என் மலர்
விருதுநகர்
- பெண்கள் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், ஓரிரு வாரங்களில் மிதிவண்டி வழங்கப்படும், ராஜ பாளையம் தொகுதியில் கடந்த வருடம் அரசு பள்ளி களில் ஆண்டுவிழா நடத்தப்பட்டது.
அதுபோல் இனிவரும் வருடங்களில் அரசே தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். தொடர்ந்து போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. நகர செயலா ளர்கள் ராம மூர்த்தி, மணிகண்டராஜா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் ஜெயபாலன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டு தலின்படியும் விருதுநகர், ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான
15-ந்தேதி கூட்டாய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958-ன்படி, சுதந்திர தினம் அன்று (ஆக.15) அன்று கடைகள், நிறுவ னங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும்.
இந்த தினத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் தொழி லாளர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று விடுமுறை தினத் திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை முரணாகவும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 50 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவகங்கள் மற்றும் 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 84 நிறுவனங்களில் கூட்டாய் வின்போது முரண்பாடு கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சுதந்திர தினத் தன்று பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனுதாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
- அதிகா ரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 77-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைத் தலைவா் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தா் முனைவர் எஸ்.நாராயணன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், என்.சி.சி. மாண வர்களின் அணிவகுப்பு மரியாதையை எற்றுக்கொண்டார். பதிவாளா்முனைவர் வே.வாசுதேவன் முன்னிலை வகித் தார்.
விழாவில் சுதந்திரதின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். என்.சி.சி. மாணவர்களுக்கு உயர் தகுதி பேட்சு களை துணைவேந்தர் அணிவித்து பேசினார். இதில் டீன்கள், துறைத் தலைவா்கள், கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவ லா்கள் கலந்து கொண்டனா். விளையாட்டுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
- பட்டாசு விற்பனையில் உள்ள தடையை நீக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமா? என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
- வைரகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், உள்பட பலர் இருந்தனர்.
சிவகாசி
சிவகாசி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் ஆய்வு செய்தார். பின்னர் மீனம் பட்டியில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாண வர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு வராமல் இருக்க வேண்டும். நாங்கு நேரியில் நடந்த சம்பவம் இனி வரும் காலத்தில் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்க கூடாது. இதற்கு பள்ளி ஆசிரியர்கள், மாண வர்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆளுநர் ரவி தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் தான். பட்டாசு தொழில் வளர்ச்சி இல்லா மல் போனது.
இந்தியா கூட்டணி அரசு அமையும் போது பட்டாசுக்கு தற்போது உள்ள பிரச்சி னைகள் அனைத்தும் சரி செய்யப்படும். இந்த வருடம் தீபாவளிக்கு டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய தற்போது உள்ள தடையை உச்சநீதிமன்றம் சென்று பா.ஜ.க. நீக்குமா? இதற்கு அண்ணாமலையிடம் பதில் உள்ளதா?.
அண்ணாமலை நடை பயணத்தின் போது விளம்பரத்துக்காக பேசி வருகிறார். அவருடன் தொண்டர்கள், பொது மக்களை விட போலீசார் தான் அதிகளவில் வருகி றார்கள். ஒரு சட்டமன்ற தொகுதியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் மட்டும் நடப்பது யாத்திரை என்பது நடிப்பின் உச்சகட்டமாக தெரிகிறது. இதற்கு அதானி யின் பணம் செலவு செய்யப் படுகிறது. நடைபயணத்துக்கு ஆகும் செலவு விபரங்களை அண்ணாமலை வெளியிட தயாரா?
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின் போது அசோகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்ன தம்பி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், பைபாஸ் வைரகுமார், மாவட்ட செய்தி தொடர் பாளர் மீனாட்சிசுந்தரம், உள்பட பலர் இருந்தனர்.
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு அமையும் என்று நவாஸ் கனி எம்.பி. கூறினார்.
- நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கூட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சையது ராஜா முகமது, நகரத் தலைவர் முகமது அபூபக்கர் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன் வரவேற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபூபக்கர் வாழ்த்து பேசினார். இதில் மாநில துணை தலைவர் நவாஸ் கனி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
சிறுபான்மை மக்களின் அரணாக தி.மு.க. அரசு உள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி உச்ச நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தனியாக ஒரு குழுவை நியமித்திருக்கிறது என்று சொன்னால் மாநில அரசு இன்றைக்கு கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மாநில காவல் துறையும் ராணுவமும், பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருந்தும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு இல்லை வரும் 2024 நாடாளு மன்ற தேர்தலில் மதசார்பற்ற அரசு அமைய இந்திய அளவில் வலுவான கூட்டணி உருவாகி இருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுது ணையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு இந்தியாவில் அமைவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட துணை அமைப்பாளர் சர்தார் நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தொழிலாளி வீட்டில் புகுந்து 8 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் சந்தானமுத்து. லாரி டிரைவர். இவரது மனைவி பொன்மணி (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சாந்தான முத்து வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை மகள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு பொன்மணியும் வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த 8 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு வந்த பொன்மணி கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில பேச்சு பயிற்சி நடந்தது.
- நிறைவு விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர் குருசாமி சிறப்புரையாற்றினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியல் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 3 நாள் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் நடந்தது. திட்ட தலைவர் சியாம்ராஜா தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது குறித்து பயிற்சி அளித்தார்.
ரோட்டரி தலைவர்கள் ராம்குமார்(சிவகாசி), சண்முகம்(விருதுநகர்) முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் வளர்மதி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். சண்முகநடராஜன் வாழ்த்துரை வழங்கினார். 3 நாட்கள் நடந்த இந்த பேச்சு பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. நிறைவு விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர் குருசாமி சிறப்புரையாற்றினார்.
