என் மலர்
விருதுநகர்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளைஞர் தின விழா நடந்தது.
- தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் சங்கம், கல்வி வட்டம் மற்றும் விவேகானந்த கேந்திரா ஆகியவை இணைந்து இளைஞர் தினத்தை கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றி னார்.
சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் மற்றும் பொன்மொழிகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இதில் 13 பள்ளிகளில் இருந்து 119 மாணவர்கள் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில், சிவகாசி மாணவி லட்சுமிபிரியா முதல் பரிசையும். விருதுநகர் மாணவி ஸ்ரீ கவுரி 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் சரண் சாரதி 3-ம் பரிசையும் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில் செவல்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி விக்னேஷ்வரி முதல் பரிசையும், விருதுநகர் மாணவி நேகா 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் பூமணிகண்டன் 3-ம் பரிசையும் பெற்ற னர். கணிதவியல் துறை உதவி பேராசிரியை அனுபாலா நன்றி கூறினார்.
- அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
- www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற
28-ந் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய 2 தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைகின்றன.
இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலை வாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் 28-ந் தேதி காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவச சேவையாகும்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 1000-த்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விருதுநகர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார்.
- ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி, கன்னிசேரிபுதூர், வி.முத்து லிங்காபுரம், பாவாலி, கூரைக்குண்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தம்ம நாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சம் மதிப்பில், பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு குழந்தை களுக்கு முறையாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
அதே பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய புதிய கட்டடப் பணிகளையும், கன்னிசேரிபுதூரில் ரூ.2.40 லட்சம் மதிப்பில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டுள்ளதையும், அந்த பகுதியில் ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
வி.முத்துலிங்காபுரத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பாவாலி ஊராட்சியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரணி அமைக்கப்பட்டுள்ள தையும், கூரைக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.3.15 மதிப்பில் நர்சரி கார்டன் மற்றும் கிணறு மறுசீரமைப்பு பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி, அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
விருதுநகர்
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகா் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் பாண்டியன் நகர் எம்.ஜி.ஆர். திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார்.
விருதுநகர் நகர செயலாளர் நைனார் முகமது, சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம, விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், விருதுநகர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பசாமி, ராமலட்சுமி, ராஜம்மாள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். சிலிண்டர் மானியம் தருவோம் என்று கூறினார்கள், 2 வருடமாக எதுவுமே செய்யவில்லை. பொய் சொல்லியே ஓட்டு வாங்கி விட்டனர். உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை எடுத்துக்கொண்டு ஓட்டு கேட்டு வந்தார். அந்த செங்கலின் விலை தற்போது 12 ரூபாய் உயர்ந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு செங்கல் ரூ.5 மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 12 ரூபாய்க்கு சென்று விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்த சிமெண்ட் விலை இன்றைக்கு 600 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. கம்பி விலைகள் அனைத்தும் கூடிவிட்டன. 10 லட்ச ரூபாய்க்கு வீடு கட்ட நினைத்தால் கூட அதன் செலவு தற்போது விலைவாசி உயர்வு காரணமாக 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. எல்லா விலையும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கூட ஆகாத நிலையில் எல்லா விலையும் ஏற்றி விட்டனர்.
தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க. அரசு அதிருப்தி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும். தமிழகத்தில் சரியான ஆளுநர் கிடைத்துள்ளார். ஆளுநருக்கும் தி.மு.க.வுக்கும் சரியான போட்டி நடக்கிறது. தி.மு.க.வினரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவர்கள் என்ன செய்தாலும் கடைசியாக ஆளுநரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டி உள்ளது. சட்டசபையில் ஆளுநரை கடுமையாக விமர்சித்து விட்டு கையெழுத்து வாங்க மட்டும் கவர்னர் மாளிகைக்கு ஏன் செல்கின்றனர்?
மத்திய அமைச்சர்களை விமர்சனம் செய்வது இந்திய பிரதமரை விமர்சனம் செய்வது ஆளுநரை விமர்சனம் செய்வது ஆளுநரை ஒருமையில் பேசுவது, கடைசியில் அவர்களிடமே சென்ற கையெழுத்து கேட்பது திட்டங்களுக்கு நிதி கேட்பது. எப்படி தமிழகத்திற்கு நல்லது நடக்கும். ஏதாவது பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.வினர் எதையாவது செய்கின்றனர்.
