search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம்
    X

    நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்.

    ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம்

    • நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் ஊராட்சி கோவிலூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் ராஜபாளையம் தொகுதியில் 2 இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.

    தெற்கு வெங்காநல்லூர் மற்றும் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக நெல்கொள்முதல் நிலையம் இந்த வாரத்தில் அமைக்கப்படும்.

    தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானது முதல் தமிழ்நாடு செழிப்பான மாநிலமாக திகழ்கிறது. ராஜபாளையம் தொகுதியில் 2 வெள்ளாமை பார்க்கும் அளவிற்கு கண்மாய்களிலும் குளங்களிலும் தண்ணீர் வசதி உள்ளது. இதனால் விவசாயமும் விவசாயிகளும் வளர்ந்து வருகின்றனர் என்றார்.

    நிகழ்ச்சியில் அலுவலர் செந்தில்குமார், அவைத்தலைவர் மிசா நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×