மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி

விருதுநகர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியானான்.ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்
மாடியில் இருந்து தவறி விழுந்து  6 வயது சிறுவன் பலி
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி புவனாதேவி (வயது 31). இவர்களுக்கு 6 வயதில் சுஜித் என்ற மகன் இருந்தான். பகல் நேரங்களில் மகனை மாடியில் உள்ள அறையில் தூங்க வைத்து விட்டு புவனாதேவி வீட்டு வேலைகளை செய்வது வழக்கம்.

அதன்படி சம்பவத்தன்று சுஜித்தை வீட்டின் மாடி அறையில் தூங்க வைத்து விட்டு கீழ் வீட்டில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விழித்துக் கொண்ட சுஜித் தூக்க கலக்கத்தில் கீழே இறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். இதில் சிறுவன் படுகாயமடைந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த புவனாதேவி மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த சுஜித் பரிதாபமாக இறந்தான்.

மகன் உடலை பார்த்து பெற்றோர்கள், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com