search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP administrators"

    • மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.
    • புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா சமூக ஊடக செயல்வீரர்கள் கூட்டம் காளப்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களுக்கு எப்படி உதவலாம், நாம் செய்யும் உதவி எப்படி அவர்களை சென்றடைகிறது. அதன்பின் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதற்கு பல விஷயங்களை படிக்க வேண்டும். பார்க்க வேண்டும், கேட்க வேண்டும். அப்போது தான் நமக்கு தேசிய, மாநில, மாவட்ட, மாநகரம் வரை அனைத்து அரசியலையும் புள்ளி விவரமாக புரிந்து கொள்ள முடியும். அதை மக்களிடம் புட்டு, புட்டு வைக்க முடியும்.

    அதற்கு தினமும் நாளிதழ்களை படிப்பதும், டி.வி.யில் செய்தியை கேட்பதையும் பழக்கமாக்கி கொள்ள வேண்டும். மொபைல் போனில் சமூக வலைதளங்களை முழுமையாக பார்த்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க.வினர் 50 ஆண்டு காலமாக மக்களிடம் சொல்லி வரும் பொய்கள், அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டி அதை அவர்கள் மனதில் இருந்து களைய வேண்டும். அப்பணியை நம் தொண்டர்களும், செயல்வீரர்களும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலோடு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நியமனம் செய்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    சிந்தனையாளர் பிரிவு-செந்தில், பொருளாதார பிரிவு, நாகநாதன், வெளிநாடு வாழ் பிரிவு-கிரி சங்கர், பிற மொழி பிரிவு-சுப்புராஜ், மாவட்ட செயலாளர்கள் கனகவேல் ராஜ், ஆதிராஜ், தங்கேஷ்வரன், ராமலிங்கம், மதன் காமராஜன், திவ்யா, கந்தசாமி, ராமச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் பிரபாகர், பாலு, மாவட்ட பொதுச்செயலாளர் மாயகிருஷ்ணன்.

    மண்டல அணி

    மகளிரணி தலைவி-அமைதி, இளைஞரணி தலைவர்-சரண்ராஜ், ஆதிதிராவிடர் அணி-பிரேம்குமார், பழங்குடியினர் அணி- ஹரிகரசுதபாண்டியன், சிறுபான்மையினர் அணி-ஜேம்ஸ், விவசாய அணி -பாபு, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி-ராம்குமார், அரசு தொடர்பு பிரிவு அணி-மாரீஸ்வரன், சமூக ஊடக பிரிவு-மணிகண்டன், வக்கீல் பிரிவு-அஜித்குமார், நகர திட்ட பிரிவு-பிரவீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு- மணிமாறன், தரவு மேலாண்மை பிரிவு-செந்தில்குமார், ஆன்மீக மேம்பாடு பிரிவு-அழகர், கூட்டுறவு பிரிவு சரஸ்வதி, தொழில்நுட்பபிரிவு-ரமேஷ்குமார், பிற மொழி பிரிவு-சுரேஷ், விருந்தோம்பல் பிரிவு-சண்முகம்.

    மேற்கண்ட நிர்வாகிகளை மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலோடு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நியமனம் செய்துள்ளார்.

    கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் நாளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடுகிறார். #PMModi #ParliamentElection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி ஆலோசனை நடத்துவதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறார். “என் வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி” என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

    அந்த வகையில், தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் நாளை (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட இருக்கிறார். மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 1,000 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    இதற்காக, அந்தந்த பாராளுமன்ற தொகுதிகளில் தனித்தனியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமண மண்டபமும், கோவை தொகுதியில், சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் அரங்கத்திலும், சேலம் தொகுதியில், அம்மாபேட்டை சிவாஜி நகரில் உள்ள வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியிலும், நாமக்கல் தொகுதியில், பொம்மக்குட்டை மேடு கவின் மஹாலிலும், நீலகிரி தொகுதியில், ஊட்டி எங்படுகா அசோசியேஷன் ஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 2 பேர் வீதம் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மோடி கட்-அவுட் அருகே நின்று செல்பி எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேச்சை, தமிழ் மொழியிலும் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    இது தொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முழுவீச்சில் தயாராகி வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏற்கனவே பொறுப்பாளர்களை நியமித்து விட்டோம். 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PMModi #ParliamentElection

    கேரளாவில் சிவகிரி மடத்தில் நடைபெறும் நாராயணகுரு பூஜையில் கலந்துகொள்ளும் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். #Amitshah #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் இன்று மண்டல பூஜை நடக்கிறது.

    சிவகிரி மடத்தில் நடக்கும் நாராயணகுரு பூஜையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலம் இன்று பிற்பகல் சிவகிரி மடத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் பூஜைகளில் பங்கேற்கிறார்.

    சிவகிரி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு இன்று மாலை நடைபெறும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் நாளை டெல்லி புறப்படுகிறார்.

    சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமித்ஷா கேரளா வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Amitshah #BJP


    ×