என் மலர்
நீங்கள் தேடியது "Silambu train"
- சிலம்பு அதிவிரைவு ரெயிலை தினமும் இயக்க கோரி மனு கொடுக்கப்பட்டது.
- ரெயில்வே உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ராம்சங்கர் புதுடெல்லியில் உள்ள இந்திய ெரயில்வே அமைச்சக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுத்த மனுவில், சிலம்பு அதிவிரைவு ரெயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக தென்காசி எம்.பி. தனுஷ்குமார் அனுப்பி உள்ள கடிதத்தில், ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் மற்றும் அருப்புக்கோட்டை வட்டார ரெயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கைக் கடிதங்களையும் இணைத்துள்ளார்.






