search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூ மார்க்கெட்
    X
    பூ மார்க்கெட்

    புதுவையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

    புதுவையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை நேற்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் விநாயகருக்கு பூக்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதே போல் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்த நாள் என்பதால் புதுவையில் பூக்களின் விலை நேற்று கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று முன்தினம் ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை நேற்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1500-க்கும் (நேற்று முன்தினம் விலை அடைப்புக்குறிக்குள் ரூ.600), முல்லை ரூ.1000-க்கும் (ரூ.400), ரோஜாப்பூ ரூ.180-க்கும் (ரூ.100), சாமந்தி ரூ.400-க்கும் (ரூ.100) விற்பனை செய்யப்பட்டது.
    Next Story
    ×