search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுவையில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு

    புதுவையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சரிந்த நிலையில் இருந்ததால் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் தற்போது திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 100-க்கும் கீழே இருந்தது. ஆனால் நேற்று 120 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அதுமட்டுமின்றி ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    நேற்று காலை 10 மணி யுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 868 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 162 பேரும், வீடுகளில் 745 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 95 பேர் குணமடைந்தனர்.

    மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெயின்போ நகரை சேர்ந்த 72 வயது மூதாட்டியும், ஜிப்மரில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டியும், காரைக்காலை சேர்ந்த 30 வயது பெண்ணும் பலியாகி உள்ளனர்.

    புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.77 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 5 பேரும், முன்கள பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 165 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 18 ஆயிரத்து 362 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×