என் மலர்
புதுச்சேரி
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவன் மகள் வசந்தியை நமச்சிவாயம் திருமணம் செய்துள்ளார். இதனால் அமைச்சர் நமச்சிவாயம், முதல்- அமைச்சர் ரங்கசாமியின் மருமகன் ஆவார்.
14 ஆண்டுக்கு பிறகு நேற்று வில்லியனூர் மணவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.

பின்னர் ரங்கசாமி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். தாத்தா நீண்டகாலத்துக்கு பின் வீட்டுக்கு வந்ததை கண்டு பேரன் மகிழ்ச்சியடைந்தார். தாத்தாவை ஒவ்வொரு அறையாக அழைத்து சென்று வீட்டை சுற்றிக்காட்டினான்.
தனது அறைக்கு அழைத்து சென்று விளையாட்டு பொருட்களை தாத்தாவிடம் காட்டினான். தொடர்ந்து ரங்கசாமி, நமச்சிவாயம் வீட்டிலேயே உணவருந்தினார். உணவருந்தும் போது தாத்தா ரங்கசாமியிடம் தனது பெற்றோரை பற்றி பேரன் சிவஹரி புகார் செய்தான். 2 ஆண்டாக என்னை எங்கேயும் அனுப்புவதில்லை. விளையாடுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை என தெரிவித்தான்.
அவனை தனது மடியில் வைத்து ரங்கசாமி கொஞ்சி மகிழ்ந்தார். சுமார் 45 நிமிடம் அமைச்சர் நமச்சிவாயத்தின் வீட்டில் பேரனுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி செலவழித்தார்.
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளையொட்டி அமைச்சர் நமச்சிவாயம் புதுவை முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உதவிகளை வழங்கினார்.
இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவன் மகள் வசந்தியை நமச்சிவாயம் திருமணம் செய்துள்ளார். இதனால் அமைச்சர் நமச்சிவாயம், முதல்- அமைச்சர் ரங்கசாமியின் மருமகன் ஆவார்.
14 ஆண்டுக்கு பிறகு நேற்று வில்லியனூர் மணவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.
நமச்சிவாயம், மனைவி வசந்தி, பேரன் சிவஹரி ஆகியோர் முதல்-அமைச்சரை வரவேற்று அழைத்து சென்றனர்.

தனது அறைக்கு அழைத்து சென்று விளையாட்டு பொருட்களை தாத்தாவிடம் காட்டினான். தொடர்ந்து ரங்கசாமி, நமச்சிவாயம் வீட்டிலேயே உணவருந்தினார். உணவருந்தும் போது தாத்தா ரங்கசாமியிடம் தனது பெற்றோரை பற்றி பேரன் சிவஹரி புகார் செய்தான். 2 ஆண்டாக என்னை எங்கேயும் அனுப்புவதில்லை. விளையாடுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை என தெரிவித்தான்.
அவனை தனது மடியில் வைத்து ரங்கசாமி கொஞ்சி மகிழ்ந்தார். சுமார் 45 நிமிடம் அமைச்சர் நமச்சிவாயத்தின் வீட்டில் பேரனுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி செலவழித்தார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய முதல்-அமைச்சர் ரங்கசாமியை, கார் வரை வந்து அமைச்சர் நமச்சிவாயம், அவரது மனைவி வசந்தி, பேரன் சிவஹரி வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள்... உத்தரபிரதேசத்தில் பிரியங்கா 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம்
துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு 3 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்.
அன்று புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரிய ஓளி மின் பயன்பாடு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். இதனையடுத்து, புதுவை கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள் (13-ந் தேதி) காலை புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார்.

துணை ஜனாதிபதியின் புதுவை வருகை உறுதியாகி உள்ள சூழலில் அரசு தரப்பில் முறைப்படி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.
புதுவைக்கு 3 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிறார்.
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார்.
தொடர்ந்து, புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறார். இதனையடுத்து, புதுவை கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
மறுநாள் (13-ந் தேதி) காலை புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கிறார்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஓளி மின்பயன்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார். 14-ந் தேதி புதுவையில் இருந்து புறப்படுகிறார்.

துணை ஜனாதிபதி வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... உலக அளவில் கொரோனா பரவல் மந்தம்
புதுவையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை நேற்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் விநாயகருக்கு பூக்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதே போல் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்த நாள் என்பதால் புதுவையில் பூக்களின் விலை நேற்று கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை நேற்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1500-க்கும் (நேற்று முன்தினம் விலை அடைப்புக்குறிக்குள் ரூ.600), முல்லை ரூ.1000-க்கும் (ரூ.400), ரோஜாப்பூ ரூ.180-க்கும் (ரூ.100), சாமந்தி ரூ.400-க்கும் (ரூ.100) விற்பனை செய்யப்பட்டது.

