search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "schools opening"

    • பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.
    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பள்ளித் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதிக்குள் முடிகிறது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வு முடிந்ததும் 1-முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படுகிறது.

    இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி விட்டது. அரசு பள்ளிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் மற்றும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை விட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஏப்ரல் 13-ந் தேதியுடன் முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது.

    அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படுகிறது.


    மேலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் விரைவாக தேர்வை நடத்தி கோடை விடுமுறை அளிக்க கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு வெயில் தாக்கம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்பதால் பள்ளி திறப்பதை தள்ளி வைக்க ஆலோசிக்கப்படுகிறது. ஜூன் 2-வது வாரத்தில் அதாவது 10-ந் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 4-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தள்ளிப்போகும். அரசின் உத்தரவையொட்டி இந்த முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    • செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் நாளை திறக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

    செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது.

    • புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • இதனால் அங்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவையிலும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, துணை இயக்குனர் சிவகாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் யோசனை கூறப்பட்டது.

    இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனையின்பேரில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் ஜூன் மாதம் 7-ம் தேதி திறக்கப்படும். புதுவையில் உள்ள 127 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளி திறக்கும் நாளில் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என தெரிவித்தார்.

    பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.

    1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளன. ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் பாட புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் 9 ஆயிரம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் பாட புத்தகங்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் 3 இடங்களில் பள்ளி பாட புத்தகங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரமணி பாட நூல்-கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் ஆகிய இடங்களில் பாட புத்தகங்களை பெறலாம்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 95 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். #JactoGeo
    திண்டுக்கல்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வந்தனர்.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பிப்ரவரி 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பங்கேற்கவில்லை.

    திண்டுக்கல்லில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 160 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்து போலீசார் தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    நேற்று 80 சதவீத பள்ளிகள் இயங்கிய நிலையில் இன்றும் வழக்கமாக பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 3,497 ஆசிரியர்களில் 2894 பேர் பணிக்கு வந்தனர். 553 ஆசிரியர்கள் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1486 ஆசிரியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பினர்.

    அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 3567 பேரில் 2847 பேர் பணிக்கு வந்தனர். 484 ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1614 ஆசிரியர்களில் 5 பேர் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதே போல் தேனி மாவட்டத்தில் 6092 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று வகுப்புகளில் பங்கேற்றனர்.  #JactoGeo
    கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 32 மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதிய பாடத்திட்டம், கல்வி கட்டணம், நீட் தேர்வு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி, தனியார் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை எப்படி நிறைவு செய்வது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    கோடை வெப்பத்தை பொறுத்தவரை சென்னை உள்பட சில மாவட்டங்களில் இருக்கிறதே தவிர, பிற மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெப்பம் தணிக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டியது இருக்கிறது.

    எனவே கோடை விடுமுறைக்காக கூடுதல் நாட்களை நாங்கள் தள்ளிப்போட்டால் இந்த பாடத்திட்டங்களை படிக்க மாணவர்களுக்கு ஏதுவாக இருக்காது. எனவே ஜூன் 1-ந் தேதியில் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும், இவ்வளவு தான் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தி அந்த கட்டணங்கள் பெயர் பலகைகளில் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் நிலைகளை மனதில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இந்த ஆய்வுக்குழு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    உள்கட்டமைப்புகள், கழிப்பிட வசதிகள், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் தொடங்கிய உடனேயே பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் வருகிற 1-ந் தேதி முதலே மாணவர்களுக்கான 4 சீருடைகள் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×