என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகரில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்தூர், அருப்புக் கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் வெளியூர்க ளுக்கு ஏராளமானோர் அரசு பஸ்சில் வேலைக்கு சென்று வருகின்றனர். மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அரசு பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் விருதுநகர் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அலை மோதும். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் நகை, பணத்தை நைசாக திருடி செல்வது நடந்து வருகிறது.கடந்த சில மாதங்களாக இந்த சம்பவம் விருதுநகர் வழித்த டத்தில் அதிகரித்துள்ளது.

    காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு திருப்பதி நகரை சேர்ந்தவர் முத்துநல்லு. இவரது மனைவி மாரித்தாய். இவர் சம்பவத்தன்று காரியா பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் மாரித்தாய் நின்று கொண்டே பயணம் செய்தார்.

    அப்போது அவர் அருகே பர்தா அணிந்திருந்த2 பெண்கள் அடிக்கடி உரசியபடி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் நடுவழியில் இறங்கி விட்டனர். வீட்டிற்கு வந்த மாரித்தாய் தான் வைத்திருந்த பையை பார்த்த போது அதிலிருந்து 2½ பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.

    பஸ்சில் அவர் அருகில் நின்றிருந்த பர்தா அணிந்த பெண்கள் திருடியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து மாரித்தாய் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடியதாக கூறப்படும் 2 பெண்களை தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் சங்கரலிங்க புரத்தை சேர்ந்த சரோஜா (75) என்ற மூதாட்டியிடம் அரசு பஸ்சில் மர்ம பெண் 3 பவுன் நகையை அபேஸ் செய்தார்.

    இதே போல் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி நந்தினி (18) மாலையில் அரசு பஸ்சில் வீடு திரும்பும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம பெண் 1 பவுன் நகையை திருடி சென்றதாக புகார் வந்தது. இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் அரசு பஸ்சில் பயணிப்போர் நகை, பணத்தை இழந்து வருவது தொடர் கதையாக உள்ளது.

    குறிப்பாக விருது நகர்-அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், காரியாபட்டி ஆகிய வழித்தடங்களில் மர்ம கும்பல் பயணிகளை குறி வைத்து திருட்டில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. எனவே மாவட்ட போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி அரசு பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் கும்பலை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகர் அருகே கோவில் திருவிழாவில் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.
    • கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள உளுத்தி மடை ஊராட்சிக்கு உட்பட்ட பி.வாகைக்குளம் கிராமத்தில் பிறைவுடைய அய்யனார், சுந்தரவள்ளி அம்மன் கோவில் கும்பாபி ஷேகம் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது.

    48 நாட்கள் மண்டல பூஜை விழாவையொட்டி கோவில் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு அன்ன தானம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிடாய் வெட்டும் நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அன்னதான விருந்திற்காக போடப் பட்ட பந்தல் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ மள மளவென கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து அன்னதான பந்தலுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளது.
    • கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

    சிவகாசி

    தமிழக அரசின தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்ட த்தில் நடைபெற்றது.

    மாவட்டம் வாரியாக நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறையின் மாணவன் நெல்லையப்ப ராஜா மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.

    வெற்றி பெற்ற மாண வனுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.12 ஆயிரம் காசோலை மற்றும் சான்றி தழை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அருள் வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, உயிர் மருத்துவப்பொறியியல் துறைத்தலைவர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவனை பாராட்டினர்.

    • விபத்தில் சரவணனின் மனைவி சுகன்யா மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • சுற்றுலா சென்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கெங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் தனது மனைவி சுகன்யா (35), மகன்கள் நவநீப் (6), ஜெகதீஷ் (5) மற்றும் உறவினர் மகேஸ்வரி, அவரது தாயார் சீதாலட்சுமி (63) ஆகியோர் கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

    அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் அவர்கள் பயணம் செய்த கார் சாத்தூர் அருகில் உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சாலையில் வந்தது.

    அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் சரவணன் காரை நிறுத்த போராடியும் பலனளிக்கவில்லை. முடிவில் அந்த கார் அருகில் உள்ள ஓடைக்குள் புகுந்து மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணனின் மனைவி சுகன்யா மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் காரை ஓட்டிய சரவணன், உறவினர் மகேஸ்வரி குழந்தைகள் இருவர் என நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானோரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சாலை விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்று திரும்பியவர்கள் விபத்தில் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நூதன போராட்டம் நடந்தது.
    • கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. நகர் குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கிருஷ்ணன்கோவிலில் இருந்து பூவாணி, கூட்டுறவு நூற்பாலை, ராமகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள பாலங்களை விரிவுபடுத்த வேண்டும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மணல் குவியல்களை அப்புறப்படுத்த வேண்டும்,

