என் மலர்
விருதுநகர்
- சிறந்த செல்போன் செயலிகளை உருவாக்கிய 7 கல்லூரிகளின் மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
- முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சிவகாசி
மத்திய கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ.டி.சி. இன்னோவேசன் செல் இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தலைப்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப திறன்களை அறியும் இறுதிப்போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மையத்தில் 2 நாட்கள் நடந்தது.
முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டாம் நாள் ஹேக்கத்தான் போட்டியின் நிறைவு விழா நடந்தது.
பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, மத்திய கல்வி அமைச்சரகத்தின் மைய தலைவர் உத்யன் மவுரியா,
ஐ.சி.டி. அகாடமியின் மாநில தலைவர் பூர்ணபிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கல்லூரிகளுக்கு இடையேயான 30 குழுக்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 7 குழுக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறந்த டிஜிட்டல் கற்றல் செயலியை உருவாக்கிய சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கண்டென்ட் கிரியேசன் செயலியை உருவாக்கிய கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, டிஜிட்டல் கல்வி செயலியை உருவாக்கிய சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, விளையாட்டு அடிப்படையில் கற்பிப்பதற்கான செயலியை உருவாக்கிய மும்பை சங்கி பொறியியல் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு உதவும் வகையில் செயலியை உருவாக்கிய பஞ்சாப் தாப்பார் என்ஜினீயரிங் கல்லூரி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கல்வி வழிகாட்டுதல், தகவல் ஆய்வு செய்வதற்கான மென்பொருளை உருவாக்கிய டெல்லி சூரஜ்மால் தொழில்நுட்ப கல்லூரி, வாசிப்பு திறனை மேம்படுத்துவற்கு தேவைப்படும் மென்பொருளை உருவாக்கிய இந்தூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 7 கல்லூரி மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இேத போன்று ஜூனியர் ஹேக்கத்தான் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி குழு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி குழுக்களின் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் மற்றும் பேராசிரியர் இணைந்து செய்திருந்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் எச்.வசந்தகுமார் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.
- வர்த்தகப் பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா பஸ் நிலையம் முன்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவரும், மாநில வர்த்தகப் பிரிவு தலைவருமான எச். வசந்தகுமாரின் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அவரது படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வர்த்தகப் பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
நகர காங்கிரஸ் தலைவர் பட்சிராஜா வன்னியராஜ், மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் சசிநகர் முருகேசன், வட்டாரத் தலைவர்கள் பால.குருநாதன், முருகராஜ், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயக்குமார், வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் ஆறுமுகம், ஆர்.டி.ஐ.மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச் செல்வன், மாநிலச் செயலாளர் வசந்தம் சேதுராமன், முன்னாள் வட்டாரத் தலைவர்கள் அண்ணாத்துரை, ரமணன், ஐ.என்.டி.யூ.சி. தங்கமாரி, துள்ளுக்குட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- நந்தவனத்தில் பூமி பூஜை நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்
ராஜபாளையம்
புனாச்சாமியார் மடம் நந்தவனம் சாலியர் சமூகம் அறக்கட்டளை சார்பில் ராஜபாளையம்- சத்திரப்பட்டிரோட்டில் இனாம்தோப்புபட்டியில் உள்ள புனாச் சாமியார் மடம் நந்தவனத்தில் பூமி பூஜை நடந்தது.
அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தற்காலிக டிரஸ்டி ஆறுமுகபெருமாள் தலைமை தாங்கினார். செயல் தலைவர் குருபாக்கியம்,செயலாளர் வேலுசாமி, பொருளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தி வைத்தார்.
இதில் அறங்காவலர்கள் பழனிசாமி, சிவலிங்கம், மன்னன், ஆறுமுகசாமி, தங்கமணி, கருத்தஞானியார், முத்துராமலிங்கம், சோமசுந்தரம், ஞானகுரு, புதியராஜ், பொன்னுச்சாமி, மாடசாமி, ராமகிருஷ்ணன், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி,மணிகண்ட ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வைமா வித்யாலயாவில் இளம்படை தொடக்கவிழா நடந்தது.
- அருணா திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வைமா வித்யாலயாவில் தனியார் தொலைக்காட்சியின் இளம்படை தொடக்கவிழா நடந்தது. வைமா கல்வி நிறுவனங்களின் மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார்.
வைமா கல்வி நிறுவனங்களின் திருப்பதி செல்வன் முன்னிலை வகித்தார். ராஜபாளையம் ரோட்டரி சங்க செயலாளர் பார்த்தசாரதி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். 27-வது வார்டு கவுன்சிலர் சுமதி ராமமூர்த்தி, 37-வதுவார்டு கவுன்சிலர் கார்த்திக், லட்சுமி மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த சித்ரவேல் அறிமுக உரையாற்றினார்.ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி இளம்படை மாணவர்களை அறிமுகம் செய்தார். இளம் படை கேப்டன் ஹாசினி ஏற்புரை வழங்கினார்.வைமா வித்யாலயா பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி நன்றி கூறினார்.
- அரசு மருத்துவமனை ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
- இதில் அமைச்சர்-மேயர் பங்கேற்றனர்.
