ராஜபாளையம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் பள்ளி ஆசிரியர் தற்கொலை

குருசுந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆசிரியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.
ராஜபாளையம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் பள்ளி ஆசிரியர் தற்கொலை
Published on

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருசுந்தர் (வயது 41), தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி செண்பகக்கனி. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் குருசுந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்த செண்பகக்கனி 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், சிவகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் பின்னர் கடந்த 2 நாட்களாக ஆசிரியர் குடும்பத்தினர் வசித்து வந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. ஆசிரியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவை திறந்து பார்த்தனர். அப்போது ஆசிரியர் குருசுந்தர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுபற்றி அவரது மனைவியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com