- சத்யா வித்யாலயா பள்ளி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பிளாஸ்டிக் தீமைகள் குறித்து பதாகைகளை ஏந்தி மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர். பள்ளிக்குழு தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். முதல்வர் செந்தில்குமார், ஆலோசகர் பாரதி, நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை டைகர் சம்சுதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ஆப் சத்திரப்பட்டி பேண்டேஜ் சிட்டி தலைவர் பழனிசாமி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், ராஜா, கீழகுலராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
- முதல்-அமைச்சர் இந்த மருத்துவத் துறையை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரூ.25 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனை புதிய ரத்த வகை கட்டிடம், 4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.170 லட்சம் மதிப்பில் புதிய கட்டிங்கள், 6 துணை சுகாதார நிலையங்களில் ரூ.160 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் என மொத்தம் ரூ.3½ கோடி மதிப்பில் மருத்துகட்டிங்கள் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிர மணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் அவர்கள் பேசிய தாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.3½ கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப் பட்டுள்ளன. முதல்-அமைச்சர் இந்த மருத்துவத் துறையை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தில் 2,61,828 முதல் சேவை பெட்டகங்களையும், 8,28,971 தொடர் சேவை பெட்டகங் களையும் வழங்கி இத் திட்டத்தில் 100 சதவிகித இலக்கை நோக்கி மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டி ருக்கின்றது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதில் மருத்துவ கல்லூரி டீன் சங்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மறியலால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராஜபாளையம்:
தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் மகன் மலர்மன்னன் (வயது 25), சுப்பையா மகன் மகேந்திரன் (25). இதில் மலர்மன்னன் டிரைவராகவும், மகேந்திரன் கட்டிட தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மலர்மன்னன் மற்றும் மகேந்திரன் இருவரையும் ஒரு வழக்கு தொடர்பாக புகைப்படம் எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் அவர்களிடம் பேசி போலீசார் அழைத்து சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் போலீஸ் நிலையத்தில் இருந்து இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரது உறவினர்களும் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது இருவரையும் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் பிடிபட்ட இருவரையும் விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் விடுவிக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இரவு வரை அவர்கள் இருவரையும் விடுவிக்காததை கண்டித்து ராஜபாளையம் அருகே தென்காசி-விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள வேலாயுதபுரம் சோதனை சாவடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட ஆண்டிச்சாமி மற்றும் வடிவு ஆகியோர் சிறைப்பிடித்த இருவரையும் விடுவிக்க கோரி திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு வாலிபர்களையும் விடுவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- திருச்சுழி அருகே நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி-மானூர் இடையே யான 3 கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இங்கு புதிய சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து முதல்-அமைச்சரின் 2022-23 கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
அதனடிப்படையில் தற்போது நரிக்குடி - மானூர் இடையிலான சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடைய உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறி யாளர் கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த தார் சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் பிரபா, சாலை ஆய்வாளர் சுரேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்ணன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- தனியார் வீட்டில் நரிக்குடி அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
- புதிய கட்டிடம் கட் டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்க–ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவ–லகம் அருகேயுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்புறம் குழந்தைகளுக் கான அங்கன்வாடி மையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் செயல்பட்டு வந்தது. பல வரு–டங்களாக மின்வசதி–யின்றியே இயங்கியது. இங்கு 5 வயதிற்கு உட்பட்ட குழந் தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பயன–டைந்து வந்தனர்.
மேலும் குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் அங்கன்வாடி மையத்தின் சுவர்களில் படங்கள், ஓவியங்கள் மூல–மாக அங்கன்வாடி ஆசிரி–யர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தனர். இதனால் ஆரம்ப பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் கல்வி முன் னேற்றமடைந்தது.
இந்த நிலையில் கட்டிடத் தின் வகுப்பறை, மேற்கூறை மற்றும் சமையலறை உட்பட கட்டிடத்தின் பெரும்பா–லான பகுதிகள் இடிந்து அதன் காரணமாக அங்கன் வாடி மையத்திற்குள் பாம்பு–கள், விஷ பூச்சிகள் உள்ளிட் டவைகள் புகுந்து குழந்தைக–ளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அங்கன்வா–டிக்கு பெற்றோர்கள் குழந் தைகள் அனுப்ப தயக்கம் காட்டி வந்தனர். இதனால் அங்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் அங்கன் வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் வேண்டி குழந்தை–களின் பெற்றோர்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புதிய கட்டிடம் கட்ட நடவ–டிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இத–னால் தற்போது யூனியன் அலுவலகத்திற்கு பின்புற–மாக கடந்த 2 வருடங்களாக தனியார் வீட்டில் இயங்கி வருகிறது.
இங்கும் குழந்தைகளுக் கான குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வச–திகள் இல்லாததால் அங்கன் வாடிக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆசிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகி வரு–கின்றனர். மேலும் இதே நிலை நீடித்தால் குழந்தை–களின் எண்ணிக்கையும் நாளைடைவில் வெகுவாக குறைந்து விரைவில் அங்கன் வாடி மையத்திற்கு மூடுவிழா காணும் நிலை ஏற்படுமெ–னவும் குழந்தைகளின் பெற் றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட கலெக் டர் உடனடியாக பழைய கட்டிடத்தை ஆய்வு மேற் கொண்டு நரிக்குடி அங்கன் வாடி மையத்திற்கு விரை–வில் புதிய கட்டிடம் கட் டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்க–ளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






