என் மலர்
உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உள்பட பலர் உள்ளனர்.
அரசு மருத்துவமனை ஆய்வகம் திறப்பு
- அரசு மருத்துவமனை ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
- இதில் அமைச்சர்-மேயர் பங்கேற்றனர்.
சிவகாசி
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழா சென்னை யில் நடைபெற்றது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் சிவகாசி அரசு மருத்துவ மனையில் உள்ள ஆய்வகத்தை தொடங்கி வைத்தார். அதனை தொ டர்ந்து சிவகாசி அரசு மருத்து வமனையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆய்வ கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவ காசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






