search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது- நாராயணசாமி

    மரத்தடி நிழலில் தரையில் மணலில் எழுதிதான் படித்ததாக புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் பள்ளி கால வாழ்க்கை குறித்து கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் தவளக்குப்பம் அருகே உள்ள பூரணாங்குப்பம் ஆகும். நான் படிக்கும் போது அங்கு பள்ளிகள் இல்லை. இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரமுள்ள மணவெளி பள்ளியில் தான் படித்தேன். பள்ளிக்கு நடந்தே செல்வோம்.

    அப்போது பள்ளியில் ஆசிரியராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். அவர் வீடு, வீடாக சென்று பள்ளிக்கு வராத மாணவர்களை தேடி பிடித்து பள்ளிக்கு அழைத்து வருவார்.

    நான் பள்ளிக்கு செல்லாமல் இருந்தால் ஆசிரியர் சுப்பிரமணியத்திடம் எனது தாய் என்னை பிடித்து கொடுத்து விடுவார். மரத்தடி நிழலில் தரையில் மணலில் எழுதிதான் படித்தோம்.

    வீடு திரும்ப இரவு நேரமாகி விடும். அப்போது ராந்தல் விளக்கு வெளிச்சத்தில் தான் வீட்டுக்கு வருவோம். பள்ளியில் ஆசிரியரிடம் பிரம்படி வாங்கியதை மறக்க முடியாது.

    நான் மி‌ஷன் வீதியில் உள்ள கல்வே கல்லூரியில் தான் பி.யூ.சி. படித்தேன்.  பழைய சைக்கிளில் தான் கல்லூரிக்கு வருவேன்.

    தாகூர் கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தேன். அப்போதும் சைக்கிளில்தான் வருவேன். நான் படிக்கும் போது புதுவையில் சட்டக்கல்லூரி இல்லை. சென்னை பாரிமுனை சந்திப்பில் உள்ள சட்டக்கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தேன்.

    அப்போது புதுவை மாணவர்கள் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளராக இருந்தேன். நடிகர் சிவாஜி கணேசனை அழைத்து அங்கு விழா நடத்தி உள்ளோம்.

    சட்டக்கல்லூரி இயக்குனர் பேராசிரியர் பழனியப்பன் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொள்பவர். அவரை கண்டால் மாணவர்கள் மிகவும் பயப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×