search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    காரைக்கால் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி பணி

    காரைக்காலில் ஏற்கனவே 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நலவழித்துறை, சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. காரைக்காலில் ஏற்கனவே 13 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுதவிர தற்போது கூடுதலாக 15 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி நலவழித்துறை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத முதியவர்கள், நோயாளிகள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்த பணியை காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×