சிவகாசி
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழா சென்னை யில் நடைபெற்றது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் சிவகாசி அரசு மருத்துவ மனையில் உள்ள ஆய்வகத்தை தொடங்கி வைத்தார். அதனை தொ டர்ந்து சிவகாசி அரசு மருத்து வமனையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆய்வ கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவ காசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் 5 பவுன் பறிக்கப்பட்டது.
- நகையை பறித்தது கே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகேஸ்வரி (31) என தெரியவந்தது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அத்திப்பட்டி மெயின்ரோடு ஜெயராம் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 76). சம்பவத்தன்று இவரிடம் ஒரு பெண் வாடகைக்கு வீடு தொடர்பாக விசாரித்தார். அப்போது திடீரென அந்த பெண் தனலட்சுமி மீது மயக்க ஸ்பிரே அடித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் நகையை பறித்தது கே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகேஸ்வரி (31) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.
- பெட்டி கடை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் விசாரித்து தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருச்சுழி ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்டிகடைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த முருகேசனின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு சென்றனர். இதில் பெட்டிகடை, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
- 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ளார்.
சிவகாசி:
சிவகாசியில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமண வாழ்க்கை என்பது வேறு விதமாக இருந்தது. ஆனால் தற்பொழுது நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. திருமணம் முடிவு செய்யப்பட்டதும் மணமகனும், மணமகளும் தொலைபேசி மூலமாக மணி கணக்கில் பேச தொடங்கி விடுகிறார்கள். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பண்பாடும், ஒழுக்கமும் சிதைந்து கொண்டு வருகிறது. தமிழகம் மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பு வருகிறது. இன்று 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது .
தி.மு.க.விற்காக நானும் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். விதியின் விளையாட்டால் நான் தி.மு.க.விலிருந்து வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் வெளியேறவில்லை. வெளியேற்றப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.
நம்மிடையே ஜாதியின், மதத்தின் பெயராலோ சச்சரவுகள் இருக்கக்கூடாது. மதம் என்பது அவரவர் நம்பிக்கை. மதம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இருக்கக்கூடாது.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள். தமிழைக் கற்றுக் கொடுங்கள். தமிழை எழுத சொல்லி பழக்குங்கள். தற்போது தமிழகத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது மிகப்பெரிய கேடு விளைவிக்க கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் பொன்ரங்க மூப்பனார் தெருவில் செயல்பட்டு வரும் ஒரு செல்போன் கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் ராம்ஜி (வயது 24), அங்கு வேலை பார்த்த சூர்யா (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மதுரை பேரையூரை அடுத்த பெரியகடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (34) என்பது தெரியவந்தது.
- குருசுந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது.
- ஆசிரியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருசுந்தர் (வயது 41), தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி செண்பகக்கனி. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் குருசுந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்த செண்பகக்கனி 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், சிவகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பின்னர் கடந்த 2 நாட்களாக ஆசிரியர் குடும்பத்தினர் வசித்து வந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. ஆசிரியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ஆசிரியர் குருசுந்தர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றி அவரது மனைவியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பா.ஜ.க.நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலோடு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நியமனம் செய்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
சிந்தனையாளர் பிரிவு-செந்தில், பொருளாதார பிரிவு, நாகநாதன், வெளிநாடு வாழ் பிரிவு-கிரி சங்கர், பிற மொழி பிரிவு-சுப்புராஜ், மாவட்ட செயலாளர்கள் கனகவேல் ராஜ், ஆதிராஜ், தங்கேஷ்வரன், ராமலிங்கம், மதன் காமராஜன், திவ்யா, கந்தசாமி, ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் பிரபாகர், பாலு, மாவட்ட பொதுச்செயலாளர் மாயகிருஷ்ணன்.
மண்டல அணி
மகளிரணி தலைவி-அமைதி, இளைஞரணி தலைவர்-சரண்ராஜ், ஆதிதிராவிடர் அணி-பிரேம்குமார், பழங்குடியினர் அணி- ஹரிகரசுதபாண்டியன், சிறுபான்மையினர் அணி-ஜேம்ஸ், விவசாய அணி -பாபு, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி-ராம்குமார், அரசு தொடர்பு பிரிவு அணி-மாரீஸ்வரன், சமூக ஊடக பிரிவு-மணிகண்டன், வக்கீல் பிரிவு-அஜித்குமார், நகர திட்ட பிரிவு-பிரவீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு- மணிமாறன், தரவு மேலாண்மை பிரிவு-செந்தில்குமார், ஆன்மீக மேம்பாடு பிரிவு-அழகர், கூட்டுறவு பிரிவு சரஸ்வதி, தொழில்நுட்பபிரிவு-ரமேஷ்குமார், பிற மொழி பிரிவு-சுரேஷ், விருந்தோம்பல் பிரிவு-சண்முகம்.
மேற்கண்ட நிர்வாகிகளை மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலோடு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நியமனம் செய்துள்ளார்.
- ராஜபாளையத்தில் செல்போன் கடையில் கஞ்சா விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் பொன்ரங்க மூப்பனார் தெருவில் செயல்பட்டு வரும் ஒரு செல்போன் கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஜபா ளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிராம் கஞ்சா, ரூ. 1,180 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் ராம்ஜி (வயது 24), அங்கு வேலை பார்த்த சூர்யா (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ராஜபாளை யத்தை அடுத்த சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மதுரை பேரையூரை அடுத்த பெரியகடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (34) என்பது தெரியவந்தது.






