search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
    X

    திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 32 மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதிய பாடத்திட்டம், கல்வி கட்டணம், நீட் தேர்வு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி, தனியார் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை எப்படி நிறைவு செய்வது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    கோடை வெப்பத்தை பொறுத்தவரை சென்னை உள்பட சில மாவட்டங்களில் இருக்கிறதே தவிர, பிற மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெப்பம் தணிக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டியது இருக்கிறது.

    எனவே கோடை விடுமுறைக்காக கூடுதல் நாட்களை நாங்கள் தள்ளிப்போட்டால் இந்த பாடத்திட்டங்களை படிக்க மாணவர்களுக்கு ஏதுவாக இருக்காது. எனவே ஜூன் 1-ந் தேதியில் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும், இவ்வளவு தான் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தி அந்த கட்டணங்கள் பெயர் பலகைகளில் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் நிலைகளை மனதில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இந்த ஆய்வுக்குழு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    உள்கட்டமைப்புகள், கழிப்பிட வசதிகள், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் தொடங்கிய உடனேயே பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் வருகிற 1-ந் தேதி முதலே மாணவர்களுக்கான 4 சீருடைகள் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×