தற்போது சேதுசமுத்திர திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒன்றை கையில் எடுத்துக் கொள்கின்றனர். 2 ஏக்கர் நிலம் தருகின்றோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்தார். கடைசியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கவே இல்லை. வருகிற பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராஜபாளையம் அருகே நடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமிபூஜையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சேத்தூர் பேரூராட்சி, வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையம் அமைக்க தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
அதன்பின்னர் ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில், வார்டு 4 போலீஸ் ஸ்டேஷன் தெரு மற்றும் வார்டு 12 அய்யனார் கோவில் தெரு ஆகிய 3 பகுதியிலும் தாமிர பரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி தலைவர் பாலசுப்பிர மணியன், துணை தலைவர் காளீஸ்வரி மாரிச்செல்வம், ஒன்றியதுணை செயலாளர் குமார், பேருராட்சி செயல் அலுவலர் வெங்கட் கோபு மற்றும் கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மீண்டும் சாப்பிட தூண்டும் சாக்லெட்டும் போதைதான் என விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
- தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார்.
சிவகாசி,
சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம், பெண்கள் முன்னேற்ற அமைப்பு பகுதி -5, நுண்கலைகள் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து போதைப்பொருள் விழிப்பு ணர்வு கருத்தரங்கை நடத்தின.
கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறிய தாவது:-
போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களின் வகைகள், அவற்றின் தீமைகள், அதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் அதுவும் போதைதான். நாம் சாப்பிடும் சாக்லேட் வகைகளை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுவதும் ஒரு வகை போதைதான்.
போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தினால் சரிவர உணவு உண்ண முடியாது. மனச்சோர்வு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். பயம் ஏற்படும். உடல் மெலியும், குடல்புண், வாய்ப்புண் ஆகியவை உண்டாகும் நாளடைவில் மிகப்பெரிய மனநோயாளியாக மாற்றும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
முன்னதாக இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் பாண்டிக்குமார். வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார். முடிவில் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் சிவகணேஷ் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை தலைவர் அமுதா, பெண்கள் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபாதேவி. பகுதி-5 குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆகியோர் செய்திருத்தனர்.
- சிவகங்கையில் தொழில் வழிகாட்டும் கண்காட்சி-கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.
சிவகங்கை,
சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறுத் துறைகளைச் சார்ந்த
முதன்மை அலுவ லர்களைக் கொண்டு கருத்தரங்கமும் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவ-மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு அடித்தளமாகவும், உதவிகரமாகவும் அமையும்.
அறிவாற்றலைப் பொ றுத்தே எதிர்காலத்தில் நீங்கள் நல்ல வேலைவாய்ப்பை பெறமுடியும். குறிப்பாக அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக பேச்சாற்றால் திறமையை வளர்ப்பது முக்கியமாகும். கல்வி த்தகுதியின் அடிப்படையில் எளிதாகப் பெறும் வேலைவாய்ப்புக்களை தேர்ந்தெடுத்து அதைப் பெறு வதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் துறைகள் குறித்து அதனைப் பற்றிய தெளிவான புரிதல் முதலில் இருக்க வேண்டும்.
மேலும் அரசின் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கு ஏதுவாக TNPSC, IBPS போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்க ளுக்கென அதற்கான பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திலும், மாவட்ட மைய
நூலகத்திலும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகிலுள்ள சிவகங்கை படிப்பு வட்ட மையத்திலும் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் சிவகங்கையை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.
இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பிலும் இளைய தலைமுறையினர்கள் தொழில் பயன்பெறு வதற்கு ஏதுவாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.இதனைக் கருத்தில் கொண்டும், ஆர்வத்தின் அடிப்படையிலும் சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அ.தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
- அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
சிவகாசி,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசியில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அசன்பதுருதீன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ வர்மன், தலைமைக்கழக பேச்சாளர்கள் செல்வம், பரமக்குடி ஜமால், மான்ராஜ் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணி, விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் சிறப்பாக செயலாற்றிக்கொண்டு வருகிறார். ஜெயலலிதா காலத்துக்கு பிறகு தமிழ கத்தில் ஏழை- எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தியவர் எடப்பாடியார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டணம் உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது.