புதுச்சேரியில் விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு காவல் துறையினரின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல், சாலை சந்திப்புகளில் விநாயகர் சிலைளை வைக்கக்கூடாது. விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு காவல் துறையினரின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும்
சிலை வைக்கப்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடக்கூடாது. விநாயகர் சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்துச் செல்லலாம். ஆனால், ஊர்வலமாக செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையாம் புத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பாகூர் கொம்யூனுக்குட்பட்ட சோரியாங்குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் அந்த குடும்பத்தில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த பலர் காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சோரியாங்குப்பம் கிராமத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர்.
அப்போது 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரையாம் புத்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இரு பள்ளிகளிலும் மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அவரவர் குடும்பத்தினர் மூலமே தொற்று ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு வரும் போது குழந்தைகளுக்கும் பரவும்.
அதுபோல் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் தொற்று பரவல் ஏற்படாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.
புதுவை பாகூர் கொம்யூனுக்குட்பட்ட சோரியாங்குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் அந்த குடும்பத்தில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதே கிராமத்தை சேர்ந்த பலர் காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சோரியாங்குப்பம் கிராமத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினர்.
அப்போது 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சோரியாங்குப்பம் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இரு பள்ளிகளிலும் மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “மாணவர்கள் பள்ளிக்கு வந்ததால் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அவரவர் குடும்பத்தினர் மூலமே தொற்று ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு வரும் போது குழந்தைகளுக்கும் பரவும்.
அதுபோல் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் தொற்று பரவல் ஏற்படாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.
இந்த நிலையில் குருவி நத்தம் கிராமத்திலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கும், பேராசிரியர் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ள நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.

தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு சென்று மாணவர்கள், ஊழியர்களை வெளியேற்றினர்.
கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்து தற்காலிகமாக மூடினர். தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஊழியர்களை பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர்.

உழவர்கரையில் பணியாற்றும் சிவசாமி வில்லியனூருக்கும், திருக்கனூர் கஜேந்திரன் பாகூருக்கும், அங்கு பணியாற்றும் கிருஷ்ணானந்தம், திருக்கனூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பணி செய்து வரும் சார் பதிவாளர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வில்லியனூர் சார் பதிவாளர் உலகநாதன், புதுச்சேரி கிராமப்புற அலுவலகத்திற்கும், இங்கு பணியாற்றி வரும் மணிகண்டன், உழவர்கரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட பதிவாளர் ரமேஷ் பிறப்பித்துள்ளார்.

புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டின் பொது சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு விட்டு அதன் மூலமாக 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.
பொது சொத்துக்களை தனியார் தாரை வார்ப்பதன் மூலம் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களின் எதிர்காலமும் கேள்விகுறியாகும்.

புதுவை சட்டசபை கூட்டத்தொடர் 8 நாட்களில் முடிக்கப்பட்டு உள்ளது. சட்டசபையில் முதல்-அமைச்சரும், அமைச்சர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்புகள் காங்கிரஸ் ஆட்சியில் கோப்புகள் தயார் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டவை.
அப்போது கவர்னராக இருந்த கிரண்பேடி அரசுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் திட்டங்களை முடக்கினார். நிதி ஆதாரம் வழங்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால், இப்போதைய ஆட்சியாளர்களுக்கு எங்களை குறை கூற அருகதை இல்லை. சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த அனைத்து திட்டங்களையும் 3 மாத காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் ரேசன் கடைகளை திறக்க முடியாது. புதுவை அரசு கொள்கை எதுவுமில்லாமல் முன்னுக்கு பின் முரணான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசிடம் எவ்வளவு நிதி வந்தது. சட்டசபையில் அறிவித்த திட்டங்களை பட்ஜெட்டில் உள்ள நிதியில் வழங்க முடியுமா.? இதனை முதல்-அமைச்சர் மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா 3-ம் அலை பரவும் நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே கவர்னர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பலகட்ட போராட்டம் அறிவித்துள்ளன. அதன்படி புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

