என் மலர்
விருதுநகர்
- கொலையில் மூளையாக அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.
- தொழிலாளி கொலை வழக்கில் அதிமுக-திமுக நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி:
சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்தன் என்கிற பார்த்திபன் (வயது 27), சுமைதூக்கும் தொழிலாளி.சிவகாசியில் கடந்த 2021-ம் ஆண்டு நவநீதகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பார்த்திபன் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கள்ளிபட்டியில் துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரவிந்தன் சிவகாசிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளை மறித்த ஒருகும்பல் அரவிந்தன், துரைப்பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த துரைப்பாண்டி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் சிவகாசி முத்துராமலிங்கநகரை சேர்ந்த நாகராஜ் மகன் அருண்பாண்டியன் (31), மோகன் மகன் பார்த்திபன் (32), கண்ணன் மகன் முத்துக்கிருஷ்ணன் (23), சந்திரன் மகன் பழனி செல்வம் (37), கந்தசேகர் மகன் பாண்டியராஜ் (19), கணேசன் மகன் மாரீஸ்வரன் (19), செல்லத்துரை மகன் மதன் (32), நேருஜிநகர் ராமர் மகன் மாரீஸ்வரன் (27), ரிசர்வ்லைன் சிலோன் காலனி மகேஸ்வரன் மகன் ஹரிகுமார் (21) மற்றும் 18 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணை நடத்தியதில் அரவிந்தன் கொலையில் முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்த விசாரணை துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவிட்டார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அரவிந்தன் கொலையில் மூளையாக அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் செயல்ட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேற்று காலை போலீசார் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்த மேலும் 4 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
விசாரணையின் முடிவில் கொலையில் தொடர்புடைய ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் , அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருமான லட்சுமிநாராயணன் (38), தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன் (35), தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ் (35), முத்துராமலிங்கம் நகர் பொன்ராஜ் (25), சவுந்தர் (25), சமத்துவபுரம் காலனி ஜோதிலிங்கம் (22), ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 10 பேரின் அலைபேசிகளை சோதனையிட்டதில், கொலை வழக்கில் 6 பேருக்கும் தொடர்புள்ளது தெரிய வந்தது. எனவே ஆறு பேரையும் கைது செய்துள்ளோம் என்றனர்.
கடந்த ஆண்டு நவநீத கிருஷ்ணன் கொலைக்கு பழிக்குபழியாக அரவிந்தன் கொலை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலாளி கொலை வழக்கில் அ.தி.மு.க.-தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் தொடங்கப்பட்டது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாலுகா பகுதியில் கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருந்தோம். இந்தாண்டு தொடர் மழையின் காரணமாக நல்ல விளைச்சலை சந்தித்து தற்போது நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் கோரிக்கை ஏற்று தற்போது நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் வரவேற்கிறோம். தற்போது கொள்முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ராஜபாளையம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
- ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவிப்பு
ராஜபாளையம்
ராஜபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (7-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பி.எஸ்.கே நகர், அழகைநகர், தெற்கு மலையடிபட்டி, சங்கரன்கோவில்முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜ.என்.டி.யு.சி.நகர், பாரதிநகர்,கே.ஆர்.நகர், சமுசிகாபுரம்,சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டைமலை,வ.உ.சி நகர்,பி.ஆர்.ஆர் நகர், பொன்னகரம்,எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம்,ராம்கோ நகர்,
பி.டி.ஆர் நகர், நத்தம்பட்டி,வரகுணராமபுரம்,அம்மன்கோவில்பட்டி, போலீஸ்காலனி,ஸ்ரீபுரம், மீனாட்சிபுரம், ஆண்டாள்புரம், வேப்பம்ப ட்டி, சங்கரபாண்டியபுரம்ம ற்றும் தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதுப்பட்டி, கோதைநாச்சியார்புரம், கொத்தன்குளம்,தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி,கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள்கோவில், விஷ்ணுநகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை ராஜபாளையம் மின்வாரிய பகிர்மானம் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
- விருதுநகர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியானான்.
- ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி புவனாதேவி (வயது 31). இவர்களுக்கு 6 வயதில் சுஜித் என்ற மகன் இருந்தான். பகல் நேரங்களில் மகனை மாடியில் உள்ள அறையில் தூங்க வைத்து விட்டு புவனாதேவி வீட்டு வேலைகளை செய்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று சுஜித்தை வீட்டின் மாடி அறையில் தூங்க வைத்து விட்டு கீழ் வீட்டில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விழித்துக் கொண்ட சுஜித் தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். இதில் சிறுவன் படுகாயமடைந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த புவனாதேவி மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்.
மகன் உடலை பார்த்து பெற்றோர்கள், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டை பாலையம்பட்டி வேணுகோபால கோவில் 2-ம் நாள் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
- வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பாலையம்பட்டி,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
திருவிழாவின் 2-ம் நாள் மண்டகப்படியான இன்று வேணுகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலாவாக சென்றார்.
மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் வேணுகோபால சுவாமியை வரவேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வேணுகோபால சுவாமியை வழியெங்கிலும் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- விருதுநகரில் பர்னிச்சர் கடையில் புகுந்து ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
விருதுநகர்
விருதுநகர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் செல்வவராஜ் (வயது 45). இவர் அேத பகுதியில் உள்ள தந்திமாடத்தெரு, நேருஜி வீதி ஆகிய பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
தந்திமாடத்தெருவில் உள்ள பர்னிச்சர் கடையில் ராமலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இந்த கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் ரூ. 45 ஆயிரத்தை வைத்து விட்டு செல்வராஜ் வெளியே சென்று விட்டார்.
