என் மலர்
விருதுநகர்
- அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் செல்லும்சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ெரயில்வே பீடர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
பாலையம்பட்டி,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ெரயில்வே பீடர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சிமெண்டு சாலை முழுவதும் சேதமடைந்து கற்கள் வெளியே தெரியும் அளவுக்கு சாலை சேதமடைந்துள்ளது.
இந்தச் சாலையை தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் இந்த சாலை வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.மோசமான சாலையால் பள்ளி மாணவர்களின் சைக்கிள்களும், பொதுமக்களின் இருசக்கர வாகனங்களும் பழுதடைகின்றன. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சிவகாசி அம்மா உணவகத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
சிவகாசி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம். ஏழை-எளிய மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
அம்மா உணவகங்களில் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும்,லெமன் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்கப்படுகிறது. காலை இட்லி, பூரி, மலிவு விலையில் விற்ப்படுகிறது.
சிவகாசி மாநாகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் தினமும் மதியம் 1 மணிக்கு லெமன் சாதம், தயிர் சாதம் காலியாகி விடுகிறது. சாம்பார் சாதம் 1.30 மணியளவில் காலியாகி விடுகிறது. ஆனால் மாலை 3 மணி வரை உணவுகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது.
ஆனால் சிவகாசி மாநக ராட்சி நடத்தும் அம்மா உணவகம் 2 மணிக்கு பிறகு மூடப்பட்டு விடுவதால் உணவு சாப்பிட வரும் ஏழைகள், முதியவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
எனவே தேவையான அளவு உணவு சமைத்து தினமும் 2.30 மணி வரையிலாவது உணவு வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வருமா?.
- 2 கல்லூரி மாணவிகள்- இளம்பெண் திடீர் மாயமானார்கள்.
- சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
சிவகாசி
விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மாயமாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் ஒரே நாளில் 3 பெண்கள் மாயமானது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் மாலதி (வயது 20). இவர் சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அவர் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மாலதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் சீமா. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்த புகாரின்பே ரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுந்தரபா ண்டியன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
தாயில்பட்டி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி முத்தாலம்மன் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகள் முருக லட்சுமி (19). இவர் கோமாளிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருக லட்சுமி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயனாளிகள் 30-ந் தேதிக்குள் உறுதிமொழி சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- ஏப்ரல் 2022 மாதம் முதல் சமர்ப்பித்தவர்கள் வரதேவையில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் 2022-23-ம் ஆண்டுக்கான உயிர்சான்றினை (LIFE CERTIFICATE) அந்தந்த பகுதிகளில் வசித்து வருகின்றார்களா என்பதை உறுதி செய்ய கிராம நிர்வாக அலுவலர்களிடம் உயிருடன் உள்ளார் என்பதற்கான உறுதி மொழிச்சான்றினை பெற்று வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே ஏப்ரல் 2022 மாதம் முதல் சமர்ப்பித்தவர்கள் வரதேவையில்லை.மேலும் மாற்றுத்திறனாளிகள் இறந்திருந்தாலோ அல்லது வேறு முகவரியிலோ அல்லது வேறுமாவட்டத்திற்கோ குடிபெயர்ந்து இதுவரை தகவல் தெரிவிக்காதவர்கள் அதன் விவரத்தினை தெரிவிக்கும்படியும், மேலும் உயிர்சான்றினை சமர்ப்பிக்கும் போது அதனுடன் தனித்துவ அடையாள அட்டை(UDID), வங்கிக் கணக்கு புத்தக நகல்,ஆதார் அட்டை நகல்,குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருப்புக்கோட்டையில் ஆவின் பாலகம் உணவகமாக மாறியது.
- அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை சாலையில் ஆவின் பாலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வடை மற்றும் பூரி போன்ற உணவுகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
ஆனால் பாலகங்களில் பால் பொருட்கள் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர். இதனால் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களும் நஷ்டத்சதை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆவின் பாலகங்களை உணவகமாக மாறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- “தமிழ்ச்சோலை” புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
- பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் "தமிழ்ச்சோலை" புத்தக வெளியீட்டுவிழா பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.
இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல் பிரதியை சிறப்பு விருந்தினரான சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் தனபால் பெற்றுக் கொண்டு பேசினார். மாணவர்களிடையே கற்றல் ஈடுபாட்டை பெருக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும், சிறந்த படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே "தமிழ்ச்சோலை" இதழ் ஆகும்.
விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் வாகேசுவரி வரவேற்றார். கல்லூரியின் கல்விசார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியை சித்ராதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப் பேராசிரியர்ரமேஷ் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியைகள் முத்துமாரி,சுதந்திராதேவி, ஜோதி ஆகியோரது முன்னிலையில் தமிழ்த்துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
- நெற்பயிர்களை சேதப்படுத்தும்பன்றிகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது.
இந்த நிலையில்அய்யா சாமி என்பவரது விவசாய நிலத்தை பூபதி என்பவர் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். அப்பகுதியில் வளர்க்க ப்படும் வளர்ப்பு பன்றி கள் அடிக்கடி விவ சாய நிலத்திற்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்ப டுத்துவதாக விவசாயிகள் கவலைபடுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.
இந்த நிலையில் வயலுக்குள் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பன்றி களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ராஜபாளையம் அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இதுபற்றி சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே நத்தனேரி சாவடி தெருவை சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி ரத்தினமணி (வயது46). ரகு 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ரத்தினமணியிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். நேற்று காலை ரத்தினமணி வீட்டிற்கு சென்று அவரது கையை பிடித்து இழுத்துள்ளார்.
அவர் சத்தம் போட்டதால் முத்துக்குமார் தப்பி சென்று விட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் மீண்டும் வந்து முத்துகுமார் ரத்தினமணியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போதும் ரத்தினமணி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்து உள்ளனர்.
இதனை கண்ட முத்துக்குமார் தப்பி சென்று விட்டார். இதுபற்றி சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விதவை பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முத்துகுமாரை தேடி வருகிறார்.
- விருதுநகர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது.
- தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் 25 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை விருதுநகர், சிவகாசி, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 10-ந் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுகுடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள ஆசிலாபுரத்தை சேர்ந்தவர் முத்துசெல்வகுமார் (வயது36). இவர் தினமும் மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி சாந்தி கண்டித்துள்ளார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்து செல்வகுமார் தனது தாய்க்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு சேலையில் தூக்குப்போட்ட நிலையில் முத்து செல்வகுமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சாந்தி, தளவாய் புரம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காசிவிஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் நடைபெற்றது.
- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் நடை பெறும். திருவிழாவில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார், பிரியாவிடை தாயுடன் ரிஷப வாகனம், குதிரைவாகனம், பூதவாகனம், காமதேனு வாகனம், பூஊஞ்சல் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி காசி விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக பெண்கள் 4 ரத வீதிகளிலும் கோலமிட்டும், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத மேளதாளங்களுடன் 4 ரத வீதிகளிலும் விசுவநாதர்-விசாலாட்சி அம்மன்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் ஊராட்சி கோவிலூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் ராஜபாளையம் தொகுதியில் 2 இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.
தெற்கு வெங்காநல்லூர் மற்றும் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக நெல்கொள்முதல் நிலையம் இந்த வாரத்தில் அமைக்கப்படும்.
தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானது முதல் தமிழ்நாடு செழிப்பான மாநிலமாக திகழ்கிறது. ராஜபாளையம் தொகுதியில் 2 வெள்ளாமை பார்க்கும் அளவிற்கு கண்மாய்களிலும் குளங்களிலும் தண்ணீர் வசதி உள்ளது. இதனால் விவசாயமும் விவசாயிகளும் வளர்ந்து வருகின்றனர் என்றார்.
நிகழ்ச்சியில் அலுவலர் செந்தில்குமார், அவைத்தலைவர் மிசா நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