புதுவை சட்டசபை கூட்டத்தொடர் 8 நாட்களில் முடிக்கப்பட்டு உள்ளது. சட்டசபையில் முதல்-அமைச்சரும், அமைச்சர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்புகள் காங்கிரஸ் ஆட்சியில் கோப்புகள் தயார் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டவை.
அப்போது கவர்னராக இருந்த கிரண்பேடி அரசுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் திட்டங்களை முடக்கினார். நிதி ஆதாரம் வழங்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால், இப்போதைய ஆட்சியாளர்களுக்கு எங்களை குறை கூற அருகதை இல்லை. சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த அனைத்து திட்டங்களையும் 3 மாத காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் ரேசன் கடைகளை திறக்க முடியாது. புதுவை அரசு கொள்கை எதுவுமில்லாமல் முன்னுக்கு பின் முரணான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசிடம் எவ்வளவு நிதி வந்தது. சட்டசபையில் அறிவித்த திட்டங்களை பட்ஜெட்டில் உள்ள நிதியில் வழங்க முடியுமா.? இதனை முதல்-அமைச்சர் மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா 3-ம் அலை பரவும் நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே கவர்னர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...நிபா வைரஸ் நோய் பரவுவது எப்படி?
கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்க பல்வேறு இடங்கள் உள்ளதால் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வருவது வழக்கம். நேற்று வார இறுதிநாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
சுற்றுலா இடங்களான கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் பகுதியில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். தாவரவியல் பூங்கா, பாரதி பூங்காவில் சுற்றுலா பயணிகள் தங்கள் பிள்ளைகளுடன் பொழுதை கழித்தனர். தாவரவியல் பூங்காவில் உல்லாச ரெயிலில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர். நோணாங்குப்பம் படகுகுழாமில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து, பாரடைஸ் பீச்சுக்கு சென்று மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் புதுச்சேரி நகர பகுதியில் முக்கிய சந்திப்புகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை காண முடிந்தது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.
காந்தி வீதியில் நேற்று நடந்த சண்டே மார்க்கெட்டில் உள்ளூர், வெளியூர் மக்கள் அதிகளவு திரண்டு துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்களை பேரம் பேசி வாங்கிச்சென்றனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் சூழல் நிலவியது.

புதுச்சேரி இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விநாயகர் சிலைகளை நிறுவி பூஜை செய்வது, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
ஆனால் கொரோனா காரணமாக தற்போது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி விழாவை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
காலாப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் மொத்தம் 240 விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைத்ததையடுத்து சிலைகள் தயாரிக்கும் பணி மணவெளி, அரியூர், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது. வீட்டில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான சிலைகள் முதல் 10 அடிக்கு மேல் உயரம் கொண்ட பெரிய சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
இதற்கிடையே இந்து முன்னணியின் மாநில தலைவர் சனில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தொடங்கிய காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளதால் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்கங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் கவர்னர், முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடைத்துள்ளது. அனுமதி வழங்கிய கவர்னருக்கு இந்து முன்னணி சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அலுமினிய கடையில் இருந்து பணத்துடன் மாயமான ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் அலுமினியம் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரிமன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 7-ந் தேதி ஆனந்த், பிரிமன்ராஜிடம் ரூ.76 ஆயிரம் மற்றும் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து அருகில் உள்ள அலுமினிய கடையில் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அந்த பணத்துடன் பிரிமன்ராஜ் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து பெரியகடை போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிமன்ராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் அரியாங்குப்பம் வந்த பிரிமன்ராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மரத்தடி நிழலில் தரையில் மணலில் எழுதிதான் படித்ததாக புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் பள்ளி கால வாழ்க்கை குறித்து கேட்ட போது, அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் தவளக்குப்பம் அருகே உள்ள பூரணாங்குப்பம் ஆகும். நான் படிக்கும் போது அங்கு பள்ளிகள் இல்லை. இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரமுள்ள மணவெளி பள்ளியில் தான் படித்தேன். பள்ளிக்கு நடந்தே செல்வோம்.
அப்போது பள்ளியில் ஆசிரியராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். அவர் வீடு, வீடாக சென்று பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி பிடித்து பள்ளிக்கு அழைத்து வருவார்.
நான் பள்ளிக்கு செல்லாமல் இருந்தால் ஆசிரியர் சுப்பிரமணியத்திடம் எனது தாய் என்னை பிடித்து கொடுத்து விடுவார். மரத்தடி நிழலில் தரையில் மணலில் எழுதிதான் படித்தோம்.
வீடு திரும்ப இரவு நேரமாகி விடும். அப்போது ராந்தல் விளக்கு வெளிச்சத்தில் தான் வீட்டுக்கு வருவோம். பள்ளியில் ஆசிரியரிடம் பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது.
நான் மிஷன் வீதியில் உள்ள கல்வே கல்லூரியில் தான் பி.யூ.சி. படித்தேன். பழைய சைக்கிளில் தான் கல்லூரிக்கு வருவேன்.
தாகூர் கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தேன். அப்போதும் சைக்கிளில்தான் வருவேன். நான் படிக்கும் போது புதுவையில் சட்டக்கல்லூரி இல்லை. சென்னை பாரிமுனை சந்திப்பில் உள்ள சட்டக்கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தேன்.
அப்போது புதுவை மாணவர்கள் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளராக இருந்தேன். நடிகர் சிவாஜி கணேசனை அழைத்து அங்கு விழா நடத்தி உள்ளோம்.
சட்டக்கல்லூரி இயக்குனர் பேராசிரியர் பழனியப்பன் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொள்பவர். அவரை கண்டால் மாணவர்கள் மிகவும் பயப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய மந்திரி நேரில் வாழ்த்து