இந்த நிலையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர் உடனே செல்வராஜூக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த அவர் கடையில் பொருத்தப்ப ட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பட்டப்பகலில் மர்ம நபர் கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.
இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் சோலைச்சாமி (வயது 42), சந்திரசேகரன் (70). இவர்கள் 2 பேரும் இன்று மதியம் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு புறப்பட்டனர்.
சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.வெங்கடேசபுரம் பகுதியில் வந்தபோது நாகர்கோவிலில் இருந்து ஓசூர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோலைச்சாமி, சந்திரசேகரன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த சோலைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சந்திரசேகரனை அந்த பகுதியினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கண்மாயை ஆழப்படுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது.
விருதுநகர்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரம் கட்டங்குடி ஊராட்சி செவல்கண்மாய் மற்றும் காரியாபட்டி வட்டாரம், துலுக்கன்குளம் ஊராட்சி கண்மாயினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறையும் இணைந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கண்மாய் ஆழப்படுத்தும் பணியினை கலெக்டர் மேகநகாதரெட்டி தொடங்கி வைத்தார். மேலும் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி னார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகிறது. மக்கள் சார்ந்து இருக்கும் நீர்,காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு உரிய ஆக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட முதல மைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் மண், நீர் மற்றும் மழைவளத்தை பெருக்கும் பொருட்டு விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11வட்டாரங்களில் ஒரு நாற்றாங்கால் (நர்சரி) அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு குளத்துப்பட்டி ஊராட்சி செவல்கண்மாய் அருகில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட நாற்றாங்கால் (நர்சரி)யை தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது. மேலும், இந்த நாற்றாங்கால் (நர்சரி)யில் உருவாக்கக்கூடிய கன்றுகள் அனைத்தும் இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ்அ னைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படவுள்ள ஊராட்சிகளில் சிறுபாசன கண்மாய் - 30, ஊரணி - 7 மற்றும் வரத்துக்கால்வாய்-2 என்ற எண்ணிக்கையிலும் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர் வட்டம், கோட்டநத்தம் ஊராட்சியில், இயற்கை ஆர்வலர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மியாவாக்கி முறையில் அடர்வன காடுகள் உருவாக்கும் நோக்கத்தில் மரம் நடும் பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யா ணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், செயற்பொறியாளர் சக்திமுருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்கதமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 627 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
- பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி பணி அமர்வு மையத்தின் சார்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
பணி அமர்வு மைய பொறுப்பாளர் அக்சய் ஜோசப் டிலன் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், வறுமையிலும் பிள்ளைகளை படிக்கும் வைக்கும் பெற்றோர்களை நினைவுகூர்ந்து பொருளாதார ரீதியாக மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மாணவர்களின் பொருளாதாரம் உயர்ந்தால் நமது வட்டாரமும், அவர்களது குடும்பமும் உயர்ந்த நிலையை அடையும். மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்போது கல்வி மற்றும் பொருளாதார நிலையில் சமூகம் சிறப்பான, குற்றமற்ற மாபெரும் சமுதாயமாக உருவாகும் என்றார்.
துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கல்லூரி செயலாளர்அ .பா.செல்வராசன், பல்வேறு நிறுவனங்களின் பணி நியமன ஆணைகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 627 மாணவர்களுக்கு வழங்கினார். பணி அமர்வு மையத்தின் பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப்பொறுப்பாளர்கள் வெங்கடேஷ்குமார், அக்சய் ஜோசப் டிலன் ஆகியோர் செய்திருந்தனர்.
- விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
- ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) அன்று மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் இணைந்து மாபெரும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்ச்சியில் கடன் வழங்குதல், புதிய கடன் விண்ணப்பம் பெறுதல், பிரதமரின் காப்பீடு மற்றும் பென்ஷன் திட்டத்தில் புதிதாக இணைத்தல், நிதிசார் கல்வி மற்றும் வங்கி சார்ந்த சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம் நேரடியாக தீர்த்துக்கொள்ளும் வகையில் விருதுநகரில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.30 மணி முதல் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
இதில் வேளாண்கடன், தொழில்கடன், கல்விக்கடன், வீடு மற்றும் வாகன கடன் போன்ற கடன் வேண்டுவோர் நேரடியாக பங்குபெற்று பயன்பெறலாம்.
ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்படும் சந்தேகங்களை போக்கி எளிதில் கடன்பெறவும் பயனுள்ளதாக அமையும்.
எனவே புதிய தொழில் தொடங்கவும், தொழிலை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் படித்த இளைஞர்கள் இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்,
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 6 மாத காலமாக கடுமையான நூல் விலை ஏற்றம் காரணமாக தொழில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கி வைத்துள்ள பஞ்சை கண்டறிந்து சந்தைக்கு கொண்டுவரவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக ரூ.80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுவதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
- 2 குழந்தைகளுடன் பெண் மாயம் ஆனார்.
- பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 41) லாரி டிரைவர். இவரது மனைவி சாந்தி மற்றும் 2 குழந்தைகள் திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டனர்.
அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதை தொடர்ந்து காளிராஜன் ஒத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதில் அதே பகுதியை சேர்ந்த சோலைராஜ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






