search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு தொழில் பிரச்சினைக்கு பிரதமர் உடனடி தீர்வு காணவேண்டும்
    X

    பட்டாசு தொழில் பிரச்சினைக்கு பிரதமர் உடனடி தீர்வு காணவேண்டும்

    • பட்டாசு தொழில் பிரச்சினைக்கு பிரதமர் உடனடி தீர்வு காணவேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    சிவகாசி

    தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர் (டான்பாமா)சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் கணேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது-

    விருதுநகர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேரடியாக 3 லட்சம் தொழி லாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவினர் அமைப்பின் கீழ் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதல்படி தயாரிப்பாளர்கள் பசுமை பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்.

    தீபாவளி உள்ளிட்ட வட மாநில பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டை உச்சநீதி மன்றம் விதித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது தற்போது உலகம் முழுவதும் இந்துக்கள் பண்டியாக மட்டுமின்றி பல்வேறு மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை பட்டாசு வெடிப்பது இந்திய கலாச்சாரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை என பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் கூறியுள்ளது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் ஆர்டர்கள் கேட்டு உற்பத்தியாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கடிதங்கள் தொடர்ந்து வருகிறது.

    மத்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிக்கப்படும் என தனிநபரால் கொடுக்கப்பட்ட வழக்கு 2015 முதல் உச்சநீதிமன்றத்தில் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு பட்டாசு தொழிலுக்கு உள்ள பிரச்சினையை உடனடியாக தீர்வு காண வேண்டும். பட்டாசு ஏற்றுமதிக்கான வசதிகளையும் செய்து தர பிரதமர் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×