    மதுரை-தென்காசி சாலையை பழுது பார்ப்பதற்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதை பிரதிபலிக்கும் வகையில் தலை மற்றும் கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விவசாயிகளுக்கு சிறுதானியம் வழங்கும் விழா நடந்தது.
    • சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு சீட்ஸ் நிறுவனம் நபார்டு வங்கி சார்பாக சர்வதேச சிறுதானிய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    சீட்ஸ் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜ சுரேஷ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநர் நாச்சி யார் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் அருப்புக் கோட்டை வேளாண் ஆராயச்சி மைய தொழில் நுட்ப வல்லுனர்கள் செல்வ ராணி, சிவக்குமார், ஆகியோர் சிறுதானிய பயிர் சாகுபடி குறித்து பேசினார்கள். இதற்கான ஏற்பா டுகளை சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • மல்லிகை சாகுபடி பயிற்சி நடந்தது.
    • உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அருப்புக்கோட்டை

    தமிழக அரசு 23-24-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் விருதுநகர் மதுரை திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளடக்கி மல்லிகை மண்டலமாக தரம் உயர்த்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.

    அதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மல்லிகை சாகுபடி விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரம் தொட்டியாங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கேற்றனர் அவர்களுக்கு வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே) இணை பேராசிரியர்கள் அருள், அரசு (தோட்டக்கலை) மற்றும் பரமசிவன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

    இப்பயிற்சியில் மல்லிகை சாகுபடி தொழில், கவாத்து முறைகள், பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டம் மேலாண்மை, பருவமில்லா காலங்களில் மல்லிகைப்பூ உற்பத்தி பெருக்குதல், பூச்சி, இயற்கை முறையில் மல்லிகை வளர்ப்பு பற்றியும் எடுத்துரைத்து விவசாயிகளுக்கு மல்லிகை சாகுபடியில் உள்ள சந்தேகங்களை வயல்வெளி சென்று விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாரீஸ்வரி, தோட்டக்கலைஉதவி இயக்குனர் கண்ணன், தோட்டக்கலை அலுவலர் பூ கலைவாணி, உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளைத் தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார்.

    கருப்பையா புஷ்பம், சிவயோகம், ராம சீனிவாசன், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் சி.ஐ.டி.யு. நகர கன்வீனர் வீர சதானந்தம் போன்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் சரசுவதி நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • குடும்ப அட்டைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேசன் கடைகள் திறக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
    • ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாநகர் பகுதியில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நியாய விலை கடையினை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும், 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர் மாவட்டத்தில் 6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளம்பெண், பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மூஞ்சிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவரது மகள் ஜென்சி(வயது23). இவருக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. பெற்றோர் வீட்டில் இருந்து பி.எட் படித்து வந்தார்.

    படிப்பு முடிவை டைந்ததால் கணவர் வீட்டிற்கு செல்லுமாறு ஜென்சியிடம் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் கணவர் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

    இதனால் பெற்றோர் அவரை கண்டித்தனர். இந்த நிலையில் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் ஜோதிராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் துர்காதேவி(38),பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயது மகள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துர்காதேவி வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி நாலூர் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி(37). இவரது 17 வயது மகன் ஐ.டி.ஐ. படித்து விட்டு மதுரையில் வேலை பார்த்து வருகிறான். தினமும் வேலைக்கு பஸ்சில் சென்று வருகிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தட்டனூர் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
    • கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மல்லாங்கிணறில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி பாக முக வர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாத புரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனை வரும் கலந்து கொள்ள வேண்டும்.

    வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து தி.மு.க. சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய செய லாளர்கள் காரியாபட்டி செல்லம், கண்ணன், நரிக்குடி போஸ் தேவர், கண்ணன், திருச்சுழி சந்தன பாண்டியன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சி லர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, சந்திரன், முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டி யன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேன் சந்தைப்படுத்தும் முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும் என விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • சிறப்பாக செயலாற்ற முடியும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக் கலைதுறை மூலம் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது. இதனை கலெக்டர் ஜெ யசீலன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பூச்சிகளின் முக்கியத்து வத்தை மனிதன் விவசாயம் தொடங்குவதற்கு முன்பே புரிந்து கொண்டான். நன்மை செய்யக்கூடிய பூச்சி களை விவசாயிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இன்னும் கண்டறியப்படாத பூச்சிகளால் மனிதருக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை நாம் இன்னும் பயன்படுத்திக் கொண்டால் ஒவ்வொரு விவசாயியும் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும். அதில் ஒன்றுதான் இந்த தேனி வளர்ப்பு.

    தேனின் மகத்துவத்தை சித்தா போன்ற அனைத்து மருத்துவமும் வெளிப் படுத்துகிறது. தேனீ வளர்ப்பை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யும் பட்சத்தில் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெற முடியும்.

    நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சந்தைபடுத்து வதற்கான முறைகளை அறிந்து கொண்டு செயல்பட ேவண்டும். எனவே விவ சாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தேனீ வளர்ப்பு ஆர்வலர்கள் புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    ×