என் மலர்
நீங்கள் தேடியது "£8 jewellery-cash"
- தொழிலாளி வீட்டில் புகுந்து 8 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் சந்தானமுத்து. லாரி டிரைவர். இவரது மனைவி பொன்மணி (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சாந்தான முத்து வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை மகள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு பொன்மணியும் வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த 8 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு வந்த பொன்மணி கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






