search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு குழாம்"

    • மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

    குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

    இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுற்றுலா கொள்கை 2023-யை வெளியிட்டு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை சலுகைகளை அறிவித்துள்ளார்.
    • வாட்டர் ஸ்கூட்டர், மோட்டார் படகுகள், விரைவு படகுகள், மிதி படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள் என மொத்தம் 588 படகுகள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மண்டல மேலாளர் அளவிலான ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

    இதில் முதன்மை செயலாளர் க.மணிவாசன், சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் காகர்லா உஷா மற்றும் பொது மேலாளர் கமலா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசும்போது கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை சுற்றுலா பயணிகளை அதிகம் வரும் வகையில் கவர்ந்திழுக்கும் மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சுற்றுலா கொள்கை 2023-யை வெளியிட்டு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகை சலுகைகளை அறிவித்துள்ளார்.

    முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம், வாலாங்குளம் உள்ளிட்ட 9 இடங்களில் படகு குழாம்களை சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.

    வாட்டர் ஸ்கூட்டர், மோட்டார் படகுகள், விரைவு படகுகள், மிதி படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள் என மொத்தம் 588 படகுகள் இயக்கப்படுகின்றன.

    இதில் இந்த ஆண்டு 42 லட்சத்து 23 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    2023-2024-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதத்தில் மட்டும் 27 லட்சத்து 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இவ்வாறு கா.ராமச்சந்திரன் கூறினார்.

    • விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
    • பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரியை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரி விக்கையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தூர்வாரிடவும், மழைக்கா லத்திற் குள்ளாகவே ஏரிக்கு நீர் வரும் வழித்தட பகுதி களில் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணி களை மேற்கொண்டு ஏரி யில் அதிகப்படியான நீர் நிரம்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஏரியில் பெரியவர்களுக் கான நடைபாதை அமைத் திடவும், சிறியவர்கள் விளை யாடும் வகையில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகர ணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

    மேலும், சுற்றுலாத்தள மாக உருவாக்கிடும் வகை யில், ஏரியில் படகுகுழாம் அமைப்பதற்கு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட் டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், வருவாய் அலு வலர் தெய்வீகன்.சுற்று லாத்துறை அலுவலர் ஜனார்த்தனன், பொதுப் பணித்துறை உதவி பொறி யாளர் அய்யப்பன், கோலி யனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் வினோத். மற்றும் பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் சிற்றார்-2 அணை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு
    • ஆய்வில் தளம் அமைக் கும் இடங்களை பற்றி யும் அதனுடைய தன்மை கள் பற்றியும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி துறையின் சார்பில், புதிய சுற்றுலா தளங்கள் அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் சிற்றார்-2 அணை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    சிற்றார்-2 அணையில் சுற்றுலா தொடர்பான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் சிற்றார்-2 அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதிய படகு குழாம் அமைத்தல் மற்றும் படகு குழாம் அமைக்கப்படும் இடம் அதற்கான கட்டிட வரைபடம் மேலும் படகு தளம் அமைக்கும் இடங்கள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு. ஆய்வில் தளம் அமைக் கும் இடங்களை பற்றி யும் அதனுடைய தன்மை கள் பற்றியும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் படகு குழாம்க்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு அதன் அருகி லேயே சுமார் 2.4 ஏக்கர் பூமியில் கார் பார்க்கிங் அமைக்கும் இடமும் தேர்வு செய்யப்பட்டு அதனையும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், அணையின் மற்றொரு பகுதியில் படகு தளம் அமைத்து சுற்றுலா படகில் செல்வோர்கள் இறங்குவதற்கு வசதியாக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக கூடார சுற்றுலா போன்ற அமைப்பு ஏற்ப டுத்தப்பட உள்ளது. படகு குழாம் மூலம் சுற்று லா செல்லும் சுற்று லாப் பயணிகள் அணைப்பகுதி களில் காணப்படுகின்ற தீவுகளுக்கும் சென்று திரும்பும் வகையில் படகு குழாம் அமைக்கப்படும். அவ்வாறு செல்லப்படும் தீவில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக மேற்கொள் ளப்பட இருகின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இது அனைத்தும் சூழியல் சுற்றுலா சார்ந்த வளர்ச்சிப்பணிகளாக அமையும். குறிப்பாக கூடாரம் வைத்து உணவகம் அமைப்பது போன்ற வசதிகள் காணப்படும்.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுமாறும், அணையில் பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற பூங்காவினையும் பராமரிப்பு மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிற்றார்-2 அணையில் சுமார் ரூ.3.50 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படுவதோடு. படகுகுழாம் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடையால் பேரூராட்சிக்குட்பட்ட திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    ஆய்வில் சுற்றுலா அலுவலர்கள் சீதாராமன், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×