலா 4 பேரும், பொதுமக்கள் 4 ஆயிரத்து 707 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 624 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.