கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதிகா ரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 77-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைத் தலைவா் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தா் முனைவர் எஸ்.நாராயணன், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், என்.சி.சி. மாண வர்களின் அணிவகுப்பு மரியாதையை எற்றுக்கொண்டார். பதிவாளா்முனைவர் வே.வாசுதேவன் முன்னிலை வகித் தார்.

விழாவில் சுதந்திரதின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். என்.சி.சி. மாணவர்களுக்கு உயர் தகுதி பேட்சு களை துணைவேந்தர் அணிவித்து பேசினார். இதில் டீன்கள், துறைத் தலைவா்கள், கலசலிங்கம் குரூப் கல்வி நிறுவன முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவ லா்கள் கலந்து கொண்டனா். விளையாட்டுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள், துப்புரவு, எலகட்ரிக்கல் அலுவலர்கள் மாணவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com