என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசி அருகே உள்ள வெற்றி லையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    • இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தியாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    சிவகாசி:

    பசுமை பட்டாசு தயாரிக்க உரிய அனுமதியை நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப அய்வு கழகம் (நீரி) அமைப்பிடம் பெற வேண்டும். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை நிர்வாகங்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் அனுமதி பெறாத சில பட்டாசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற வசதியாக சிவகாசியில் நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனாராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது சிவகாசி அருகே உள்ள வெற்றி லையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தியாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த மையம் அமைக்க தேவைப்படும் நிதியில் ரூ.நான்கரை கோடியை சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையும், ரூ.நான்கரை கோடியை நீரி அமைப்பும் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் நீரி அமைப்பை சேர்ந்தவர்களும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு பேசுகையில், பசுமை பட்டாசு தயாரிக்க ரசாயண கலவை சான்றிதழ் பெறுவது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பித்து குறுகிய நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். விண்ணப்பித்தில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், அபிரூபன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்திய பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • மற்றொரு பெண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் முருகன் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி ஜெயக்கொடி (36). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு 2 பத்திரங்களை எழுதி கொடுத்து ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

    அதன் பின்னர் 2020-ம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் விஜயலட்சுமியிடம் வாங்கியுள்ளார். அதற்கு கடந்த 4 ஆண்டுகளாக ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் வட்டியாக செலுத்தி உள்ளார்.

    அதன் பின்னரும் விஜயலட்சுமி கூடுதல் வட்டி கேட்டு ஜெயக்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயக்கொடி விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தளவாய் புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது புத்தூர் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவது தெரிய வ ந்தது.

    இதனை தொடர்ந்து மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணல் அள்ளிய ஆறுமுகம், பிரவின்காந் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வெற்றிவேல், முருகன், செல்வன் ஆகிய 3 பேர் விவசாயி முருகனை தாக்கியுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சின்னையா புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாயி. இவர் தோட்டத்தில் தென்னை ஓலை பின்னும் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதை தொடர்ந்து வெற்றிவேல், முருகன், செல்வன் ஆகிய 3 பேர் விவசாயி முருகனை தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மச்சக்காரப்பட்டி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • கிணற்றில் விழுந்து மற்றும் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 34). இவரது மனைவி கிருஷ்ணம்மாள். கருப்பசாமி தினமும் மது குடித்து விட்டு வந்ததால் கிருஷ்ணம்மாள் கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து வெளியில் சென்ற கருப்பசாமி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 68). இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மகன் புஷ்பராஜ் ஆவியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவைகளை வழங்க கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிக்க கோரியும் உள்பட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் முத்து வெள்ளையப்பன் தலைமை தாங்கினார். தமிழ்செல்வி வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க துணைத் தலைவர் கணேசன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராஜ்குமார், சாலை பணியாளர் சங்கம் சார்பில் கருமலை, நூலகத் துறை சார்பில் ராஜகுரு உள்பட பலர் பேசினர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் நிறைவு உரையாற்றினார். பேரூராட்சிகள் துறை சார்பில் மணிகண்டபிரபு நன்றி கூறினார். ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • சிவகாசியில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது.

    சிவகாசி

    பசுமை பட்டாசு தயாரிக்க உரிய அனுமதியை நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப அய்வு கழகம் (நீரி) அமைப்பிடம் பெற வேண்டும். சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை நிர்வாகங்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுவந்தனர்.

    இந்த நிலையில் அனுமதி பெறாத சில பட்டாசு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற வசதியாக சிவகாசியில் நேற்று டான்பாமா திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனாராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது சிவகாசி அருகே உள்ள வெற்றி லையூரணியில் ரூ.15 கோடி செலவில் 5 ஏக்கரில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடம் மற்றும் செலவு தொகையில் ரூ.6 கோடியை பட்டாசு உற்பத்தி யாளர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த மையம் அமைக்க தேவைப்படும் நிதியில் ரூ.நான்கரை கோடியை சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறையும், ரூ.நான்கரை கோடியை நீரி அமைப்பும் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் நீரி அமைப்பை சேர்ந்தவர்களும், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் நீரி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி சாதனா ராயலு பேசுகையில், பசுமை பட்டாசு தயாரிக்க ரசாயண கலவை சான்றிதழ் பெறுவது எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் விண்ணப்பித்து குறுகிய நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இடைத்தரகர்களை அணுக வேண்டாம். விண்ணப்பித்தில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கணேசன், அபிரூபன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லெக்குசாமி, அஜித்குமாரை மறித்து சோதனையிட்டபோது 21 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது.
    • லெக்குசாமி, அஜித்குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடியை சேர்ந்த லெக்குசாமி (வயது 24) என்பவர் அடிக்கடி கஞ்சா கடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் லெக்குசாமி தனது கூட்டாளி சின்ன புளியம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவருடன் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லெக்குசாமி, அஜித்குமாரை மறித்து சோதனையிட்டபோது 21 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக அருப்புக்கோட்டையில் உள்ள லெக்குசாமியின் அரசு வங்கி கணக்கை முடக்கம் செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி லெக்குசாமியின் வங்கி கணக்கில் உள்ள ரூ. 7 லட்சத்து 32 ஆயிரத்து 708-ஐ போலீசார் முடக்கம் செய்தனர்.

    • மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
    • காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 14-ந் தேதி வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.

    மேற்கண்ட நான்கு நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது, இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்துக்கு மேற்கண்ட 4 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    • ஆண்டாள் கோவில் யானைக்கு ஷவர்- மின்விசிறி வசதியுடன் புதிய தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் செலவில் தயார் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோவிலில் ஜெயமால்யதா என்ற 19 வயதான யானை உள்ளது.இந்த யானை தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ணன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவில் யானை ஜெயமால்யதா தங்குவதற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ராம்கோ நிறுவனத்தின் சார்பில் ரூ.24 கோடியே 80 லட்சம் செலவில் புதிய தங்கமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    நல்ல காற்றோட்டமிக்க இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த தங்குமிடத்தில் யானை ஹாயாக குளிக்கும் வகையில் 12 தூவாரக்குழாய் வசதி மற்றும் பெரிய அளவிலான 2 மின்விசிறிகள் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலை யில் விரைவில் யானை தங்குமிடம் திறக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • சிலம்பு அதிவிரைவு ரெயிலை தினமும் இயக்க கோரி மனு கொடுக்கப்பட்டது.
    • ரெயில்வே உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ராம்சங்கர் புதுடெல்லியில் உள்ள இந்திய ெரயில்வே அமைச்சக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுத்த மனுவில், சிலம்பு அதிவிரைவு ரெயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக தென்காசி எம்.பி. தனுஷ்குமார் அனுப்பி உள்ள கடிதத்தில், ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் மற்றும் அருப்புக்கோட்டை வட்டார ரெயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கைக் கடிதங்களையும் இணைத்துள்ளார்.

    • சிவகாசி அருகே வேன் மோதி வாலிபர் பலி; 2 பேர் காயம் அடைந்தனர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கண்டியாபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் நிமல் (வயது 19), சுதர்சன் (24), நாகூர் (20) ஆகிய 3 பேரும் சிவகாசியில் தங்களது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் வெம்ப க்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சங்க ரன்கோவிலில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காய மடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிமல் இறந்தார்.

    சுதர்சன், நாகூர் ஆகி யோர் அரசு மருத்துமனை யில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த விபத்து குறித்து நிமல் தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் வெம்ப க்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×