search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை 15 லட்சத்தை தாண்டியது

    புதுச்சேரியில் குணமடைவது 96.71 சதவீதமாகவும், இறப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது புதுச்சேரியில் 78 பேரும், காரைக்காலில் 6 பேரும், மாகியில் 3 பேரும், ஏனாமில் 3 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 179 பேரும், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு 803 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 70 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இதுவரை 15 லட்சத்து 4 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 12 லட்சத்து 86 ஆயிரத்து 67 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,795 பேர் பலியாகியுள்ளனர்.

    புதுச்சேரியில் குணமடைவது 96.71 சதவீதமாகவும், இறப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 12 பேரும், முன்கள பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 5 ஆயிரத்து 938 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 7 லட்சத்து 9 ஆயிரத்து 529 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×