ஏழைகளை பாதிக்கின்ற எந்த செயலையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அறிவியல் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது. தற்போது பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடியார் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
அம்மா பரிசு பெட்டகம், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை இப்படி பல்வேறு அ.தி.மு.க.வின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை பாதியாக குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.
முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அ.தி.மு.க. அரசின் எல்லா திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு ரூ. 1000 தருவதாக சொன்ன தி.மு.க. இதுவரை வழங்கவில்லை. தி.மு.க. கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் தி.மு.க.வினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் தி.மு.க.வினர் உள்ளனர். எந்த நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம். மக்கள் தயாராக இருந்து அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமாகினர்.
- சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மகள் அழகு பத்மா (வயது 27). இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு கனகராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் கவி ஜெகத்ரா மகள் உள்ளார்.
இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அழகு பத்மா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு பத்மாவை தேடி வருகின்றனர்.
பட்டதாரி பெண்
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அத்தை மகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டு பிடித்து தருமாறு பெரியசாமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மகாலட்சுமி மற்றும் 5 வயது மகள் குழலியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு பேருந்தில் திரும்பி வந்துள்ளனர்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பாத்ரூம் சென்ற மகாலட்சுமி திரும்பி வரவில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜபாளை யம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (17). இவர் கடந்த 15-ம் தேதி சொக்கநாதன் புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை வேலு சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- வழக்குப்பதிவு செய்துபட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாயகண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வந்தார்.
இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 41 அறைகள் உள்ளன. இங்கு நேற்று 38 பேர் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் 8 அறைகள் இடிந்து சேதமானது. இதில் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த குமார் மகள் முனீஸ்வரி (வயது 30), அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60)ஆகிய 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் அமீர்பாளையம் முனியசாமி (28), சிவகாசி சுப்பிரமணியாபுரம் காலனி ராஜ்குமார் (38), மேல கோதைநாச்சியார்புரம் மாரிமுத்து (54), தாயில்பட்டி மேலகோதை நாச்சியார்புரம் மகேஸ்வரன் (42), அன்பின் நகரம் காலனி தெரு தங்கராஜ் (49), படந்தால் மாரியப்பன் (42), அன்பின் நகரம் நடுத்தெரு ஜெயராஜ் (70), புதுப்பாளையம் முருகன் (52), செல்லதாய் (45), மேட்டுப்பட்டி குருசாமி (60), ஆலங்குளம் ஜோதி (51), சுண்டங்குளம் முனீஸ்வரி (38), மேல கோதைநாச்சியார்புரம் கருப்பசாமி (38) உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துபட்டாசு ஆலை போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன், அவரது மனைவி ஆறுமுகத்தாய் மற்றும் ஒப்பந்ததாரர் கந்தசாமி ஆகியோர் மீது விபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலியான தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்த்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த ராஜ்குமார், மாரிமுத்து, கருப்பசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- குழந்தைகளுக்கான தேவைகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.
விருதுநகர்
குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான குற்றங்களை தடுத்து குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவதற்கும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசால் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் மூலம் நாடு முழுவதும் 727 மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகள், குறைகளுக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் முதல் கட்ட அமர்வு விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் குழந்தைகள் உரிமை மீறல் பிரச்சினை மற்றும் குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த அமர்வில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, கல்வி, மருத்துவம், மன மற்றும் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள், குழந்தை தொழிலாளர், குழந்தைத்திருமணம் மற்றும் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தைகளின் இதர உரிமை மீறல் தொடர்பான பிரச்சி னைகள், குறைபாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்த மனுவினை பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி குழந்தைகள், குழந்தை கள் இல்லங்கள், விடுதிக ளில் தங்கியுள்ள குழந்தை கள், பெற்றோர், பாதுகாவ லர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெறும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.
இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி தெரி வித்துள்ளார்.
- சேத்தூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது
- சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்,
சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா பேரூராட்சி பகுதிகளில் புகையில்லா பொங்கல் விழா நடத்திட வழிமுறைகளை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் அறிவுரைகளின்படி சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றும், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நகர்ப்புற தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முதல் பஸ் நிலையம் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பேரூராட்சி மன்றத்தலைவர் பாலசுப்பிரமணியன் செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் காளீஸ்வரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






