கோவில் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளல்

அருப்புக்கோட்டை பாலையம்பட்டி வேணுகோபால கோவில் 2-ம் நாள் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிம்ம வாகனத்தில் சுவாமி வலம் வந்த காட்சி.
சிம்ம வாகனத்தில் சுவாமி வலம் வந்த காட்சி.
Published on

பாலையம்பட்டி,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

திருவிழாவின் 2-ம் நாள் மண்டகப்படியான இன்று வேணுகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலாவாக சென்றார்.

மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் வேணுகோபால சுவாமியை வரவேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வேணுகோபால சுவாமியை வழியெங்கிலும் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com